பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சத்ரபதி சாம்பாஜி : 11

சத்ரபதி சாம்பாஜி : 11 சாம்பாஜியின் வேகம் முகமது அக்பர் வந்தபின் வேகமானது. இனி நிச்சயம் ஔரங்கசீப் சும்மா இருக்கமாட்டான் என்பதையும் அவனின தாக்குதல் கடுமையாக இருக்கும் என்பதையும் அனுமானித்தான். ஆனால், எங்கே எப்படி அவன் தாக்குவான் என்பதை அவன் அறியமுடியவில்லை, சாம்பாஜியின் உளவுப்படைகள் களத்தில் இருந்தாலும் ஔரங்கசீப் ஊகிக்கமுடியாத ஆபத்தானவனாக இருந்தான். சாம்பாஜி எல்லாப் பக்கமும் தன் சேனையினைப் பலப்படுத்தினான். அதே நேரம் ஔரங்கசீப் மிகத் தீவிரமான ஆலோசனையில் இருந்தான். அவனிடம் பெரிய சேனை, பெரியநிதி, […]

சத்ரபதி சாம்பாஜி : 10

சத்ரபதி சாம்பாஜி : 10 ஔரங்கசீப் தன் மிகப்பெரிய படையுடன் தக்காணம் வந்தான் என்பதும் அதுவரை இருந்த அமைதி ஒழிந்துபோனது. எல்லா இடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிஜப்பூர் சுல்தானியம், கோல் கொண்டா சுல்தானியம், மைசூர் உடையார்கள், தமிழக நாயக்கர்கள் என எழுந்த பதற்றம் மலையாள மன்னர்கள் வரை எட்டிற்று, அதுவரை மலையாள இந்து அரசர்கள் ஆப்கானியர் அட்டகாசங்களைச் சந்தித்ததில்லை. பாமினி காலம், மாலிக்காபூர் காலத்தில் கூட அவர்களின் அரணான மலை அவர்களுக்குக் காவல் இருந்தது. ஆனால் […]

சத்ரபதி சாம்பாஜி : 09

சத்ரபதி சாம்பாஜி : 09 சாம்பாஜிக்கு இரண்டாம் முறை விஷம் வைக்கப்பட்டது மாபெரும் பரபரப்புக்கும் பெரிய பெரிய குழப்பங்களுக்கும் வழிசெய்தது. முழுக் குற்றசாட்டும் சோயுர்பாய் மேல் விழுந்தது, அவளோ அதிர்ந்து கலங்கினாள், தான் அதைச் செய்யவில்லை, செய்ய அவசியமில்லை என மிகவும் ஒடிந்துபோனாள். சாம்பாஜி உளவியல் ரீதியாக குழம்பிப்போனான். ஒரு அரசனுக்கு எப்போதும் ஆபத்து உண்டு, அவன் தன் நிழலையும் நம்பக்கூடாது என்பது ராஜவிதி, அதே நேரம் ஒரு விஷயத்தைப் பலமுறை யோசித்துச் செய்யவேண்டும் என்பதும் அரசனுக்கான […]

சத்ரபதி சாம்பாஜி : 08

சத்ரபதி சாம்பாஜி : 08 1681 ஆம் ஆண்டு மே மாத மத்தியிலே ஔரங்கசீப்புக்கு ராஜபுத்திரருடனான போர்க்களத்தில் இருந்தபடி கடிதம் எழுதினான் முகமது அக்பர். அப்போது அவன் ஆஜ்மீர் எனும் அஜய்ன் மேரு பக்கம் இருந்து அவன் அதை எழுதினான். “உலக சக்கரவர்த்தியானவருக்கு வணக்கம், எம்மை நீங்கள் ராஜபுத்திருக்கு எதிரான கலவரங்களை அடக்கும்படி அனுப்பினீர்கள், நானும் மொகலாயச் சேனையின் உச்ச தளபதியாக நின்று இங்குக் கடமையினைச் செய்கின்றேன். ஆனால், நிலைமை இங்கு வேறுமாதிரியாக உள்ளது. எல்லா நடவடிக்கையினையும் […]

சத்ரபதி சாம்பாஜி : 07

சத்ரபதி சாம்பாஜி : 07 தன் ஆசனத்தில் தலைப்பாகையின்றி அப்படியே சரிந்துகிடந்தான் ஔரங்கசீப். சிவாஜிக்குப் பின் எளிதாக இந்துராஜ்ஜியத்தை வளைத்துவிடலாம், சாம்பாஜி பெரிய விஷயம் இல்லை என எதிர்பார்த்தவனுக்கு அந்தப் பர்ஹான்பூரில் கிடைத்த அடி இடியாக இறங்கியிருந்தது. சிவாஜி தன்னுடன் மோதும்போது அவனுக்கு 30 வயதுக்கு மேல் இருந்தது. ஆனால், 23 வயது சாம்பாஜி இவ்வளவு பெரிய அடியினை அதுவும் 300 மைல் தள்ளி வந்து தன் இதயம் போன்ற இடத்தில் அடித்த அடியினை அவனால் நம்பமுடியவில்லை. […]

