பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் […]

சதாம் பற்றிய தொடர்…

ஒரு நண்பர் அழைத்தார், சதாம் உசேன் பற்றிய பதிவு பிரபல சேனல் ஒன்றில் டாக்குமெண்டரியாக வருகின்றது என்றார் சதாம் உலகறிந்தவர் , யாரும் அவரைபற்றி தொடர் எடுக்கலாம் என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்கள் வரிகள், உங்களிடம் ஏதும் அனுமதி பெற்றார்களா? என்றார் விஷயம் உறுதிபடுத்தபடவில்லை, யாராவது எதுவும் டிவியில் பார்த்திருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள். நிச்சயம் ராயல்டி வேண்டுமென்றொ ஏன் என் அனுமதி பெறவில்லை என்றோ மல்லுக்கு நிற்கபோவதில்லை, அவை எல்லாம் தரமில்லா செயல்கள் நம்மையும் […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 03

தானாக‌ ஆப்கானிஸ்தானில் போரிட்டுகொண்டிருந்த பின்லேடனுக்கு, அவர்களின் தலையீடும்,பின்னர் செய்த ஆர்ப்பாட்டங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது, பிரபாகரனுக்கு இந்தியா மீது வந்த அதே கோபம், கொஞ்ச காலம் அமெரிக்காவின் ஆசிய நிலையங்ளை தாக்கினார், பெரும் சேதங்கள் எனினும் அதிரவைக்கும் தாக்குதல் அல்ல. ஒரு அடி, மறக்கவே முடியாத பலத்த அடியாக இருக்கவேண்டும்,தழும்பாக பார்த்து பார்த்து அழ வைக்க வேண்டும், அடிக்கடி ராமேஸ்வர மீணவர்களை இலங்கையர் அடிப்பதுபோல அடிக்க முடியாது. ஒரு முறை தான் முடியும், செய்வதை திருந்த செய்யவேண்டும். […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 02

எல்லா அரபு அரசர்களையும் போலவே ஈரானிய மன்னர் ஷாவும் எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ண முடியாத பணம் வாங்கிகொண்டு, “எண்ணெய் கிடைத்தது எனக்காக “என பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருந்தார். ஈரான் ஷியா இஸ்லாமிய மக்களின் நாடு, நமது பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கிட்டதட்ட “தாழ்த்தபட்ட” இஸ்லாமியர், அவர்களுக்கு ஒரு அடையாளமிட்டு, தலைவராகி புரட்சி செய்து ஷாவையும், அவருக்கு உதவியாக வந்த நாட்டாமையையும் விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக்கினார் அயதுல்லா கோமேனி, என்றென்றைக்கும் அவரே ஷியாக்களின் தன்னிகரற்ற தலைவர்,வழிகாட்டி என சகலமும். […]

ஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் : 01

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்புநாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல […]