பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் சாகுந்தலம் : 22

காளிதாசனின் சாகுந்தலம் : 22 (சகுந்தலை பெற்ற சாபத்தால் துஷ்யந்தன் அவளை மறந்து, தன்முன்னால் நின்ற அவளை அடையாளம் தெரியாமல் விரட்டிவிட ஒரு வெளிச்சம் வானில் இருந்து வந்து அவளை அள்ளிச் சென்றது, மீண்டும் சுயநினைவுக்கு அவன் வந்து அவளைத் தேடியபோது அவள் இல்லை. எங்கெல்லாமோ தேடியும் அவளை அவனால் காணமுடியவில்லை, இப்போது அவள் பெற்ற அத்தனை துயரையும் அவன் பெற்று உடைந்த மனதோடு அவளை நினைந்து முடங்கி கிடந்தான். அவன் அணங்கன் எனும் காமதேவன் விழாவினையே […]

காளிதாசனின் சாகுந்தலம் : 21

காளிதாசனின் சாகுந்தலம் : 21 தேவலோக மேனகையின் தோழியான சானுமதி வானலோகத் தேரில் மேகங்களிடையே இறங்கி வந்தாள், அவள் மேனகை கேட்டுக் கொண்டதால், அவள் மகள் சாகுந்தலை பொருட்டு சில விஷயங்களைத் தெரிந்து வர சொன்னதால் வந்திருந்தாள். வந்தவள் சொன்னாள், “அதோ நான் வரும் நேரம் கன்வமுனிவர் புனித தீர்த்தமாட சென்றுவிட்டார், அவரிடமிருந்து தெரிந்து கொள்ள இனிக் காலமில்லை, பெரும்கடமை முடிக்க சென்று தவமிருப்பவரைத் தொந்தரவு செய்ய அதிகாரமில்லை. அதனால் நான் துஷ்யந்தனை நேரில் கண்டு அவன் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 20

காளிதாசனின் சாகுந்தலம் : 20 புரோகிதருடன் அவர் சொன்ன தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு வேறு வழியின்றி இனி அழவும் கண்ணீர் இன்றி, எரிமலை வெடித்து இறுகியது போன்ற நெஞ்சத்துடனும் சென்றாள் சாகுந்தலை. துஷ்யந்தனோ அவன் போக்கில் அமர்ந்திருந்தான், அவனைப் பொறுத்தவரை அவன் தவறேதும் செய்யவில்லை. அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற புரோகிதர் திடீரென “மன்னா பெரும் ஆச்சரியம், பெரும் ஆச்சரியம், அதிசயம்” என உரக்கச் சொன்னபடி ஓடிவந்தார். “அப்படி என்ன நடந்தது? என அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் துஷ்யந்தன். […]

காளிதாசனின் சாகுந்தலம் : 19

காளிதாசனின் சாகுந்தலம் : 19 சாரங்கவன் சொன்னான், “தன் மனம் அறிந்து பதைபதைக்க செய்த தவறு இப்படித் துயரில்தான் முடியும். காட்டில் விலங்குகளும், பறவைகளும் கண்டபொழுதில் கூடி மகிழும். ஆனால், வஞ்சத்தால் பழகாது, ஏமாற்றிச் செல்லாது, பெண்ணின் அருகிருந்து குஞ்சுகளைக் குட்டிகளை கண்போல் பார்த்திருக்கும். ஆனால், அறிவு எனும் கண்களால் எல்லாவற்றையும் ஆராயும் மானிடர்கள் அறிந்தே களவுமணம் செய்கின்றார்கள். அதனால், பாதிக்கபட்டால் இப்படித்தான். சொன்ன சொல் தவறாதவருக்கும், ஒழுக்கம் நிரம்பியவர்க்குமே களவுமணம் காலமெல்லாம் நிலைக்கும். பிறப்பிலே நல்லொழுக்கம் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 18

காளிதாசனின் சாகுந்தலம் : 18 அவன் முன்பு கொடுத்த மோதிரம் தன் கையில் இல்லாததை கண்டு திடுக்கிட்டு புலம்பலின் வாசலில் நின்று சொன்னாள் சாகுந்தலை. “எல்லாம் போனதம்மா. உயிர் பிரியும் நேரம் உடலின் எல்லா உறுப்பும் தன் இயல்பில் இருந்து மாறுவது போல் எல்லாமே மாறிற்றே. என்ன செய்வேன்? எல்லாம் இழந்தேன். என் வாய்மை, என் பலம், என் நம்பிக்கை, என் வாழ்வு என எல்லாம் இழந்துவிட்டேனே. என் இருளை அகற்றும் ஒளி என நம்பிக்கொண்டிருந்த மோதிரத்தை, […]

