பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது

நீங்கள் எம்மை பின் தொடர்பவர் என்றால் சமீபத்தில் நாம் ஒரு விஷயம் சொன்னதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் மெர்சல் படத்திற்கு பாஜக பொங்கியதை தொடர்ந்து, சிம்பு அவர்களை வம்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் அதன் மூலம் அவர் ஒரு பரபரப்பினை தேடிகொள்ளலாம் என சொல்லியிருந்தோம் நம்பிய சில நடிகைகளை சிம்பு ஏமாற்றி இருக்கலாம், ஆனால் நம்மை போல அவர் அல்ட்ராசிட்டியில் நம்பிக்கை கொண்ட யாரையும் அவர் ஏமாற்ற மாட்டார் ஆம், மோடியின் பணமதிப்பு நீக்க பிரச்சினையினை விமர்சித்து அவர் […]

வரும் ஜனவரியில் அங்கு வரலாம்

சென்னையில் எங்கு இருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள், அதில் வில்லங்க‌ கோஷ்டியின் ஸ்லீப்பர் செல்களும் அடக்கம் இப்போதைக்கு நாம் சென்னையில் இல்லை, ஆனால் வரும் ஜனவரியில்தான் அங்கு வரலாம் என திட்டமிட்டிருக்கின்றோம் சொல்லாமல் வரமாட்டோம், ஏறகுறைய பொங்கலுக்கு பின் சென்னை விஜயம் நடக்கலாம் ஆனால் ஒரு விஷயம், கண்டிப்பாக மாறுவேடம் தான். தமிழிசை வாழ்க என்றோ, தியாக தலைவி வாழ்க என்றோ அல்லது நியாயத்தை நிலைநாட்ட வந்த நிரந்தர தலைவன் பழனிச்சாமி வாழ்க என்றோ திரியும் கூட்ட்டதில் […]

அற்புத நண்பர் செந்தில் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்த முகநூலில் எழுதி என்ன சம்பாதித்த விஷயம் என்னவென்றால் ஏராளமான நண்பர்கள், அவர்களில் பலர் குறிப்பிடதக்கவர்கள் கடல்கடந்த தூரமோ, நேர இடைவெளியோ எதுவும் அதனை பாதிக்கவில்லை மாறாக நட்பு வளர்கின்றது அப்படி முகநூல் கொடுத்த அற்புத நண்பர் Senthil Kumar Krishnan என்பவருக்கு இன்று பிறந்தநாள் மனிதரையும் என்னையும் நட்பாக்கியது யாரென்றால் கலைஞர் எனும் ஆச்சரிய மனிதர். ஆம் கலைஞரை ரசிக்கும் தம்பிகளில் ஒருவராக வந்து பழகி இன்று மிகசிறந்த நண்பராகிவிட்டார் அவரை இன்னும் சந்தித்தது கூட இல்லை, ஆனால் […]

சமைப்பதும் உண்பதும்…

உண்பது எளிது, சமைப்பது கொஞ்சம் சிரமம், சமையலுக்கு தயார் படுத்துவது இன்னும் மகா சிரமம் வெங்காயம் உரித்து, இறாலை உடைப்பதற்குள் மகா எரிச்சல் வருகின்றது, அதிமுக அமைச்சர்களின் பேச்சினை கேட்பதை விட மகா பொறுமை இதற்கு அவசியம் இந்த இறால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? வாழை பழத்தோல் போல அதன் ஓடும் உரிந்தால்தான் என்ன? இன்னும் கொஞ்சம் அது பெரிதாக வந்திருந்தாலும் சிக்கல் இல்லை, டெங்கி கொசுவினை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் இதனை உரிக்க படும் […]

சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள் ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள் மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி […]

அந்த அழகு பெட்டகம் இனி இல்லை…

இன்றோடு கிட்டதட்ட 40 நாள் ஆகின்றது, கண்களை மூடும்பொழுதெல்லாம் அந்நினைவு வந்து சில சொட்டு கண்ணீரை சிந்த வைத்துவிடுகின்றது இவ்வளவு நாளும் சூரியனுக்கு கீழ் நாம் கடந்து போன நாட்களில் , சந்தித்த மிக பெரும் கருப்பு நாட்களில் அதுவும் ஒன்று. அவள் நான் தூக்கி வளர்த்த பெண் குழந்தை. மிக நன்றாகவே வளர்க்கபட்டாள், ஒரு வார்த்தை அவளை குறை சொல்ல முடியாது. அவள் இருக்கும் இடமும் தெரியாது, பேசும் குரலும் கேட்காது, தெய்வங்கள் நம்மோடு அமர்ந்தால் […]

தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள்

இன்று எனக்கு தெரிந்த தியாகத்தின் ஒரே திருவுருமான பாகம்பிரியாளின் பிறந்த நாள். அதுவும் எனக்காக தன் வாழ்வினை தியாகம் செய்தவர் என்ற முறையில் நான் பெரும் நன்றியுடையவனாகின்றேன் எனக்கு நன்றாக தெரியும், என்னோடு சராசரி பெண் வாழ்வது என்பது முடியவே முடியாத காரியம், ஏனென்றால் நான் அப்படித்தான். எதிலும் கவனமில்லை, எதுவுமே சீரியஸ் இல்லை என ஏதோ சித்தன் வழி செல்லும் ஒரு குழப்பாமான மனதிற்கு சொந்தகாரன், இதில் முன்கோபம் வேறு அவளுக்கு எனக்கும் சுத்தமாக பொருந்தாது, […]

ஞானி கண்ணதாசன் அழுத்தி சொன்ன வரிகள்…

“உன்னை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது” ஞானி கண்ணதாசன் அழுத்தி சொன்ன வரிகள்… தரம் தாழ்ந்தோரோடு உறவாயின் அவர்கள் நம்மை தன்போல் நினைத்துகொள்வர் போலும் தராதரம் பார்த்து பழகாவிட்டால் பெருத்த வேதனையே மிஞ்சுகின்றது என்பார் கண்ணதாசன். அனுபவித்து எழுதிய கவிஞனின் வரிகளில் அத்தணை உண்மை இருக்கின்றது “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என வள்ளலார் ஏன் வேண்டி நின்றார் […]

எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

அக்காலத்தில் குக்கர் கிடையாது, மைக்ரோ வேவ் இம்சைகள் கிடையாது, வெறும் மண்சட்டிதான் ஆனாலும் வெட்டிபோட்டால் ஆடு சமத்தாக வெந்திருக்கின்றது. எவ்வளவு நல்ல ஆடுகள் அவை.. இப்பொழுது என்னதான் குக்கரில் வேகவைத்தாலும் அது வேக மறுக்கின்றது, இப்போதுள்ள ஆடுகள் எல்லாமே கள்ளமும் கபடும் நிறைந்த ஆடுகள் போல‌ இவ்வுலகில் மனிதர்கள்தான் மாறிகொண்டே வருகின்றார்கள் என்றால், ஆட்டுகறியுமா மாறிகொண்டே வரவேண்டும்? நண்பர் Vivek Vivekanandam கொடுத்த பாதுஷா எனும் இனிப்பில் தொடங்குகின்றது தீபாவளி கொண்டாட்டம் நண்பர் கோவைக்காரர், அதனால் கோவை மக்களின் இயல்பான […]

இதனை சொன்னால் உனக்கு பேராசை என்கிறது உலகம்

ஊரில் மாடுமேய்த்துகொண்டிருந்தேன் மாட்டுக்கு 5 அறிவு நமக்கு ஆறு அறிவு , அதற்கும் நமக்கும் பொருந்தவில்லை கல்லூரி பக்கம் வந்தாயிற்று படித்து கணிப்பொறி பக்கம் வந்தால் அதற்கு பல அறிவு, நமது சிற்றறிவுக்கும் நமக்கும் பொருந்தவில்லை. ஆயிரம் சிக்கல்கள் ஒத்துவருவதாக தெரியவில்லை, வேறு வேலைக்கு செல்லலாம் என்றால் அங்கு பெரும் அறிவாளிகள் எல்லாம் இருக்கின்றார்கள், அவர்கள் மிதியடியினை கூட எடுக்க நமக்கு தகுதியில்லை நமக்கு இருக்கும் அறிவுக்கும் திறமைக்கும் மிக பொருத்தமான இடம் மாநில அல்லது மத்திய […]