பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மதங்கள் வேறானாலும் கலாச்சாரம் ஒன்றுதான்….

உபியில் வீட்டுக்குள் புகுந்து முஸ்லிம் வாலிபரையும் பெண்ணையும் அடித்து இழுத்து வந்த இந்து யுவ வாஹினியினர் இந்த யுவ வாஹினி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கபட்டது, இன்றுவரை அதன் தலைவர் அவர்தான் இம்மாதிரி காதலர்களை விரட்டுதல்., அடித்தல், கல் எறிதல் முடிந்தால் கொளுத்துதல் போன்றவை ஆப்கன், ஈரான் போன்ற நாடுகளில் சகஜம் இங்கே இப்பொழுது தொடங்கிவிட்டார்கள், விரைவில் இந்நாடும் ஆப்கன் போல நாசமாய் போகும் ஆபத்து இருகின்றது தாலிபானிசம் போல, யோகியிசம் விரைவில் அறிவிக்கபடலாம்.. இதில் […]

இன்று பெரிய வியாழன்…

https://youtu.be/XadkoNyDevg இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். கிறிஸ்தவ ஆலயங்களில் அதனை நினைவு கூறும் விதமாக பல அசனம் எனப்படும் விருந்து நடைபெறும். அதிலும் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு செய்தது போல பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும். முன்பெல்லாம் கிறிஸ்தவ கிராமங்களில் வீடுவீடாக துக்கபாட்டு படித்து ஊர்வலமாக வருவார்கள், வீட்டில் இருக்கும் நெல் அல்லது உளுந்தினை மக்கள் கொடுப்பார்கள், அது இந்த கிறிஸ்தவ விரத […]

பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

இன்று பங்குனி உத்திரமாம், நிலவு அழகாக தெரியுமாம், இங்கு கடும் மேக மூட்டம் என்பதால், நிலவு தெரியவில்லை அதனால் என்ன, அதுதான் பூமிக்கு ஏற்கனவே வந்து நாளாயிற்றே…பின் வானத்தில் ஏன் தேடவேண்டும். இந்த குளிர்மிகு, ஒளிமிகு வட்ட‌ முகத்தை விடவா அந்த பங்குனி நிலவு அழகு?? பங்குனி உத்திர நாளுக்கு தமிழகத்திற்கு தனி சிறப்பு உண்டு. பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் […]

புட்டுகளில் சிறந்தது சுறா புட்டு..

உணவுகளில் புட்டு என்பது அவ்வளவு சுவையானது, பலவகையான புட்டுக்கள் உலெகல்லாம் உலாவுகின்றன‌ ஆனானபட்ட சிவபெருமானே புட்டிற்காக மண் சுமந்திருக்கின்றார் என்பதை விட அதன் பெருமையினை சொல்ல என்ன இருக்கின்றது? பலவகை புட்டுக்களில் சுறா புட்டு மிக சுவையானது, சிவன் சைவம் என்பதால் அதனை சுவைத்திருக்க வாய்ப்பில்லை, சுவைத்திருந்தால் மதுரை கிரானைட் கல்குவாரி வேலைக்கும் வந்து திருவிளையாடல் நடத்தியிருப்பார் அவதாரங்களில் மீனோடு கலந்தவர் இயேசு, மீணவர்களோடுதான் வாழ்ந்தார், மீன் பிடித்தார், மீன்களை வைத்துதான் புதுமைகள் எல்லாம் செய்தார், மீன்களை […]

உலக புகழ் இதிகாசம் ராமாயணம்…

  உலகெல்லாம் பெரும் இடம்பெற்றுவிட்ட இதிகாசம் ராமாயணம், அதன் நாயகன் ராமன், அவரின்றி ராமாயணம் இல்லை இந்தியா முழுக்க பரவியிருக்கும் ஒரு அடையாளம் அவர், ராமாயண கதைகளின்றி தொன்மையான கலைகள் இல்லை, எல்லா இந்திய கிராம கலைகளின் அடிப்படையே ராமயணமும், மகாபாரதமுமே சினிமாவிற்கு முந்தைய காலம் வரை அதுதான் நாடக மேடைகளில் ஜொலித்துகொண்டிருந்து இந்தியா மட்டுமல்ல கிழக்காசிய நாடுகள் முழுக்க அதன் தடம் இருக்கின்றது, அவர்களின் பாரம்பரிய நாட்டிய நடனமே ராமாயண கதைதான். முன்பு மேற்காசியா வரை […]

தமிழகமும் சமணமும்.

