பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தூய தமிழ் பிரியர்களின் இம்சை தாங்க முடியவில்லை..

சில தமிழ்பிரியர்கள் இம்சை தாங்கமுடியவில்லை, புழக்கத்தில் இருக்கும் ஆங்கில பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் மாற்றுவதில் கடுமையாக உழைக்கின்றார்கள், 24 மணி நேரமும் சிந்திக்கின்றார்கள் உலகில் தன் மொழி சொற்களை 100% கொண்ட மொழி என எதுவுமில்லை. எல்லா மொழியிலும் எல்லா மொழி சொற்களும் கலந்தே இருக்கின்றன‌ இல்லாவிட்டால் அரசியலில் நேர்மையானவர்கள் அனாதை ஆவது போல பல மொழிகள் ஓரங்கட்டபடும் ஆங்கிலத்தின் ஸ்பெஷலே எல்லா மொழி வார்த்தைகளையும் கிரகித்து தன்மொழியாக்கி கொண்டதுதான் அது இருக்கட்டும்.. சில தமிழர்கள் இப்பொழுது […]

தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே!!!

வார்த்தை பிழையோ, உச்சரிப்பு பிழையோ வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து வளர்க்கபட்ட கட்சியில் இன்று போஸ்டர் அடிப்பதை கூட அசால்டாக பிழையாக அடிக்கின்றார்கள் அச்சடிக்க சொன்னவன், அச்சடித்தவன், ஒட்டியவன் என மூன்று ரகமுமா வாசிக்க தெரியாதவனாக இருக்க முடியும்? என்ன செய்ய?, மற்ற தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே. தமிழனுக்கு வாசிக்க சொல்லிகொடுத்தது எவ்வளவு தவறாய் போயிற்று    

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினம் நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ் தமிழுக்கு பல சிறப்புகள் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், செம்மொழி, ஆதிமொழி, தமிழின் வார்த்தைகள் எண்ணமுடியாதவென அதன் சிறப்புகள் ஏராளம் அதனைவிட மகா சிறப்பு அது இளமை குன்றாதது, அதனால்தான் சுந்தரம்பிள்ளை “உன் சீரிளமை திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துவோமே.” என தமிழை வியந்து பாடினார் உலகில் இளமை குன்றாத விஷயங்களில் தமிழும் ஒன்று, அதனை போல குஷ்பூவும் ஒன்று […]