பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மனித தன்மை இல்லாதது

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டார் , அவர் உடலை இந்துமதபடி அடக்கம் செய்ய இந்துத்வா கும்பல்கள் மல்லுகட்டின என்றொரு வீடியோ காணமுடிந்தது இப்பொழுது வரும் வீடியோக்களில் அங்கிள் சைமனின் வீடியோ தவிர ஏதும் நம்ப கூடியவை அல்ல, அங்கிள் ஒருவரை முழுக்க நம்பலாம் இந்த வீடியோ சம்பவத்தின் மூல சிக்கல் எதுவென தெரியவில்லை, ஒருவேளை அவர் மதமாற்றம் செய்யபட்டிருக்கலாம் சில நாடுகளில் “நீ எந்த மதத்தையும் பின்பற்று ஆனால் உன் அடையாளம் இந்தமதம்தான் , அரசு ஆவணபடி அதுதான். […]

இது கண்டிக்கதக்கது

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்று இருந்தது, தேர்தல் வீதி மீறல் என்பதால் டிக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறுகிறது இது கண்டிக்கதக்கது, மோடி நாட்டின் பிரதமர் மன்னர் அல்ல‌ ஏதோ இது மன்னராட்சி போலவும் , ஏர் இந்தியா அவரின் குடும்ப சொத்து போலவும் டிக்கெட்டில் எல்லாம் அவர் படம் அச்சிடபட்டிருந்தது சரியல்ல‌ அதை நீக்கிவிட்டார்கள் தேர்தல் ஆணையம் என ஒன்று இல்லாவிட்டால் ராணுவத்தின் ஏகே 47 முதல் சுகோய் […]

நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது

“உலகின் முடிவில் கிழக்கிலிருந்து பெரும் ராணுவம் ஒன்று வரும், சில நதிகள் காய்ந்துவிடும் அது வழியாக அந்த மாபெரும் சேனை வரும் அந்த வலிமையான சேனை மாபெரும் யுத்தத்தை தொடுக்கும், அதை தடுப்பார் யாருமிலர்.” இப்படி சொல்வது பைபிளின் திருவெளிப்பாடு இதை முதலில் உலகம் நம்பவில்லை, கிழக்கில் இருந்து ஒரு பெரும் அரசா? வாய்ப்பே இல்லை என நம்பினார்கள் ஆனால் செங்கிஸ்கான் அந்த அச்சுறுத்தலை கொடுத்தான், என்ன காரணமோ தெரியவில்லை அவன் மேற்காசியா பக்கம் பாயாமல் ஐரோப்பாவுக்குள் […]

இதுதான் தமிழக அரசியல்

மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை, இதோ அத்வாணியினை ஒதுக்கிவிட்டார்கள் என பலர் கிளம்பிவிட்டார்கள் வரலாற்றில் இக்காட்சியினை கொண்டுவந்தது காங்கிரஸ் இந்திராவும், சஞ்சயும் அதற்கு வழிகாட்டிகள். இந்திரா என்ன மூத்தோரை மதித்தாரா? காமராஜர் முதல் கிருபாளினி வரை அவர் எப்படி மதித்தார் என்பது தெரியாதா? கொஞ்சமும் மதித்தது இல்லை அவர்களை ஒப்பிடும் பொழுது 91 வயது அத்வானிக்கு ஓய்வு கொடுத்திருப்பது கவுரவமே.. அத்வாணிக்கு சீட் கொடுக்கவில்லை “ஹேய்ய்ய்ய் பாசிச பாஜக..” என பொங்குபவர்கள் எல்லாம் க‌.அன்பழகனுக்கு ஏன் சீட் […]

அமெரிக்காவே கண்டிக்கும் அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு உடனே இதோ பார் அமெரிக்காவே கண்டிக்கும் அரசு என கிளம்பிவிட்டார்கள். நாம் அப்பொழுதே சொன்னோம், தமிழ்நாடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சில சக்திகள் நடமாடும் பகுதி. இந்தியாவினை உடைக்க அவர்களை அமெரிக்கா தூண்டிவிடும் தூபமிடும் சீனா தன் நாட்டில் செய்யாத அட்டகாசம் கிடையாது, அவர்களுடனெல்லாம் கைகுலுக்க தெரிகின்றது இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலையாளிகள் ராஜ்பக்சேயும் , சரத்பொன்சேகாவும் அமெரிக்க பிரஜைகள் ஒரு வார்த்தை கண்டிப்பு கிடையாது அட அவ்வளவு […]

