பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகம் எங்கும் பரவியிருந்த சநாதன ஞானம் – சாலமோன் அதற்கு ஒரு சான்று

இந்திய யூத தொடர்புகள் வரலாற்றில் மிக மிகப் பழமையானவை. யூத இனம் அன்றே அறிவைத் தேடிய இனம். எங்கெல்லாம் எதெல்லாம் சிறந்ததோ அதையெல்லாம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த இனம். அப்படிபட்ட இனம் அன்று பெரும் கலைகள், விஞ்ஞானம், மெய்யியல், ஆன்மீகம், தியானம் என பெரும் ஞானபூமியாக இருந்த ஹிமாசலத்துக்கு குறிப்பாக காஷ்மீரத்துக்கு அடிக்கடி வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காஷ்மீரத்து இந்து ஞானம் மேற்காசியாவில் அலை மோதியது. இந்த தொடர்ச்சிதான் இயேசு பிறந்தபோது மூன்று இந்து […]

“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா

இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல் இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள் அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் […]

“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்

“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?மெல்லிய திருவடி […]

பஞ்சாபிய சிங்கம் லாலா லாஜ்பதி ராய்

அந்த பஞ்சாபிய சிங்கம் மேல் பாரதிக்கு தனி அன்பும் அபிமானமும் இருந்தது, அவன் எழுதிய வரிகளோடே அந்த உத்தமான இந்தியனுக்கு அஞ்சலி செலுத்தலாம் “விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்அதன்கதிர்கள் விரைந்து வந்துகண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?நினையவர் கனன்றிந் நாட்டுமண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்யாங்களெலாம் மறக்கொ ணாதெம்எண்ணகத்தே லாஜபதி இடையின்றிநீவளர்தற் கென்செய் வாரேஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடுகடத்தியவர்க்கு ஊறு செய்தல்அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டாரென்றிடினும் அந்த மேலோன்பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமெனநெஞ்சினுளே பெட்பிற் பேணிவருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்ஓட்டியெவர் வாழ்வ திங்கே?பேரன்பு செய்தாரில் யாவரேபெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?ஆரன்பு நாரணன்பால் […]

நாதுராம் கோட்சே

//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை// ———————————- அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய […]

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

தமிழகத்தின் அடுத்த பெரும் திட்டமாக, அணுவுலைகள் மகேந்திர கிரி மையம், திருச்சி பெல், சென்னை ஆவடி, சூலூர் மற்றும் தாம்பரம் விமானபடைதளம், ஆவடி தொழிற்சாலை போன்ற பெரும் திட்டம் போல அடுத்த மகா முக்கிய திட்டத்தை தருகின்றார் மோடி. இதனால் தமிழக தென்மாவட்டங்கள் குறிப்பாக தேரிக்காடு என சொல்லப்படும் அந்த பின் தங்கிய வறண்ட பிரதேசங்கள் இனி வளர்ச்சியினை நோக்கி செல்லும். ஆம், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைவது உறுதியாகிவிட்டது, சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்ட […]

ஞானசித்தர் – சுப்பிரமணிய பாரதியார்

காசி ஒரு புண்ணிய நகரம், அது மாபெரும் பிரபஞ்ச சக்தியினை தன்னுள் வைத்துகொண்டு இந்துஸ்தானத்துக்கான வழிகாட்டிகளை, மிகச் சரியான ஆற்றல் மிக்கவர்களை, இறைசக்தி தேடிக் கொண்டவர்களை எதிர்பார்த்து கொண்டே இருக்கும். உரிய காலத்தில் உரிய நபர் அங்கு கால் வைத்துவிட்டால் தன்னிடம் வந்து அமர்ந்துவிட்டால் எல்லா சக்திகளையும் ஞானத்தையும் அவர்களுக்கு அள்ளி கொடுத்து அனுப்பி வைக்கும். அதன்பின் அந்த பிறப்பு செயற்கரிய சாதனைகள் பல செய்து உயர்ந்து நின்று ஜோதியாய் வழிகாட்டும். வரலாற்றில் ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், […]

சுதந்திர இந்தியாவின் முதல் சங்கி, பூரண இந்து – ராஜாஜி

அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி. அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி. லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காய் தியாகம் செய்த வ.உ.சி வகையறா. அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திர போராட்டம், அரசியல், தேசப்பணி என பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான். பிரிட்டிஷ் இந்தியாவில் தேர்தல்முறை அறிமுகப்படுத்தபட்டபொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லி கொடுத்தது அந்த மாமனிதனே. […]

ராமனை மீட்ட விஸ்வாமித்திரர் – அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர். ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர். சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு. லால் கிருஷ்ண அத்வாணி. கராச்சியில் பிறந்தவர். தேசப்பிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசப்பற்றாளர். இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார். சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை, நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை. நாடு ஒன்றே அவரின் மூச்சானது. […]

நான் எப்படி எழுத வந்தேன்?

நான் எப்படி எழுதவந்தேன் என்றால் என்னை இழுத்து வந்தவர் அவர்தான். சேட்டை அதிகமான மந்தியினை நோக்கி கல்லெறியும் ஒருவன், அட நமக்கும் கல்லெறிய வருகின்றதே என வீசிப் பழகி, பின் ஈட்டி எறிந்து , துப்பாக்கி சுட்டு பழகுவது போல் நம் நிலைமையும் ஆகிவிட்டது. நிஜத்தில் நாம் எதுவும் எழுதியதில்லை. 10ம் வகுப்பு படித்தபொழுது எதையோ எழுதிக்காட்டி “அதிகப்பிரசங்கி” என தமிழம்மா பேப்பரை கிழித்துபோட்டது நினைவிருக்கின்றது. அதன் பின் எதையும் எழுதியதில்லை. கட்டுரை போட்டியோ, பத்திரிக்கையோ எங்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications