பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

’96’ – திரைப்படம்

96 படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் 96 என்றவுடன் அந்த 11ம் வகுப்பு கணக்கு வாத்தியாரும் அவர் நிகழ்த்திய கலவரமும்தான் கண்ணுக்கு வருகின்றது எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது. அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் […]

விஸ்வரூபம் 2 : பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

இந்த கமலஹாசனில் விஸ்வரூபம் 2 எப்படி இருக்கின்றது என படம்பார்த்த நண்பர்களிடம் கேட்டால் சிலர் முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள், சிலர் படம் பார்த்த வருத்தத்தில் 2 பாட்டில் குடித்துவிட்டு கமலை திட்டிகொண்டிருக்கின்றார்கள் சிலர் சந்திரமுடி வடிவேலு கடும் அதிர்ச்சியில் சிலைபோல நின்றுகொண்டிருகின்றார்கள், என்ன கதை என கேட்டால் தெரியாமலே படம் முடிந்துவிட்டதாக சொல்லிகொள்கின்றார்கள் இன்னும் சிலர் கமல் இயக்கும் படத்திற்கு இனி செல்ல கூடாது என சத்தியமே செய்கின்றார்கள் அப்படி பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன் கொஞ்ச காலமாகவே […]

டிக் டிக் டிக்

ஜேம்ஸ் கேமருனின் டைட்டானிக்கை பார்த்துவிட்டு குளத்தில் பரிசல் கவிழ்ந்து காதலனும் காதலியும் தவிப்பதை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் டிக்.டிக்.டிக் என்றொரு படம் வந்திருக்கின்றது, ஹாலிவுட் படங்களுக்கே உரிய விண்கல் படம். ஆர்கமகெடான் முதல் கிராவிட்டி வரை பல காட்சிகளை அப்படியே சுட்டு அதனுடன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கலந்து என்னவோ எடுத்திருக்கின்றார்கள் ஹாலிவுட்டில் இப்படி ஏராள படங்கள் வந்துவிட்டதால், தமிழ்படம் தவிர எதுவும் பார்க்காதவர்களுக்கு இப்படம் வித்தியாசமாக தெரியலாம், உலக சினிமா புரிந்தால் படம் […]

மைக்கேல் மதன காம ராஜன்

மைக்கேல் மதன காமராஜன் படம் பார்க்க அமர்ந்தாயிற்று அது குஷ்பூ படம், கமலாஹாசனும் இன்னும் பலரும் நடித்திருந்தார்கள் ஆனால் மாணிக்க சிலையாக, மலைக்கோவில் தீபமாக, மல்லிகை ஊஞ்சலாக வந்த‌ குஷ்புவின் முன்னால் கமலஹாசனால் நிற்க முடியவில்லை, அவரும் 4 வேடங்களில் வந்து நின்று பார்த்த்தார், நன்றாகத்தான் நடித்திருந்தார் ஆனால் குஷ்புவின் ஒரு சிரிப்பு முன்னால் அந்த 4 வேடமும் நிற்க முடியவில்லை இந்த படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க தலைவியினை 4 வேடத்தில் நடிக்க வைத்து கமலஹாசன் […]

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான் அதாவது மாமனாருக்கும் அவர் மருமகன் தனுஷுக்கும் நெருடல் இருந்திருக்கலாம், ரஜினியினை பழிவாங்க துடித்த தனுஷ் ரஞ்சித் மூலம் அதை நிறைவேற்றி இருக்கின்றார். ஏற்கனவே விஐபி படத்தில் வில்லனுக்கு ரஜினியின் இளைய மருகமகன் பெயரை வைத்து குடும்பத்தில் புயல் வீச வைத்தவர் தனுஷ் என்பது கூடுதல் செய்தி இப்பொழுதும் ரஜினியினை ரஞ்சித்தை வைத்து , பாரிசாலனை வேலூரில் சிலர் தாக்கியதை போல் ஊமைகுத்தாக குத்தியிருக்கின்றார் என்கின்றார்கள் சம்பளம் […]

சாவித்திரி படத்தில் ஜெமினியை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது

நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசனை தவறாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு இதைத்தான் நாம் அப்பொழுதே சொன்னோம், சாவித்திரி திசைமாறி சென்றது ஜெமினியால் அல்ல, சொந்தபடமே காரணம் குடிபழக்கத்தை கூட ஜெமினி கற்றுகொடுக்கவில்லை, முதன் முதலாக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கொடுத்த விருந்தில்தான் அதை குடித்ததாக சாவித்திரியே சொன்னார் பின் அப்பழக்கம் ஒட்டிகொண்டது, குடி அப்படித்தான் தொடங்கிவிட்டால் கழுத்தில் ஏறி அமர்ந்துவிடும் குடி இன்னும் சாத்தான் சில குட்டி சாத்தான்களையும் குட்கா போல அழைத்துவரும், சாவித்திரிக்கும் அது வந்தது இதெல்லாம் […]

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்

சாவித்திரி படம் பார்த்தவர்கள் ஜெமினி கணேசனை திட்டி தீர்க்கின்றார்கள் ஜெமினியிடம் சாவித்திரி அடைக்கலமாகவே வந்தார், அவரை சுற்றி இருந்த சுயநல கூட்டம் அவரை வைத்து சம்பாதிக்க துடிக்க, உண்மையான அன்பை தேடி வந்தார் ஜெமினி சாவித்திரியிடம் எதனையும் மறைக்கவில்லை , சாவித்திரியினை ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ஜெமினியின் முதல் மனைவி ஆனால் சாவித்திரி புகழின் உச்சிக்கு செல்ல செல்ல அவரை படம் எடுக்கும் ஆசையினை ஒரு கும்பல் தூண்டிவிட்டது, ஜெமினி அதனை தடுத்தார் ஜெமினியினை மீறி சாவித்திரி […]

நெஞ்சில் ஓர் ஆலயம்

பழைய படங்களில் சில படங்கள் காவியம், அந்த தமிழும் அக்கால நடிகர்களும் கவிஞர்களும் அப்படத்தை அழியா கல்வெட்டாக ஆக்கிவிட்டார்கள் அவற்றில் ஒன்று “நெஞ்சில் ஒரு ஆலயம்” ஒரு மருத்துவமனை செட் மட்டுமே செலவு, முழு கதையும் அதற்குள்ளே நடகின்றது, ஸ்ரீதர் புது பாடத்தையே திரையுலகிற்கு சொல்லி இருகின்றார் வலுவான கதையும் நடிகர்களும் இருந்தால் போதும் என அடித்து சொன்ன படம் அது உச்சமாக கண்ணதாசன், தன் ஞானத்தில் உச்சியில் எழுதிய பாடல் , எங்கிருந்தாலும் வாழ்க என […]

சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலத்திற்கு பின் வந்த உருப்படியான சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்” இந்த உலகில் கார்பரேட்டுகள் எப்படி எல்லாம் நம்மை பைத்தியமாக்கி , அடிமைகளாக வைத்திருக்கின்றது என்பதற்கு அதைவிட நல்ல படம் இல்லை தொழிலாளரின் பலம் என்ன என்பதை அசாத்தியமாக சொன்னபடம். சோவியத் யூனியன் அல்லது காஸ்ட்ரோ இருந்தால் கூட நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள் அருமையான அர்த்தமுள்ள படம்.நல்ல அரசு என்றால் அப்படத்திற்கும் அந்த இயக்குநருக்கும் தேசிய விருது வழங்கி இருக்க வேண்டும் படம் […]

முள்ளும் மலரும்

முள்ளும் மலரும் படம் ஓடிகொண்டிருக்கின்றது மிக மிக அற்புதமான படம், படத்தில் ரஜினி அட்டகாசமாக நடித்திருந்தார, நல்ல வேளையாக அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு வந்த படம் அது இந்த படம் 1990க்கு பின்பு வந்திருந்தால் ரஜினி பட முடிவில் அந்த ஊருக்கே ஜமீன் வாரிசாக இருந்த உண்மை புரியும் அல்லது அந்த மலையினையே விலைக்கு வாங்கும் அளவு உழைத்து பணக்காரர் ஆகியிருப்பார், அந்த வின்சையும் ஊரையும் மொத்தமாக சரத்பாபுவிற்கு கொடுத்துவிட்டு இமயமலை நோக்கி நடந்திருப்பார் […]