இளையவன் என்று இகழ்ந்தால்

“போற்றுமின் மறவீர், சாற்றுதும் நும்மை,ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள் படு சின்னீர்க் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்பு உடைக் கராஅத்து அன்ன என்னைநுண்பல் கருமம் நினையாது இளையன் என்று இகழின், பெறல் அரிது ஆடே.” எதிரிப்டை வீரர்களே கேளுங்கள், சிறுவர்கள் விளையாடக் கலங்கும்படியான கால் அளவுள்ள நீருக்குள் யானையைக் கொன்று வீழ்த்தி இழுத்துச் செல்லும் முதலையைப் போன்ற வர் எம் தலைவன், அவன் செய்யும் பல செயல்களைக் கருத்தில் கொள்ளாமல், அவனை இளையவன் என்று இகழ்ந்தால், நீங்கள் வெற்றி பெறுவது அரிது.

சொன்னா கேளுயா

“சொன்னா கேளுயா, காங்கிரசும் நாட்டுக்கு நிறைய செஞ்சிருக்குய்யா, அதை கண்ணால கண்டவ நான் அது உனக்கும் தெரியும், பின்ன ஏன்யா அவ்வளவு பொய்யா சொல்ற..? இன்னொரு தடவை பெரிய பொய்ய சொல்லிட்டு இந்த பக்கம் வந்திராத ஆமா, பொய்யா சொல்லிட்டு நான் ஏழைதாயின் மகன்னு அழுதா யாருக்கு அவமானம்?”

வாரிசு அரசியல்

வாரிசு அரசியல் இன்றைய காலத்தில் அல்ல எந்த காலத்திலுமே தவிர்க்க முடியாதது சுருக்கமாக சொல்லிவிடலாம், அதிகாரம் எங்கெல்லாம் உண்டோ அதை காக்கும் ஆசையும் எல்லோருக்கும் உண்டு மன்னர்களுக்கு பின் அவர்கள் வாரிசுகள் வருவது அப்படித்தான் ஜனநாயகம் என சொல்லிகொண்டாலும் கட்சி அரசியலும் அதிகாரம் தக்க வைக்கும் போட்டியே, மன்னர்காலம் போல ஆயுத வெட்டு குத்து இல்லை என்றாலும் மறைமுக வெட்டு குத்துக்கள் அதிகம் வாரிசு அரசியல் வடகொரியாவில் இருந்து இலங்கையின் பண்டாரநாயகே, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் , […]

சகிக்கமுடியாததாக தெரியவில்லை

புரட்சி என்றால் என்னவென்றே தெரியாதவரை புரட்சி தலைவரென்றும், தியாகத்திற்கு அர்த்தமே தெரியாதவரை தியாக தலைவியியென்றும், ஒரு களமும் காணாதவரை தளபதி என்றும் சொல்லிகொண்டிருப்பதை விட சவுக்கிட்டார் ஒன்றும் சகிக்கமுடியாததாக தெரியவில்லை அப்பக்கமும் ஒருவன் கரும்பை கடித்துகொண்டு நானே செந்தமிழன் என்கின்றார், அவரையெல்லாம் விட்டுவிடுவார்கள்

இவர்களுக்கு யார் கொடுத்தார்?

திராவிட பெயர்களான பேரறிஞர் , கலைஞர், புரட்சி தலைவன், தலைவி, தியாக தீபம் போன்ற பெயர்களை பற்றி சொன்னால் அதெல்லாம் அடுத்தவன் கொடுத்ததாம்? மகாத்மா, நேதாஜி, மூதறிஞர், கர்மவீரர் என்ற பட்டங்கள்தான் மக்களால் வழங்கபட்டது இவர்களுக்கு யார் கொடுத்தார்? மூதறிஞர் ராஜாஜி என அவர் அழைக்கபட்டால் இவர்கள் பேரறிஞர் என அண்ணாவினை அழைத்து கொண்டார்கள், இவர்கள் அழைக்காமல் ஐ.நா சபையா அழைத்தது? தளபதி என பாகிஸ்தான் அரசா பட்டம் கொடுத்தது? புரட்சி நடிகன் என அவரை திமுகவினரே […]