காளிதாசனின் சாகுந்தலம் : 17

காளிதாசனின் சாகுந்தலம் : 17 “மன்னா, நீர் முன்னர் செய்த செயலில் வெறுப்புற்று இப்போது கடமை தவறி பேசுதல் சரியாகுமோ?” என்றான் சாரங்கன். “பொய்க்கால் ஆட்டம் ஆடுவோர், பொய்யாக ஒரு காலை காலுக்கு கீழ் கட்டிவைத்தல் போல் ஒரு பொய்யின் மேல் என்னை நிறுத்த பார்க்கின்றீர்கள்” என்றான் துஷ்யந்தன். “பொய் உரைக்கின்றீர், இங்குச் செருக்கும் அகங்காரமும் கொண்டு அந்த மயக்கத்தில் உண்மையினை மறந்து நன்றி இன்றி துடுக்காய்ப் பேசுவது யார் மன்னா?” என்றான் சாரங்கன். துஷ்யந்தன் நெற்றியில் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 16

காளிதாசனின் சாகுந்தலம் : 16 சாகுந்தலை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று சொன்னார் சோமநாத புரோகிதர், “அதோ எங்கள் மன்னர் எழுந்து நிற்கின்றார் பாருங்கள். நீங்கள் யார்? எக்குலம்? எந்த இனம்? எனத் தெரியாமலே உங்களை எதிர்பார்த்து எழுந்து நிற்பது அவரின் சிறப்பான குணம் என்பதைக் கவனியுங்கள். முன்பின் தெரியாத புதியவரையும் எழுந்து நின்று வரவேற்பதுதான் அவரின் போற்ற வேண்டிய பண்பு” சாரங்கன் சொன்னான், “புரோகிதரே, மண்ணில் இருந்துதான் நாம் மரமாக உருவானோம் எனும் நன்றி மரத்துக்கு உண்டு. […]

காளிதாசனின் சாகுந்தலம் : 15

காளிதாசனின் சாகுந்தலம் : 15 (துர்வாசரின் சாபத்தால் துஷ்யந்தனுக்குத் சகுந்தலையினை நினைவு மட்டும் அகன்று போனது, அவளைச் சந்தித்ததோ அவளுடன் பழகியதோ எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை. தன் தலைநகரான‌ அஸ்தினாபுரத்தில் அவன் வழமையான அரசாட்சி செய்தான், சாகுந்தலையினை மட்டுமே அவன் முழுக்க மறந்திருந்தான். வேறு எல்லா வகையிலும் அவனாகவே இருந்தான். அப்போதுதான் அவனைக் காண கௌதமியார் சாரங்கனுடன் சாகுந்தலை வருகின்றாள்.) துஷ்யந்தன் தன் மாளிகையில் தன் விளையாட்டு தோழனுடன் ஓய்வில் இருந்தான், அவன் அரண்மனை நடனபெண்கள் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 14

காளிதாசனின் சாகுந்தலம் : 14 “நான் வளர்த்த சாகுந்தலையே, நீ என்னவெல்லாம் பெரும் சிறப்பும் புகழும் அடையவேண்டும் என நான் விரும்புகின்றேனோ அதைவிட மிகுதியாகப் பெற்று வாழ்வாயாக” கன்வமுனி வாழ்த்தி விடை கொடுக்க, தாளாத சாகுந்தலை மறுபடியும் தன் தோழியரை நோக்கிச் சொன்னாள். தனித்தனி உருவம் என்றாலும், கங்கை யமுனா சரஸ்வதி நதிகள் ஒன்றாய்க் கலந்திடுவதை போல கலந்தே இருந்தோம், சூரியனார் கோவிலில் மூன்று தீபங்கள் ஒரே தண்டின் மேல் இருப்பது போல் சேர்ந்தே இருந்தோம். கலங்கிய […]

காளிதாசனின் சாகுந்தலம் : 13

காளிதாசனின் சாகுந்தலம் : 13 ( சாகுந்தலை அந்தத் தவக்குடிலை விட்டு துஷ்யந்தன் அரண்மனை நோக்கிச் செல்லும் அந்தப் பிரிவு காட்சி சொல்லப்படும் இடம் இது. ) கௌதமி சொல்கின்றார், “இல்லறத்தின் எதிர்பதமாய் இருக்கும் இந்த துறவியர் குடிலின் கூட்டத்தில் இருந்துச் செல்கின்றாய். இந்தக் குடிலின் துறவியரும் இந்த மரம், செடி கொடி என எல்லாமும் உனக்கு விடைதருகின்றன சாகுந்தலையே, அவைகளுக்கெல்லாம் விடை சொல், உன் பிரிவால் நாங்கள் மட்டும் வாடவில்லை” சாகுந்தலை கலங்கிய மனத்தோடு விம்மிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications