பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரோமாபுரி ராட்சசன் : 05

ரோமாபுரி ராட்சசன் : 05 உள்நாட்டு குழப்பம், பாம்பே சீசர் மோதல் என ரோம் கொஞ்சம் தள்ளாட எதிர்களும், ரோமையின் அடிமையாய் இருந்த நாடுகளும் குரலை உயர்த்தின‌ ரோமை சிங்கம் ஒன்று எகிப்திய மானின் பிடியில் சிக்கிவிட்டது என்ற பேச்சு வந்தப்பொழுது அவர்கள் சுதந்திர குரல் எழுப்பினர், சிங்கம் சிலிர்த்துகொண்டு ரோம் வந்தது எதிர்ப்பு கிளம்பிய இடமெல்லாம் சிங்கமென பாய்ந்தான் சீசர், ஆப்ரிக்கா முதல் இங்கிலாந்துவரை அடித்து நொறுக்கினான், அவனை எதிர்க்க யாருமில்லை, கப்பங்கள் குவிந்தன‌ Veni […]

எல்லைகாந்தி

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர் அது முடியாத பொழுது “காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்.” எங்களுக்கு தனி இந்தியா அமைத்து கொடுங்கள் […]

இந்தியாவினை மிரட்டுகின்றார் ட்ரம்ப்

ஒரு துப்பாக்கி விவகாரம் எப்படி எல்லாம் வெடிக்கும் என்றால் இப்படித்தான் அமெரிக்காவிடம் துப்பாக்கி கொள்முதல் செய்ய பிப்ரவரி 3ம் தேதி பேச்சு நடத்தியது இந்தியா, அவர்களும் மகிழ்வோடு இருந்தார்கள் 10 நாளில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காட்சிகள் மாறின, புட்டீனின் அமைதி இந்தியாவினை யோசிக்க வைத்தது நேற்று இந்தியா ஏகே 203 துப்பாக்கிகளை ரஷ்யாவோடு இணைந்து தயாரிப்பதாக சொன்னது விடுவாரா டிரம்ப் அமேசான் மற்றும் வால்மார்ட் ஆதரவுடன் செயல்படும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் போக்குகளைக் […]

ஸ்டாலின்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார் கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின் லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் […]

சந்திரசேகர் ஆசாத்

எண்ணற்ற தியாகிகளை சுதந்திரத்திற்காக கொடுத்தது இத்தேசம், அதுவும் இளம் தியாகிகள் ஏராளம் அவர்களில் ஒருவர்தான் சந்திரசேகர் ஆசாத். அவர் பெயர் சந்திரசேகர் , 15 வயதானபொழுது சத்தியாகிரகத்திற்காக கோர்ட்டில் நிறுத்தபட்டார், தான் யாருக்கும் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் சந்திரசேகர் என முழக்கமிட்டார் அன்றிலிருந்து சந்திரசேகர ஆசாத் என அறியபட்டார் காந்தி மேல் இளையொருக்கு வருத்தங்கள் வந்த காலமது, பிரிந்து சென்றவர்கள் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்றொரு அமைப்பினை ஏற்படுத்தி வெள்ளையனை தீவிரவாதம் மூலம் விரட்ட […]

பொறுப்பான நல்ல இந்திய தலைவர்

“இந்திய விமானப்படை விமானிகளுக்கு என் வணக்கம்” – ராகுல் காந்தி துளியும் அரசியலில்லை, கொஞ்சமும் குற்றம் சாட்டவில்லை இது மோடியின் பதவி நீட்டிப்பு தந்திரமென்றோ இல்லை வேறு அரசியல் ஒப்பாரியுமில்லை ஆம் தீவிரவாதத்தால் பாட்டியினையும், தந்தையினையும் இழந்த வலி அவரிடம் இருக்கின்றது அன்றே ஈழத்து பிரபாகரனின் ஏ1 முகாமினை இந்திய விமானபடை தகர்த்திருந்தால் ராஜிவினை இத்தேசம் இழந்திருக்காது அன்று புலிகளுக்கு எதிராக இந்திய விமானபடையினை களமிறக்காதது மாபெரும் தவறு இந்த வலிகளால் வளர்ந்த ராகுலுக்கு தேசத்தின் நலமும், […]

தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன் ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு […]

ரோமாபுரி ராட்சசன் : 04

ரோமாபுரி ராட்சசன் : 04 பாம்பே நம்பிக்கையாய் கரையில் இறங்கினான், காரணம் எகிப்தின் செப்டிமியஸ் மற்றும் பிலிப்பும் நின்றுகொண்டிருந்தனர் கூடவே ராஜகுரு சியோஸ் தன் ஆட்களோடு நின்றிருந்தான் மாவீரனான தன்னை அதுவும் எகிப்து மன்னரே வணங்கி உயில் எல்லாம் கொடுத்து மதித்த தன்னை எகிப்து கைவிடாது என அவர்களை தழுவ சென்றான் பாம்பே ராஜகுரு சியோஸை நோக்கி அவன் விரிந்த கரங்களோடு செல்ல, அவன் முதுகில் கோடாரியினை தாக்கினர் கயவர்கள், ஆயுதமற்ற நிலையிலும் போராட துணிந்தான் பாம்பே […]

தில்லையாடி வள்ளியம்மை

வெள்ளையன் உலகெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் சுரங்க வேலை என சகலத்திற்கும் தமிழரையே அழைத்து சென்றான் தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் ஆங்கிலேயருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான் அப்படி ஏகபட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான், அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி. அவருக்கு ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர்தான் வள்ளியம்மை பிறந்தது இதே பிப்ரவரி 22. அவள் பிறக்கும்பொழுது […]

ஜார்ஜ் வாஷிங்டன்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என முதலில் சொன்னவர் பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது […]