பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று சூரசம்ஹாரம்

இன்று சூரசம்ஹாரம் தீபாவளிக்கு மட்டும் நரகாசுரன் முப்பாட்டன் என கிளம்பிய மானமுள்ளதாக சொல்லும் ஆனால் அறிவே இல்லாத சில தமிழர்களை இப்பொழுது காணவில்லை தீபாவளியினை எதிர்த்தால் பகுத்தறிவாம், காரணம் நரகாசுரன் முப்பாட்டனாம் ஆனால் சூரபத்மன் என்பவன் என்ன ரகம்? அவன் முப்பாட்டன் இல்லையா? ஏற்கனவே முருகனை முப்பாட்டன் ஆக்கியாயிற்று, இதில் சூரமபத்மனும் முப்பாட்டன் என்றால் தமிழகத்தில் அடித்து கொன்றே விடுவார்களே? என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கின்றது அந்த குழப்ப கோஷ்டி இதனால் சூரசம்ஹாரத்திற்கு வீரவணக்கம் செலுத்த […]

கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம்

கத்தோலிக்க கிறிஸ்தவமும், யூதரும், இஸ்லாமியரில் சிலரும் நம்பும் விஷயம் அது. கடவுளுக்கு முன்பாக 7 வானவர்கள் எப்பொழுதும் நிற்பார்கள். ஒவ்வொரு தூதருக்கு கீழும் ஏராளமான தேவதைகள் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. இவர்களில் கபிரியேல் என்பவர்தான் அடிக்கடி தகவல் கொண்டு வருவார். மரியாள் முதல் நபிபெருமான் வரைக்கும் வந்தவர் அவர்தான். இந்த வானவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் உண்டு, அவர்தான் மிக்கேல் அல்லது மைக்கேல். மிக பெரும் பொறுப்பு அவருடையது. கடவுள் முதலில் வேறு உலகையும் வான தூதர்களையும்தான் […]

எல்லா சகல பூஜை வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும். ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு. அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் […]

தியாக திருநாள் பக்ரீத் தின வாழ்த்துக்கள்

அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஒரு ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் “ஊர்” தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான், அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது, நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம். அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், […]

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன். நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார். இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், ஒரு […]

பாகிஸ்தானின் அன்னை தெரசா , ரூத்

கல்கத்தா போலவே வெள்ளையன் உருவாக்கிய நகரம் கராச்சி, நிச்சயம் மிகபெரும் துறைமுகம் அது, ஆனால் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது. கல்கத்தா போலவே அங்கும் சுகாதார நெருக்கடி, சாலையோர அனாதைகள், நோயாளிகள் என கராச்சியும் சிக்கிற்று. மிக மிக மோசமான நிலைக்கு சென்றது, தெருவெல்லாம் தொழுநோயாளிகளால் நிரம்பிற்று. அப்பொழுது ஜெர்மானிய கிறிஸ்தவ தொண்டுநிறுவனர் ரூத் என்பவர் பணியாளாராக வந்தார். கராச்சியின் நிலையினை கண்டு கண்ணீர்விட்டார். 1960ல் தன் வாழ்வினை கராச்சி தொழுநோயாளிகளுக்கு அர்பணிப்பதாக சொல்லி அங்கேயே தங்கினார். […]

பரலோக மாதா வழிபாடு

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]

கண்ணனின் ஆசிபெற்ற கலைஞர்கள் …

எத்தனை நடிகர்கள் வந்தாலும், எத்தனை பேர் வேடமிட்டாலும் அந்த ராமராவினை போல ஒருவருக்கு கிருஷ்ணர் வேடம் பொருந்துமா என்றால் நிச்சயம் பொருந்தாது. பெயர்தான் “ராம”ராவ் மற்றபடி அவருக்கு வாழ்வு கொடுத்தது எல்லாம் கண்ணனின் வேடங்கள். கர்ணன் எனும் சிவாஜிபடத்தினை கண்டால், ராமராவ் கிருஷ்ணனாக வரும் காட்சிகள் கொஞ்சம்தான். ஆனால் அப்படத்தில் தனித்து நிற்பவர் சிவாஜி கணேசன் அல்ல, மாறாக ராமராவ் தான். அந்த படம் முடியும்பொழுது பார்பவருக்கு கர்ணன் மீதான பாதிப்பு நீங்கி, கண்ணன் மீதான அபிமானமே […]

கிருஷ்ணன் பிராமணன் அல்ல

கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான் அந்த அடிமைகள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான். ஆக பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே,பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை கொண்டாடுவதில் சிக்கல் இல்லை. திராவிடம் என்றால் கடவுள் இல்லை என மட்டும்தான் சொல்லமுடியும் என்பது சுத்த பைத்தியகாரத்தனம். தாழ்த்தபட்ட […]