பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஸ்வரூபம் இரண்டு முறை வந்தபின்னும் காமெடி படம் இல்லை

முன்பெல்லாம் சீரியசான படங்களை கொடுத்துவிட்டு கமலஹாசன் உடனே காமெடி படத்திற்கு திரும்புவார் பல ஆண்டுகளாக அதைத்தான் செய்தார், அவரின் சீரியசான படங்கள் தோற்றால் கூட காமெடி படங்கள் அவரின் மார்கெட்டையும் நடிப்பினையும் ஏன் பொருளாதாரத்தை கூட தூக்கி நிறுத்திவிடும் கமலின் அற்புதமான காமெடி படங்கள் எல்லாம் இப்படி இடைவெளிகளில் எடுக்கபட்டவையே இப்பொழுது ஏனோ சீரியஸ் படங்களுக்கு பின் காமெடி படம் எடுப்பதை நிறுத்திவிட்டார் விஸ்வரூபம் இரண்டு முறை வந்தபின்னும் காமெடி படம் இல்லை இதுபற்றி அவரின் ரசிகர்களிடம் […]

கார்மேகம் என்ன செய்யும் பாவம்?

கேரள பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது இப்பொழுது தெரிந்தாயிற்று தோகைவிரித்து இளமயில் ஆடும்பொழுதெல்லாம் மழை வரும் என்பது பொய்யல்ல, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல‌ தலைவியின் தலைமுடியின் வடிவான அழகும் ,, அம்முகமும் தோகை விரித்தாடும் மயில் போலவே இருப்பதால் ஏற்பட்ட‌ கடும் மழையே கேரளாவில் அப்படி கொட்டியிருக்கின்றது கார்மேகம் என்ன செய்யும் பாவம்?, மயில் ஆடினால் மழைகொட்ட வேண்டியது அதன் பொறுப்பு , தலைவியினை கண்டதும் பெரு மழையாக கொட்டிவிட்டது. காவேரி பொங்கி வரும் ரகசியமும் […]

தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா

அலக்ஸாண்டர் எகிப்தை கைபற்றி தன் சாம்ராஜ்யத்தோடு இணைத்து பெரும் பேரரசை உருவாக்கிவிட்டு , தான் மறையும் பொழுது தன் ராஜ்யத்தை தன் தளபதிகளுக்கு பங்கிட்டு கொடுத்தான் எகிப்து அப்படித்தான் டாலமி எனும் கிரேக்க வம்சத்திடம் வந்தது, அந்த வம்சத்தவள்தான் கிளியோபாட்ரா. கிளியோபாட்ரா என்பது பொதுபெயர், நிறைய கிளியொபாட்ரா இருந்தாலும் வரலாற்றை மாற்றியவள் அந்த ஒரு கிளியொபாட்ராதான் அவள் அழகி , நிர்வாகி, அரசி, பன்மொழிகலந்த வித்தைக்காரி , தன் அழகை பராமரிக்கும் நுட்பம் தெரிந்த ஒப்பனை அழகி […]

வாழ்க தலைவி, அவரால் மட்டும் வாழ்க தமிழக காங்கிரஸ்

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஆலோசனை கூட்டமாக நடத்திகொண்டே இருக்கின்றது, கடும் ஆலோசனை செய்தது எப்படி என ஆலோசனை செய்வார்கள் போல‌ ஒரு முடிவும் அறிவித்தது போலவும் செய்தி இல்லை, ஆனால் கூட்டம் மட்டும் நடக்கின்றது இது தேர்தலுக்கு தயாராகும் கூட்டம் என்பது யாருக்கு தெரியாது, ஆகட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு வெற்றிடம் இருக்கின்றது கிட்டதட்ட 1960க்கு முந்தைய நிலையினை தமிழகம் பெற்றுவிட்டது திமுக தவிர குறிப்பிட்டு சொல்லும் வலுவான கட்சி இப்போது இல்லை, திமுகவிலும் […]

தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்

கோவில் அர்ச்சகரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் வந்துவிட்டார்களாம் , அது பெரும் மாற்றமாம். நல்லது ஒரு பக்கம் இது சரி என்றும் ஒரு பக்கம் தவறு என்றும் ஏகபட்ட வாதங்கள் குழப்பங்கள், இதனால் சமூக அமைதி கெடுகின்றது இதற்கெல்லாம் தீர்வு என்ன என சங்கம் வழிகாட்ட போகின்றது விரைவில் மீண்டும் அமைய இருக்கும் குஷ்பு கோவிலில் எல்லா சாதியும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது. உலகிற்கே அது வழிகாட்டும் விஷயமாக அமையும் தெய்வத்தால் ஆகாதெல்லாம் […]

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி

தலைவி ஆனந்த விகடனில் அட்டகாசமான பேட்டி கொடுத்திருக்கின்றார் மிக நிதானமான பதில்கள், தீர்க்கமான சிந்தனைகள், அரசியல் நடப்புகளை அவதானித்தல் என அவரின் பேட்டி தேர்ந்த அரசியல்வாதிக்குள்ள அனுபவத்தை சொல்கின்றது திருநாவுக்கரசுக்கு நான் ஏன் பதில் சொல்லவேண்டும் என்ற ஒற்றை வரியில் எங்கோ போய்விட்டார் தலைவி குரைக்கும் நாய்க்கு பெண் சிங்கம் ஏன் பதில் சொல்ல வேண்டும்? கலைஞரை அப்பா என அழைக்கும் தலைவி அவரை கோபாலபுரத்தில் சந்தித்ததையும் , அதாவது திமுகவில் இருந்து வெளியேறிய பின் சந்தித்ததையும் […]

லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை

நாட்டில் நடக்கும் மோதல்களும், மர்ம காட்சிகளும், காமெடிகளும் போதாதென்று இந்த லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை வேறு அம்மணி அவர் வாய்ப்பு தருவதாக என்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றினார் என கொளுத்திபோட்டது கண்ணில் படும் சினிமாகாரனை எல்லாம் “டேய் நீ அன்றைக்கு என்னை.. என அந்த அம்மணி கை நீட்டுவதால் சினிமாக்காரர்கள் எல்லொரும் மாறுவேடத்தில் திரிகின்றார்கள் இதில் லாரன்ஸ் அப்பெண்மணிக்கு நடிப்பும் நடனமும் (எது வராதோ அது) சரியாக இருந்தால் என் படத்தில் வாய்ப்பு கொடுப்பேன் என்றார் எதற்கு நடிப்பும் […]

தலைவிக்கு இன்றும் அதே 18 வயது

    “என்றைக்கும் வயது மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு…..” என அன்றே சின்னதம்பி படத்திற்கு தலைவிக்கு பாடல் வரி எழுதினார் கங்கை அமரன் அந்த வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது, தலைவி இன்றும் அதே 18 வயது போலவே இருக்கின்றார் தலைவி பற்றி அன்றே தீர்க்கதரிசனமாக எழுதிய திரையுலக நாஸ்டர்டாமஸ் கங்கை அமரனுக்கு சங்கம் விரைவில் பொற்கிழி வழங்கும்

கிகி என்றொரு டான்ஸ் சவால் பரவி வருகின்றது

https://youtu.be/C-dAuC4qWjM கிகி என்றொரு சவால் பரவி வருகின்றது, இதெல்லாம் தின்ற ரொட்டியோ ஆட்டுகறியோ செறிக்காமல் , அடுத்த வேளை பற்றி கவலை இல்லாமல் இருக்கும் ஐரோப்பிய அமெரிக்கர்களால் வந்தது கனடாவினை சேர்ந்த பாடகர் ஒரு பாடலை வெளியிட்டார், இதற்கு அமெரிக்க வடிவேலு ஒருவர் காரிலிருந்து இறங்கி ஆடினார். அப்படியே அதை காணொணியாக வெளியிட்டார் அதிலிருந்து ஆளாளுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி ஆடி ஆடி வீடியோ எடுத்து தள்ளுகின்றார்கள் இது இந்தியாவிலும் வந்துவிட்டது, பெங்களூரில் கூட பிரபலங்கள் ஆடுவதாக […]

விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி

நாயகன் படம் ஆஸ்காருக்கு சென்றபொழுது நான் ஸ்ருதியுடன் எம்ஜிஆரை காண சென்றேன், சுருதி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார் : விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி நாயகன் படம் வந்தது 1986ம் ஆண்டு அக்டோபரில், சுருதி பிறந்தது ஜனவரி 1986 அப்பொழுது சுருதி 1 வயது குழந்தை இதில் ஆஸ்காருக்கு நாயகன் சென்ற வருடம் 1988, 1987 டிசம்பர் 24லே ராமசந்திரன் காலி ஆக 1 வயது குழந்தையுடன் செத்து போன ராமசந்திரனை சந்தித்தேன், அக்குழந்தை திருஞான […]