விவேகானந்தரின் ராமபிரான்
சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்க சொற்பொழிவில் ராமனை ஏன் இந்துமதம் கொண்டாடுகின்றது, ராமன் பெருமையினை கேட்போர் மனம் உருகச் சொன்னார், அந்த உரை மஹா ஞானமானது, பரிபூரண ஞானிக்கு மட்டுமே சாத்தியமானது. “ஓ உலகத்தீரே, எங்களுக்கு இரு இதிகாசங்கள் இரு கண்கள் போன்றவை, அந்த இதிகாசங்கள் எங்கள் உயர்ந்த வேத வடிவின் வடிவங்கள். வேத நெறிகளை வாழ்க்கை முறையாக வாழ்வது எப்படி, தர்மப்படி அறத்தின்படி வாழ்ந்து பின் முக்தி அடைவது எப்படி என்பதை போதிப்பவையே எங்கள் இதிகாசங்கள். […]