சத்ரபதி சாம்பாஜி : 06

சத்ரபதி சாம்பாஜி : 06 சாம்பாஜி மொகலாயர்க்கு எதிரான தன் முதல் அடியினைச் சொல்ல சொல்ல எல்லோரும் கவனமாகக் கேட்டார்கள், அவனின் தாக்குதல் பர்கான்பூரைக் கொள்ளை அடிப்பதாக இருந்தது. அந்த நகரம் புவியியல் அமைப்பில் மிக முக்கியமானதாக இருந்ததால் இராணுவம் மற்றும் பொருளாதார அடிப்படையில் மிக மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் தப்தி நதி ஓரமாக அமைந்த அந்த இடமே வடக்குத் தெற்கின் இணைப்புப் புள்ளியாகவும் இருந்தது. இங்கு நீர்வளம் நிலவளம் முறையான […]

சத்ரபதி சாம்பாஜி : 05

சத்ரபதி சாம்பாஜி : 05 1680 ஆம் ஆண்டு ஆனி, ஆடி மாதங்களில் கனமழை கொங்கன் மற்றும் சாஹித்திரிய மலைப்பக்கம் வழக்கம்போல் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருந்தது. வருடத்தில் இவையெல்லாம் இந்துஸ்தானத்தின் பெருமழைக்காலங்கள். அரசுகள் சற்றே வழக்கமான பணியிலிருந்து ஓய்ந்து வெள்ளம், மீட்பு நிவாரணம் எனக் கவனம் செலுத்தும் காலங்கள். இந்தப் பெருமழையால் சாம்பாஜியும் ராய்காட் கோட்டையிலே முடங்க வேண்டியதாயிற்று. எனினும், வெள்ள நிலவரம், ஆற்றுநீர் நிலவரம், மக்களின் நிலை என எல்லாம் கேட்டு அறிந்து கொண்டவன் உரிய நடவடிக்கை […]

சத்ரபதி சாம்பாஜி : 04

சத்ரபதி சாம்பாஜி : 04 ஹம்பிராவ் காதில் அந்தச் சிப்பாய் தகவலைக் கூறியதும் முன் சென்று கொண்டிருந்த சாம்பாஜியினை வேகமாகப் பின்னுக்கு அழைத்த ஹம்பிராவ் ராஜாராமை திரும்பப் போகச் சொன்னார், சாம்பாஜி உள்ளே இழுக்கப்பட்டு சேனைகளின் கடும் காவலில் வைக்கப்பட்டான். சட்டென சில உத்தரவுகளைப் பிறப்பித்தான் ஹம்பிராவ். யாருக்கும் எதுவும் முதலில் புரியவில்லை, சாம்பாஜிக்கும் குழப்பமே மிஞ்சிற்று. எல்லாம் உறுதி செய்தவன் சாம்பாஜியிடம் ரகசியமாய்ச் சொன்னான், “என் தங்கை மொகலாயருக்குத் தூது அனுப்பியிருக்கின்றாள், சென்றவனைப் பிடித்துவிட்டோம் என்றாலும் […]

சத்ரபதி சாம்பாஜி : 03

சத்ரபதி சாம்பாஜி : 03 டெல்லியினை அடைந்த ஔரங்கசீப் செங்கோட்டையில் தன் அரச மண்டபத்தில் தன் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான். ஒவ்வொரு துறையாக விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது ஜோத்பூர் அரசு செய்யும் பெரிய கலகம் பற்றியும் நாடெல்லாம் எழுந்திருக்கும் புதிய நெருக்கடி பற்றியும் அவனிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆம், அவன் ஜிசியா வரியினை மீள விதித்து மீண்டும் இந்துக்களையும், சீக்கியரையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருந்தான். ஜிசியா வரிகுறித்து சிவாஜி வரலாற்றில் மிக ஆழமாகப் பார்த்திருந்தாலும் இங்கும் அதனைச் சுருக்கமாகப் […]

சத்ரபதி சாம்பாஜி : 02

சத்ரபதி சாம்பாஜி : 02 ஔரங்கசீப்பின் முன் நின்றிருந்த உசேனிடம் சொல்லத் தொடங்கினான் ஔரங்கசீப், “இப்போது அந்தக் கலகக்காரன் சிவாஜி அரசில் வாரிசு போட்டி வந்திருக்கும், அதுதானே” என்றவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். உசேனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக ரகசியமாக திரட்டப்பட்ட தகவல், அதுவும் அரண்மனை கோட்டைகள் தாண்டி மக்களிடம் கூட வராத தகவல் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்பது, அவன் பார்வையிலே அதைப் புரிந்துகொண்ட ஔரங்கசீப் சொன்னான். “என்ன பார்க்கின்றாய், அரசனுக்கு ஆயிரம் கண்களும் இரண்டாயிரம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications