பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள். இரண்டு ஆண்டுகளாக தோண்டினார்கள், அதில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுசெய்ததில் அது கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தபின் தோண்டுவதில் ஏனோ இவர்களுக்கு விருப்பமில்லை மெதுமெதுவாக அமைதியாகி மொத்தமாக மூடிவிட்டார்கள் இதில் ஏதோ பெரு மர்மம் உள்ளது என்பதும், எதனையோ சொல்ல விரும்பவில்லை என்பதும் உண்மை ஆதிச்சநல்லூரிலும் இதே கொடுமைதான் அரங்கேறிற்று, அங்கு கிடைத்த பொருட்கள் கிட்டதட்ட 6 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டவை என செய்திகள் வந்தபின் அதனையும் நிறுத்தினார்கள் இப்பொழுது […]

இன்று இந்திய விமான படையின் 85ம் ஆண்டு விழா

இன்று இந்திய விமான படையின் 85ம் ஆண்டு விழா வெள்ளையன் காலத்திலே 85 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கபட்டது நம் விமானபடை. அன்று இரண்டாம் உலகபோருக்காக வெள்ளையன் தொடங்கினான் சுதந்திர இந்தியாவில் அதுவும் சீன போருக்கு பின் நம் விமானபடை வலுபடுத்தபட்டது. இன்று மிக சிறந்த விமானபடை வரிசையில் இந்தியாவிற்கும் இடமுண்டு. கார்கில் போரில் இந்திய விமானபடையின் அபார நடவடிக்கையாலே வெற்றி கிட்டியது. அது கடந்துவந்த பாதை சிக்கல் நிறைந்தது. ரஷ்ய உதவியுடன் பலபடுத்தபட்ட நம் விமானபடை பின் […]

மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி!

மும்பை ரயில்நிலைய நெரிசலில் 22 பேர் பலி! பழைய கூரை கனமழையில் இடிந்து விழுந்தும், மக்கள் அதனை கண்ட பயத்தில் அலறி ஓடியதிலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கின்றது. அந்த அளவு மக்கள் நெரிசல் இருந்திருக்கின்றது, பொது போக்குவரத்து அவ்வளவு பெரும் கூட்டத்தை சமாளிக்க முடியாததாய் இருந்திருக்கின்றது. இந்த மும்பையில்தான் சிவாஜிக்கு பல நூறு கோடி செலவில் சிலை வைக்கபோகின்றார்களாம்.

காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம்…

ஒரு நாடு இயங்க மகா முக்கியமான விஷயம் போக்குவரத்து, அது எவ்வளவுக்கு எளிதாகின்றதோ அவ்வளவிற்கு நாடு முன்னேறும் காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம், அதுவும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாறியே தீரவேண்டும். அதில் ஒரு விஷயம்தான் புல்லட் ரயில். மிக மிக வேகமான ரயில் அது, இந்தியாவில் என்றோ வந்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இதுவே தாமதம். எப்படியோ மோடி அறிமுகபடுத்தியிருக்கும் உருப்படியான திட்டம் இது. முதன் முறையாக மும்பை அகமதாபாத் இடையே […]

சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857

இந்திய வரலாற்றின் மிக குறிப்பிடதக்க நாள் செப்டம்பர் 20, 1857 அதுவரை கிழகிந்திய கம்பெனியின் நாடாக இருந்த இந்தியா, அன்று தொடங்கிய கலவரங்களின் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசின் கட்டுபாட்டிற்கு சென்று பிரிட்டிஷ் இந்தியா ஆனது. அதாவது எத்தனை நாள்தான் டாஸ்மாக் எனும் தங்க சுரங்கத்தை தனியாரிடம் விட்டுவைப்பது, நாமே நடத்தினால் என்ன என அரசு கைபற்றியது அல்லவா? அப்படி இந்தியாவினையும் பிரிட்டன் அரசு எடுத்தது. அது எடுத்தபின்பே பல சட்டங்களும்,முறையான அரசும் இந்தியாவிற்கு வந்தன, அதன் அடிப்படையிலேதான் […]

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்:  பிரதமர் மோடி துவக்கி வைப்பு நாடு முழுவதும் இது அவசியம், விரைவில் இது எல்லா பெருநகரங்களையும் இணைக்கட்டும் ஆனால் இந்த பரிவார கும்பல் அயோத்தி டூ மும்பை, அயோத்தி டூ சென்னை புல்லட் ரயில் அவசியம் , அப்பொழுதுதான் ராமர் கோவில் கட்ட கரசேவகர்களை விரைவாக திரட்டமுடியும், ஓடி சென்று பசுமாடுகளை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைக்கும் ஆபத்தும் உள்ளது

நேற்று சோமனூர் … நாளை சூலூர்…

கோவை சோமனூரை தொடர்ந்து சூலூரிலும் பஸ் நிலைய கூரை இடியும் அபாயம் முட்டு கொடுக்கும் பணி தொடங்கியது. சோமனூர் பஸ்நிலைய கூரையினை கட்டியவன் யார்? தகவல் இல்லை. இந்த சூலூரில் கட்டிய ஒப்பந்தக்காரன் யார்? தெரியவில்லை ஆனால் முட்டு கொடுக்கின்றார்கள். முட்டு பஸ்நிலைய கூரைக்கு மட்டுமல்ல‌ மாநில அரசுக்கு மத்திய அரசு முட்டு கொடுக்கின்றது, மாநில அரசு இப்படிபட்ட கட்டங்களுக்கு முட்டு கொடுக்கின்றது ஆக சமாளிப்பிலே செல்கின்றன எல்லா விஷயங்களும். எதற்கும் முடிவேயில்லை. இவ்வளவிற்கும் முதல்வர் பழனிச்சாமி […]

இன்று ஓணம் பண்டிகை : இனிய ஓணம் அஷம்சுகள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால […]

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்தவன் வாஸ்கோடகாமா . கேரள கள்ளிகோட்டையில் வந்திறங்கினான். கோவா போன்ற பகுதிகளை பிடித்தபின் அவனை வைஸ்ராய் ஆக்கினார் போர்த்துகீசு மன்னர். வாஸ்கோடகாமா கள்ளிகோட்டை பகுதியில் பல பகுதிகளை ஆண்டிருக்கின்றான். இலட்சதீவுகள் எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்திருக்கின்றன , கப்பம் வசூலித்திருக்கின்றான். பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு யுத்தத்தில் இந்தியாவிலே கொல்லபட்டிருக்கின்றான், அது 1524ம் வருடம், அவன் கல்லறை இன்றுவரை கேரளாவில் உண்டு. அவன் கொல்லபட்டபின்னரே போர்த்துகீசியர் அடக்கி வாசித்திருக்கின்றனர், அதன் பின் பெரும் […]