பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள்

பெரும்பாலான நாடுகளில் மதியம் வரைதான் பள்ளி, அதன் பின் மாணவர்கள் அவர்கள் போக்கில் விடபடுகின்றார்கள் மதிய உணவும் ஓய்வும் அதன் பின்னான நேரத்தில் வீட்டுபாடமும் முடித்துவிட்டு ஹாயாக மாலையில் விளையாடுகின்றார்கள் கொஞ்சமும் நெருக்குதல் இல்லை, மன உளைச்சல் இல்லை. நெருக்கடி இல்லை, இம்சைகள் இல்லை உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள் இந்திய குறிப்பாக தமிழக மாணவர்களே காலை முதல் மாலை வரை பள்ளி, அது முடிந்ததும் டியூசன் அதுவும் முடிந்ததும் வீட்டுபாடம் என பிழியபடுகின்றார்கள் இன்னும் தேர்வு நேரம் […]

கோனார் தமிழ் உரை

தமிழக பள்ளிகளில் படித்தவர்கள் அந்த பெயரை மறக்க முடியாது, தமிழை நாம் அதன் மூலமே கற்று கொண்டோம் தமிழ்மொழியின் இனிமையினை அப்படி புத்தகமாக கொடுத்து மாபெரும் தமிழ் பணியினை செய்தவர் அவர் ஆம், கோனார் தமிழ் உரையினை படிக்காமல் ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பெயில் கூட ஆகியிருக்க முடியாது, அவ்வளவு முக்கியமான புத்தகம் அது அதை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார் இந்த தாழ்த்தபட்டவன் அக்காலத்தில் படிக்க முடியாது, பார்ப்பான் விடமாட்டான், அய்யகோ அது ஒடுக்கிய காலம் […]

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

தமிழக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கில பயிற்சி அளிக்க ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன் அப்படியானால் இங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என அன்னார் ஒப்புகொள்கின்றாரா? இங்கிலாந்தில் இருந்து சரி, பிரான்ஸ் ஜெர்மனில் இருந்து எப்படி ஆங்கில ஆசிரியர் வருவார்கள்? நல்ல வேளையாக சைனா, ஜப்பான் என சொல்லவில்லை ஆங்கிலத்தை இங்கு சுத்தமாக ஆக்க போகின்றார்களாம் நல்லது இதெல்லாம் இருக்கட்டும், இப்படியே டாஸ்மாக்கிலும் பிரெஞ்ச் ஒயின், ஜெர்மன் சரக்கு,ஸ்பானிஷ் விஸ்கி எல்லாம் […]

நீட் தேர்வு போல சட்டப்படிப்புக்கும் தேர்வு வேண்டும்

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவராவதை அழித்துவிடும், இது சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் கடந்த ஆண்டு கட்சிகள் கடுமையாக குதித்தன‌ ஆனால் கொஞ்சமும் தயக்கமின்றி மாணவ சமூகம் அந்த தேர்வுக்கு அலைமோதியிருக்கின்றது, நாங்கள் எழுதுவோம் தகுதி இருந்தால் கிடைக்கட்டும் உங்களுக்கென்ன என அவர்கள் குவிந்திருக்கின்றார்கள் இந்த தேர்வில் வென்றால் குறைந்த செலவில் மருத்துவராகலாம் என்பது அவர்களின் ஆர்வத்திற்கு இன்னொரு காரணம் நீட் விவகாரத்தில் தமிழக கட்சிகளின் முகமூடி கிழிந்துவிட்டது, அவர்களை சட்டை செய்ய மாணவர் சமூகம் […]

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன?

தேர்தல் காலங்களில் கட்டிலில் கிடக்கும் கிழவிக்கு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குசாவடிக்கு தூக்கி சென்று வாக்கு வாங்குவார்கள் தொண்டர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் சளைக்காமல் ஓடுவார்கள் தலைவர்களும் ரகசிய கூட்டம் என்ற பெயரில் அவர்களை உசுப்பிவிடுவார்கள் வீடு வீடாக சென்று அவர்கள் வாக்காள முதியவர்களை தூக்கி வரும் அழகை காண்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், எவ்வளவு கருணை, எவ்வளவு கவனிப்பு? யாரும் கேட்காமல் அவர்களாக வந்து அப்படி உதவுவார்கள், வாகனம் முதல் எல்லாம் இலவசம் நீட்டுக்கு […]

தமிழக கல்வி முறை : 2

நான் தேடிய என் ஆசிரியர் அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம். முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து. பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் […]

தமிழக கல்வி முறை : 1

எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது. அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் […]