பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார்?

எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியாது சோமநாதபுர ஆலயத்தை காக்க செய்திருக்க வேண்டியது கைபர் , போலன் கணவாயில் ஒரு பெருஞ்சுவர், சீனா அளவிற்கு எல்லாம் அல்ல, 50அடி நீளத்தில் கட்டினாலே முடிந்திருக்கும் விஷயம் அதனை செய்யாமல் கஜினி வந்தான்,கோரி வந்தான் என ஒப்பாரி வைப்பது எல்லாம் சும்மா அதுவும் ஒருமுறை வந்தாலும் பரவாயில்லை, அவன் 18 முறை வந்தபொழுதும் அவன் வரும் வழியினை தடுக்க ஒரு யோசனையுமில்லை இன்று சோமநாதபுரத்தை […]

அழகுமுத்து கோன் மாவீரனுக்கு, வீரவணக்கம்

அந்த இந்தியா முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் வித்தியாசமாக இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள் புலிகள் இருந்த வரை வேலையாளாகவும் அவர்களுக்கு பின்னால் அந்த ஐரோப்பிய சொத்துக்களை அமுக்கியவர்கள் தொழிலதிபர்கள் ஆனது போலவும், இன்னும் 4 வருடம் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், […]

மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள்

அமர்நாத்தில் புனித யாத்திரை சென்ற பக்தர்களை அந்த கொடூர, மனிதநேயமற்ற, மதமற்ற தீவிரவாதிகள் அதாவது மதத்தின் அருமை தெரியாத மிருகங்கள், ஐஎஸ் போன்ற இஸ்லாம் என சொல்லி சாத்தானான பேய்கள் சுட்டுகொன்றிருக்கின்றார்கள், இவர்கள் மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள் பலர் காயமடைந்திருக்கின்றார்கள் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமல்ல, மிக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் அவர்களுக்கு மதமுமில்லை, மனிதமுமில்லை மிருகங்களை விட மகா கேவலமானவர்கள் இவர்கள், அழித்தொழிக்கபட வேண்டியவர்கள் இஸ்ரேல் சென்ற […]

ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று

  இந்த ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று, ஒரு இந்தியனாக இதனை வரவேற்கின்றோம், கூட்டணி அரசாங்கத்தால் இதனை நிச்ச்யம் கொண்டு வந்திருக்க முடியாது, அது இது என இழுத்து கிடப்பில் போட்டிருப்பார்கள் மிக தனிபெரும்பான்மையுடன் திகழும் பாஜக அரசு இதனை செய்திருக்கின்றது, நாட்டிற்கு தேவையான விஷயங்களை செய்யும்பொழுது பாராட்டத்தான் வேண்டும் இதன் பலம் நிச்சயம் நல்லதாக இருக்கும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதற்குள் புதிய இந்தியா பிறந்துவிட்டது, தவழ்கின்றது, பல் முளைத்துவிட்டது, நடக்க தொடங்கிவிட்டது என்பது […]

சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ் சிவன் மதுரையில் ஆடாத திருவிழையாடலா? அகத்தியன் முதல் பல சித்தர்கள் அவரோடு தமிழில் பேசாத பேச்சா? நக்கீரன் முதல் எத்தனை புலவர்கள் அவரோடு வாதிட்டனர், அவர்கள் எல்லாம் லத்தீனிலா பேசினார்கள்?? இவரை எல்லாம் அந்த மதுரை ஆதீனத்தை வைத்து அடிக்க வேண்டும், அவர் கனவில் கூட சிவன் தமிழில்தான் பேசினார் மொழிகளை , இனங்களை, மனிதர்களை, விண்வெளிகளை கடந்தவன் அல்லவா அந்த பரம்பொருள்?? இது கூட தெரியாதவன் எல்லாம் […]

இந்த இலுமினாட்டி என்றால் என்ன?

அவ்வப்போது வரும் புலம்பல்தான், இப்பொழுது விஜய் டிவியில் கமலஹாசன் ஒற்றைகண் முன்னால் தோன்றுவதில் அது மறுபடியும் ஒப்பாரியாக்கபடுகின்றது, அதேதான் இது இலுமினாட்டி சதி, விஜய் டிவி இலுமினாட்டி, கமலஹாசன் இலுமினாட்டி என சிலர் தொடங்கிவிட்டார்கள் இந்த இலுமினாட்டி என்றால் என்ன? அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை. இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக […]

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது

இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும் சில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு உணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு மருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் […]

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை

மாட்டிறைச்சி விவகாரம், ஜார்கண்டில் மேலும் ஒருவர் படுகொலை நிலமை எல்லை மீறி செல்கின்றது, மாட்டின் பெயரால் மனிதரை கொல்வதை ஏற்க முடியாது என எச்சரித்த பிரதமரின் அறிவிப்பினையும் மீறி செல்கின்றது நிலை மதம் போன்ற சில‌ உணர்ச்சிகளோ தூண்டிவிட்டுவிட்டால் அது பெரு நெருப்பாக எரியும், கட்டுபடுத்துவது சாதரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும் நிலமை மோசமாவது மோடிக்கு புரிகின்றது, ஆட்சியாளராய் சிக்கல் அவருக்கு தெரியவருகின்றது ஆனால் அவரால் எந்த அளவு கட்டுபடுத்தமுடியும் என்பது […]

இது தேசத்தின் அமைதிக்கு நல்லதல்ல‌  

ஹரியானாவில் ஒரு இஸ்லாம் இளைஞர் ரயிலில் இந்துக்களால் மிக கொடூர்மாக கொல்லபட்டிருக்கின்றான், இதனால் அந்த கிராமமே நோன்பு பெருநாளை கொண்டாடவில்லை இது கண்டிக்கதக்க விஷயம், மத்திய அரசும் மாநில அரசும் இதுவரை இச்சம்பவத்தை கண்டிக்கவில்லை இம்மாதிரியான குற்றவாளிகள் மிக கடுமையாக கண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது இம்மாதிரி விஷயங்களும் நிச்சயம் தேசதுரோகம், அரசுகள் மிக விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம், தகவல் தொடர்புகளின் உச்ச காலமிது, பெரும் வதந்திகள் நொடியில் பரவும் காலம், அதனால் […]

“இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல…” : ரிசர்வ் வங்கி

“இந்திய வங்கிகள் பாதுகாப்பனது அல்ல, இன்று பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்போம், நாளை மக்களின் டெப்பாசிட் பணத்திற்கே பொறுப்பில்லை என்போம் அதனால் மக்கள் வெளிநாட்டு வங்கிகளை நாடலாம்” என சொல்லாமல் சொல்கின்றது ரிசர்வ் வங்கி. மொத்த இந்திய மக்களையும் வெளிநாட்டு வங்கிகள் பக்கமும் தனியார் செக்கியூரிட்டிகள் பக்கமும் திருப்பும் காரியம் இது. ஆக இந்திய மக்களின் பொருட்களுக்கு இந்திய வங்கியிலே பாதுகாப்பு இல்லையாம், இந்த கொடுமையினை எங்கு போய் சொல்வது? விரைவில் சுவிஸ் வங்கி இந்தியாவில் கிளை […]