ஏப்ரல் 1 2015ல் முகநூலில் பதிவு செய்தது. தமிழகமும் சமணமும். பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான். அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து ஒடுக்கிய மாவீரனோ அல்லது மகா அரசனோ அல்ல, தன்னை வென்றார். அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டார், சொல்லபோனால் மக்களின் மனங்களை ஜெயித்தவீரர், அந்த மகாவீரர். அவர் […]

ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து

ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து பின்னே, ஆஸ்திரேலியாகாரனுக்கு கிறிஸ்தவம் தெரியாதா? இங்கிருந்து அங்கு சென்று ஏன் கிறிஸ்தவ போதனை செய்ய வேண்டும்? கிறிஸ்துவை அறியாத தேசத்தில் சென்று பேசி இவர் குத்து வாங்கினால் நமக்கே அனுதாபம் வரும் முழுக்க கிறிஸ்தவ தேசமான ஆஸ்திரேலியாவில் இவர் புதிதாக கிறிஸ்தவம் பேச என்ன வந்தது? குத்தியவனும் கிறிஸ்தவன் என்பது குறிப்பிடதக்கது, மனிதர் மிகவும் இந்த போதகர்களின் இம்சையால் பாதிக்கபட்டிருப்பார் போல‌, பலர் இவரை போல‌ பாதிக்கபட்டிருக்கலாம், இவர் […]

மதவெறி எவ்வளவு கொடுமையானது…

கோவையில் ஒரு இஸ்லாமியர் சில சொந்த கருத்துக்களுக்காக தன் சொந்த மக்களால் கொல்லபட்டிருக்கின்றார் மதவெறி எவ்வளவு கொடுமையானது என அப்பட்டமாக தெரியும் நேரமிது தாலிபான்களும், ஐஎஸ் இயக்கமும் செய்வதை கோவை மண்ணிலும் பார்க்கும்பொழுது பகீர் என்றுதான் இருக்க்கின்றது, அவன் மதத்தை ஏற்றான் அல்லது நிராகரித்தான் என்பதை பொறுத்தா இந்த பூமியில் வாழும் உரிமை நிர்ணயிக்கபடும்??? சிங்கமும், புலியும், கரப்பானும் வாழும் பூமியில் ஒரு மானிடன் வாழகூடாதா? இவ்வளவு நடந்திருக்கின்றது, இஸ்லாமிய சங்கங்கள் கடும் அமைதி ஆனால் ஒரு […]

நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா?

என்னிடம் வந்து நீ கிறிஸ்தவனா? பைபிள் படிப்பவனா, துரோகி , யூதாஸ் என சிலர் சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இந்த பரந்த உலகினையும், அதில் வாழும் எல்லா மக்களையும் எங்கோ மேற்காசியாவில் வாழ்ந்த மிக சிறுபான்மை இனத்தின் பைபிள் பைபிள் மூலம் மட்டுமே அறிந்துகொள்ள முடியுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌ இஸ்ரேலிய யூதனுக்கு அவன் புத்தகம் கொடுத்த கட்டளைகளை, எங்கோ மூலையில் இருக்கும் தமிழனாகிய நான் பின்பற்றவேண்டுமென்றால் நான் கிறிஸ்தவன் அல்ல‌ எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு, அந்த […]

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம்…

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம், பலர் விரதமிருக்கின்றனர், அதில் பாகம்பிரியாளும் ஒன்று கர்த்தராகிய இயேசு நமக்காக உயிர்விட்டார் என இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதமிருக்கின்றார்கள், நல்லது ஆனால் ஆனானபட்ட இயேசுபிரானே எனக்காக உயிர்விட்டிருக்கின்றார் எனும்பொழுது, சில மீன்களும் கோழிகளும் ஆடும் எனக்காக உயிர்விட கூடாதா? இப்படி சொல்லிவிட்டு எல்லாம் தயார்படுத்தியாயிற்று.. இயேசு எனக்காக ஜீவன் விட்டார், இதோ பல உயிர்களும் எனக்காக ஜீவனை விட்டுகொண்டிருக்கின்றது எவ்வளவு பெரிய பாக்கியசாலி நான்.. “சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே […]