சால்க் – போலியோ மருந்து

அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் […]