பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாஞ்சிநாதன்

நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. தமிழ் பிறந்ததும் அங்கேதான். அகத்தியன் தொல்காப்பியன் வாழ்ந்ததும் அங்கேதான். பாரதி, வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை என எத்தனையோ முத்திரைகள் தமிழுக்காய் வந்ததும் அங்குதான் பாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றது நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு. ஆர்காடு […]

ஜாலியன் வாலாபக் படுகொலை

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

பகத்சிங்

மிக இளம்வயதிலே சுதந்திர இந்தியா பற்றி சிந்தித்து, போராடி வெறும் 23 வயதிலே தனது வாழ்க்கையை முடித்த தியாகி, நிச்சயம் நினைவுகூற தக்கவர். 1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன், அமைதியான முறையில் போராடிகொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று. சாண்டர்ஸின் கொலையில் தேடபடும்பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் […]

மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது . சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட […]

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் 72 பாளையங்களில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டியபுரம் எனும் ஊரில் […]

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா […]

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]

கில்லாடி கிளைவ் 11

கில்லாடி கிளைவ் 11 பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர் பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் […]

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1858ம் ஆண்டு இதே நாளில் நடந்தது முடிந்தது என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, […]

மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி

செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் […]