பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓவியா காய்ச்சல் ஓயாது போலிருக்கின்றது..

நான் ஈ” படத்த்தில் வரும் பாடலான , “உன்ன கொல்லணும் , உன்ன கொல்லணும், ரசிக்க ரசிக்க துடிக்க துடிக்க உன்ன கொல்லணும்” பாடல் ஓடி கொண்டிருக்கின்றது காயத்திரி நமீதா படத்தின் முன்னால் கத்தியோடு அமர்ந்து கொண்டு, “ஓவியா நல்ல புள்ளண்ணே….பாவம்ணே..” என முணுமுணுத்து விட்டு கண்களில் ஒருவித வெறியோடு உறுமிகொண்டிருக்கின்றார் Omm Prakash ஒரு சில உயிர்களை பறிக்காமல் இந்த ஓவியா காய்ச்சல் ஓயாது போலிருக்கின்றது.. கடவுள் தன் படைப்பில் மிக உச்ச அழகு இது என […]

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) : திரை விமர்சனம்

சிம்புவின் படம் மிக மோசமான‌ இரட்டை அர்த்ததுடன் அத்து மீறி இருக்கின்றது என விமர்சனங்கள் வருகின்றன சிம்பு படம் அப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம், படத்தில் 4 சிம்பு வேறு 3 வேடங்களில் சிம்பு திரையிலும், டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் எனும் இன்னொரு சிம்பு திரைக்கு பின்னாலும் உண்டு, பின் எப்படி இருக்கும், ஒரு சிம்புவே சமாளிக்க முடியாது, இதில் 3 என்றால் எப்படி? வழக்கமான சிம்பு படம் என சொல்லிவிட்டு செல்ல வேண்டிய விஷயத்திற்கு பலர் கண்டனமும், […]

பாகியராஜின் “அம்மா வந்தாச்சு”

டிவியில் “அம்மா வந்தாச்சு” படம் ஓடிகொண்டிருக்கின்றது, பாக்யராஜ் எனும் மகா ரசனையான கலைஞன் தன் பொற்காலங்களில் எடுத்தபடம் நல்ல கதை, அதனை தனக்கே உரித்தான பாணியில் சொல்லியிருந்தார் அதாவது மறைந்துவிட்ட தன் தாயினை தேடும் குழந்தையின் கதை அது, முதலில் சொர்ர்கத்தில் அம்மா என்றுதான் படத்திற்கு பெயரிட்டதாக முன்பு பாக்யராஜே சொல்லியிருந்தார் மனிதரை எதில் பாராட்டவேண்டி இருக்கின்றது என்றால், எப்படி அவரின் ரசனையினை கவனிக்கமுடிகின்றது என்றால் இப்படித்தான் சொர்க்கத்தில் இருந்து வரும் அம்மா எவ்வளவு அழகாக இருக்கவேண்டும் […]

பாகுபலி 2 : திரை விமர்சனம்

  பாகுபலி 2 : பாடல்கள் (இசை  ஒலி வடிவம்) பாடல்களை கேட்டுக்கொண்டே விமர்சனம் படியுங்கள்  ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. என கதை கேட்டு வளர்ந்த தலைமுறை நாம், ராஜா கதைகள் என்றால் ஆர்வம் வருவதொன்றும் ஆச்சரியமல்ல.. அப்படி பாகுபலி ராஜாவின் கதையினை இரண்டாம் பாகமாக சொல்லியிருப்பதை பார்த்தாகிவிட்டது, அழகாக என சொன்னால் தவறு, அற்புதமாக சொல்லியிருக்கின்றார்கள் படத்தின் பெரும் பலம் ரம்யா கிருஷ்ணன், மனுஷி போன பிறவியில் மங்கம்மாளாக இருந்திருக்கலாம், நடை முதல் […]

“அதே கண்கள்” என்றொரு படம் வந்திருக்கின்றது …

ஷிவாடா நாயர் “அதே கண்கள்” என்றொரு படம் வந்திருக்கின்றது குறிப்பிட்டு சொல்லவேண்டிய படம், திருப்பு முனை படம் என்றெல்லாம் சொல்லமுடியாது, ஆனால் அந்த நடிகை பின்னி எடுத்திருக்கின்றார், சும்மா சொல்ல கூடாது இது நிச்சயம் முழுக்க முழுக்க அந்த நடிகை ஆக்கிரமித்திருக்கும் படம், நாயகி தன் பாத்திரத்தை மிக அட்டகாசமாக சுமந்திருக்கின்றார்.. எப்பொழுதாவது கிடைக்கும் அபூர்வ நடிகை அவர், தன்னை மிக அழகாக நிரூபித்திருக்கின்றார், இன்றைய தேதியில் இப்படி ஒரு நடிப்பு எந்த நடிகையிடமும் சாத்தியமில்லை.. இந்த […]

காற்று வெளியிடை…..

எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள் ஆனால் கலைஞரின் எழுத்துக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும், எல்லோரும் மட்டையினை தூக்கிகொண்டு வருவார்கள், ஆனால் சச்சின் வந்தால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் படங்களில் மணிரத்னம் படம் அந்த வகை அவரின் காற்றுவெளியிடை படத்தினை பார்க்க சென்றாகிவிட்டது, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியாது, மவுனராகம், ரோஜா, கொஞ்சம் ஓகே கண்மணி என கலந்து கொடுக்க முயற்சிக்கின்றார், ரோஜாவும், ஓகே கண்மணியும் கலந்தால் இந்த படம் முக்கால்வாசி தயார் படம் ராணுவ வீரனை பற்றியது, ஒரு ராணுவ […]

விக்ரம் (1986 தமிழ் திரைப்படம்) ஏன் தோற்றது?

https://youtu.be/fH4EAHou2vM பன்முக தன்மை கொண்ட எழுத்தாளன் எப்படி இருப்பான், எப்படி உலகினை நொடிநொடியாக கண்காணிப்பான், ஒவ்வொரு நொடியின் உலக நிலமைமையினையும் தன் மனதில் நிறுத்துவான் என்பதற்கு பெரும் உதாரணமான எழுத்தாளர் சுஜாதா விக்ரம் என்றொரு கமலஹாசனின் படத்தில் அவரின் பங்கு 90% இருந்தது, அப்படி ஒரு அட்டகாசமான கதை அது உலகம் ஏவுகனை யுத்தத்தை கண்டது வளைகுடா போரின்பொழுது மட்டுமெ, அதற்கு முன்பு வல்லரசுகளிடம் ஏவுகனை இருந்தாலும் அதனை பயன்படுத்தி யுத்தம் ஒன்றும் நடக்கவில்லை வளைகுடா யுத்தத்தில் […]

கன்னத்துல கிஸ்ஸுங்கோ … … மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..

https://youtu.be/4dt_jkFCq7c ஒரு பாடல் ஒலித்துகொண்டிருக்கின்றது “கன்னத்துல கிஸ்ஸுங்கோ கழுத்துல கிஸ்ஸுங்கோ வயித்துல கிஸ்ஸுங்கோ.. … ஜெஸ்ட் கொஞ்சம் மிஸ்ஸுங்கோ … … மொட்ட ஷிவாடா..கெட்ட ஷிவாடா..” பாடல் வரியிலே கெட்ட சிவா என்றபின் பாடல் இப்படித்தான் இருக்கும், படத்தின் ஆல் இன் ஆல் லாரன்ஸ் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை டாஸ்மாக்கில் சம்பாதித்து மக்களுக்கு கிரைண்டரும், மிக்ஸியும் இப்பொழுது ஸ்கூட்டியும் கொடுத்து ஏமாற்றிவிட்டால் அது அரசாங்கம் இப்படி ஒரு மாதிரியான பாடல்களை வைத்து, அதில் சம்பாதித்து அவ்வப்போது அதற்கி […]

ஆலயமணி : சிறந்தபடங்களில் ஒன்று

  டிவியில் ஆலயமணி படம் ஓடிக்கொண்டிருக்கின்றது சிவாஜிகணேசனின் மிக சிறந்தபடங்களில் ஒன்று, நடையில் கூட அசத்தியிருப்பார், மிக ஸ்டைலான பணக்காரத்தனத்தை அநாசயமாக காட்டியிருப்பார். த‌லைவன் எம்.ஆர் ராதா அவர் போக்கில் “ஏண்டா டேய்..” என‌ பின்னி எடுத்திருப்பார் கண்ணதாசனின் சுகமான, ரசனைமிக்க பாடல்கள் படத்தின் பெரும்பலம் மிக ரசித்து பார்க்ககூடிய படங்களில் ஒன்று, மிக அர்த்தமுள்ள அழகான வசனங்கள். முக்கியமாக சரோஜாதேவி , அந்நாளைய குஷ்பூ போலவே இருக்கின்றார்..  

முதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஆயிரம் திரைபடங்கள் உண்டு, அதில் குஷ்பூ நடித்த படங்கள் எல்லாம் எமக்கு மட்டும் காவியம் ஆனால் அதனை தாண்டியும் ஒரு சில படங்கள் மனதில் நிலைத்துவிடுகின்றன, அதில் முதலிடம் “முதல் மரியாதை” படத்திற்கானது நாளைக்கு ஒரு தேர் செய்யும் தச்சன் ஒரு வருடம் உழைத்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்தால் எப்படி இருக்கும் என ஒரு பாடலில் சொல்வார் ஓளவையார் அப்படி பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் தங்கள் உச்சகட்ட திறமையினை ஒரு […]