பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனியாவது தேசம் விழித்து கொள்ளட்டும்

ராஜிவ் கொலை மர்மத்தை உடைக்க போகின்றார், முன்னாள் புலி ரவி புத்தகம் வருகின்றது என்றெல்லாம் படம் காட்டினார்கள் அவர் யாரென ராஜிவ் கொலைவழக்கு விசாரணையில் மிக முக்கிய அதிகாரியான Jebamani Mohanrajசொல்கின்றார் இப்படியாக‌ “இந்த ரவி யாரென பார்த்தால் தமிழ்தேசிய மீட்புபடை தலைவர் என சொல்லிகொண்டு, ஈழம் சென்று 1990களில் பிரபாகரனை பார்த்து வந்திருக்கின்றார் புலிகளின் பணம் அவருக்கு தங்ககட்டி உட்பட பல வழிகளில் கொட்டியிருக்கின்றது, பின் எல்லா வேலைகளையும் பார்த்திருக்கின்றார், சிவராசன் சிக்கும்பொழுது சிக்கியிருக்கின்றார் சிவராசனை அவர்தான் […]

5.75 கிலோ தெய்வ தங்கச்சிலையில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லையாம்…

காஞ்சிபுரம் கோவில்களின் நகரம் என்பார்கள், அப்படி காஞ்சி ஏகாம்பர நாதர் ஆலயத்தில் சாமி சிலையினை தங்கத்தில் செய்ய முடிவெடுத்தார்களாம் சாமி சோமஸ்கந்தர் சிலை 5.75 கிலோ தங்கத்தில் செய்ய முடிவெடுத்து பணமும் கொடுத்தாயிற்று, சிலையும் தயாரானது பிரதிருஷ்டையும் முடிந்திருக்கின்றது அதன் பின் வெடித்திருக்கின்றது சர்ச்சை, அதில் துளியும் தங்கமே இல்லையாம் வேறு எதனிலோ செய்து ஏமாற்றி இருக்கின்றார்கள், விஷயம் பெரிதாகி சிற்பி அவரின் அடிபொடிகள் மேல் மட்டம் என எல்லாம் கைதாகிவிட்டது ஆதாரத்திற்கு சிலையினையும் கொண்டு செல்ல […]

குமரி வள்ளுவர் சிலை வயது இன்றோடு 18…

கன்னியாகுமரி கடற்கரை என்பது கடலில் மூழ்கிய கபாடபுரத்தின் எச்சம், முதல் இரண்டு தமிழ்சங்கம் அங்குதான் இருந்ததாக வரலாறு சொல்கின்றது அந்த கன்னியாகுமரியில் தமிழரின் அடையாளம் ஏதும் உண்டா என்றால் இல்லை, காந்திக்கொரு மண்டபம் கட்டினார்கள், அப்படியே விவேகானந்தருக்கொரு மண்டபம் கட்டினார்கள் உண்மையில் விவேகானந்தருக்கு தமிழகத்தில் சிறப்பான கட்டடம் அமைந்திருக்க வேண்டியது சென்னையிலும் அவர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி கால்பதித்த பாம்பன் பக்கமுமே ஆகும் ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கன்னியாகுமரியிலே அவர்கள் குறியாக இருந்தனர், அதில் சிக்கலும் […]

முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி….

முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி உடனே விவாகரத்து வழங்கும் விஷயம் அல்ல. அதற்கும் கால இடைவெளி உண்டு மூன்று தலாக்குகளுக்கு இடையில் இஸ்லாமிய முறைபடி சில மாத இடைவெளிகள் வேண்டும், அப்பெண் கருவுற்றாளா? அதன் எதிர்காலம் என்ன? இவர்கள் இந்த இடைவெளியில் இணைய வாய்ப்பு உள்ளதா என பல விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டும் இன்றைய இந்திய நீதிமன்றங்களும் இதனைத்தான் சொல்கின்றன, கேட்டவுடன் விவாகரத்து யாருக்கும் கிடைப்பதில்லை கிட்டதட்ட 1 வருடம் இழுத்தடித்து இனி வாய்ப்பே இல்லை […]

குல்பூஷன் விவகாரத்தில் நல்ல முடிவு வர பிரார்த்திப்போம்

ஒரு உருக்கமான செய்தி சுற்றி வருவதை கவனித்திருப்பீர்கள், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷனை சந்திக்க அவர் தாய்க்கும் மனைவிக்கும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருக்கின்றது இந்த உலகிலே மோசமான, அறவே பாதுகாப்பில்லா அரசு தொழில் உண்டென்றால் உளவுதுறை. ஆனால் அது இல்லை என்றால் பாதுகாப்பு இல்லை என்றால் வள்ளுவரே சொல்லியிருக்கின்றார் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் யார் உண்மையான உளவாளி, யார் தவறாக கைதுசெய்யபட்டார் என சொல்ல முடியாது. சிக்கும் வரை சிக்கல் இல்லை சிக்கிவிட்டால் அவரை காப்பாற்ற […]

பெரும் துறைமுகம் கன்னியாகுமரி மாவட்டத்தில்…

கொழும்பு துறைமுகத்திற்கு நிகராக பெரும் துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டம் இணையத்தில் தொடங்குகின்றது மத்திய அரசு இதனை எதிர்த்து கிளம்பிவிட்டார்கள், அய்யகோ இது வாழ்வாதார பிரச்சினை, இது எங்களை அழித்துவிடும் என ஒப்பாரி குரல் தொடங்குகின்றது இப்படி எல்லாவற்றிலும் அழுதுகொண்டிருந்தால் எங்கிருந்து திட்டங்கள் வரும்? எங்கிருந்து வளர்வார்கள்? சென்னை வளர்கின்றது, மும்பை வளர்கின்றது என ஒப்பாரி வைக்க வேண்டியது, சரி உங்களையும் வளர்த்துவிடுவோம் என்றால் அய்யோ என் வாழ்வாதாரம் என்னாகும் என குப்புறபடுத்து அடம்பிடிக்க வேண்டியது எம்மாதிரி மனநிலை […]

தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவம் நடந்து 53 ஆண்டுகள் ஆகின்றன

சுனாமி எப்படி இருக்கும் என நமக்கு 2004 வரை தெரியாது, தெரிந்த பின்பு பட்ட கலக்கம் வாழ்நாள் வரை தீராது அப்படித்தான் புயல் என்பது எவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தும் என்பது தனுஷ்கோடி அழிவில்தான் தமிழகத்திற்கு புரிந்தது. ஒரு ஊரே புயலில் அழிந்த கோர சம்பவம் அது. ஆறா துயரம் அது அது பழமை வாய்ந்த ஊர், ராமர் காலடிபட்ட இடமாகவும் இருந்தது. வெள்ளையன் அந்த தனுஷ்கோடி வரை ரயில் இயக்கினான், அங்கிருந்துதான் இலங்கையின் தலைமன்னார் வரை கப்பல்கள் […]

கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது?

கச்சதீவினை இந்தியா ஏன் கொடுத்தது என பலர் பொங்குகின்றார்கள், வழக்கமாக பொங்குபவர் யாரென்றால் சீமான் கோஷ்டி. மற்றபடி அதிமுக திமுக இரண்டும் மாறி மாறி குற்றம் சொல்லும் ஆனால் டெல்லியிடம் மண்டியிட்டு நின்றுகொள்ளும் உண்மையில் கச்சதீவு விவகாரத்தில் என்ன நடந்தது? கச்சம் என்றால் ஆமை, ஆமைகள் மட்டும் ஒதுங்கும் தீவு அது, மனிதர்கள் வாழமுடியா தீவு. இலங்கை மற்றும் தமிழக மீணவர்கள் வலைகளை உலர்த்தி இளைப்பாறும் இடம் அது. மீணவர்களுக்கு காவலான புனித அந்தோணியார் ஆலயம் 100 […]

இந்தியா : வடக்கு தெற்கு…

காவல்துறை அதிகாரி சுட்டுகொல்லபட்டிருக்கின்றார், நிச்சயம் தமிழக காவல்துறை கொதித்துகொண்டிருக்கும் . அது அமைதியாக விட்டுவிடாது. அதன் கோபங்களை எங்கு காட்டவேண்டுமோ அங்கு காட்டி தமிழக போலீஸ் என்றால் என்ன? என நிச்சயம் நிரூபிக்கும் கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தமிழகத்தில் வேலை செய்கின்றதாக சொல்கின்றது ஆய்வு என்னதான் ஊழலும் சில அட்டகாசங்களும் மிக்க மாநிலமாக தமிழகம் இருந்தாலும் அங்கும் வாழ வழியிருக்கின்றது, பெரும் சிக்கல் என ஏதுமில்லை வெள்ளையன் போட்டுவைத்த அஸ்திவாரம் அது, காமராஜர் அதற்கு […]