பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணன் காட்டிய வழியம்மா!

அண்ணாவிடமிருந்து கண்ணதாசன் வெளிவந்த காலங்களில் அவரின் மனம் என்ன பாடுபட்டதோ கிட்டதட்ட நம் மனநிலையும் அதனை போலவே இருக்கின்றது அக்காலங்களில் கண்ணாதாசன் எழுதிய கட்டுரைகளை படித்து ஆறுதல் தேடிகொண்டாலும், அவர் எழுதிய மிக பிரமாதமான பாடலை பார்க்க முடிந்தது உயிராய் நினைத்தவர்களின் புறக்கணிப்பினை கவியரசை தவிர யாரும் இவ்வளவு அழுத்தமாக‌ சொல்லமுடியாது, கம்பன் கூட இந்த இடத்தில் தடுமாறுவான், ஆனால் கண்ணதாசன் அழகாக அடித்துபோட்டு செல்கின்றார். அண்ணாவினை பிரிந்து செல்ல அவர் எடுத்த மனநிலையின் இப்படி பாடலாக […]

சொந்த மண்ணுக்கு செல்லும் போது…

சொந்த மண்ணுக்கு செல்லும் டிக்கெட் கையில் கிடைத்துவிட்டாலே ஒரு இனம்புரியாத ஏக்கம் மனதில் வந்துவிடுகின்றது சோறு இறங்காது, தூக்கம் வராது, அந்த நினைவுகளை தவிர‌ வேறு எதுவும் தோன்றா நிலை அது இன்னும் சிலநாட்களில் அம்மண்ணை மிதிக்கபோகின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சி, ஆனால் சுவரில் அடிக்கபட்ட பந்தினை போல வேகமாக‌ திரும்பவேண்டும். என்ன வாழ்க்கை இது? பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால்தான் நிம்மதி என்பார் கண்ணதாசன், அது உண்மையும் கூட‌ அப்படி சென்றவுடனும் அழவேண்டும், விட்டு பிரியும்பொழுதும் […]

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம்…

நாளை திருவள்ளுவர் பிறந்தநாளாம் திருவள்ளுவர் பிறந்தநாளெல்லாம் அந்த சம்பவம் நினைவுக்கு வரும், ஊரில் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு வழக்கறிஞர் வெளியூர் வாசி, விடுமுறைக்குத்தான் ஊருக்கு வருவார் அவர் வந்துவிட்டால் பெரும் கூட்டம் அவருக்கு கூடும், காரணம் மனிதர் “தண்ணி”க்கு தண்ணீராக செலவழிப்பார். பின் ஏன் கூட்டம் கூடாது? இப்படியான கும்பல்கள் “அருள்” உச்சம் பெற்றபின் அவர்களை ரசிக்கவேண்டும், ஏராளமான காமெடிகள் அரங்கேறும் ஒரே நிபந்தனை நம் தலையில் அருள் இறங்கிவிட கூடாது, இன்னொன்று நமக்கெல்லாம் ஒரு சொட்டு […]

மகள் : முதல் வகுப்புக்கு செல்லும் முதல் நாள் ..

  முதல் வகுப்பிற்கு மகளை சேர்த்தாகிவிட்டது, லௌகீக வாழ்வின் கடமைகளில் அதுவும் ஒன்று பிறந்த 3 மாதத்திலிருந்தே பாலர் பராமரிப்பு இல்லங்களுக்கு செல்வதால் அவளுக்கு கொஞ்சமும் பயமே இல்லை, மிகுந்த மகிழ்வோடு செல்கின்றாள் அவளை பொறுத்தவரை எல்லோரும் 6 மாதத்திலே பள்ளிக்கு செல்வார்கள், காலையே சென்றுவிடுவார்கள், மாலைதான் அம்மா அப்பா தூக்கி செல்வார்கள். சாப்பிடுவது முதல் பேச தொடங்குவது வரை எல்லாமும் அங்குதான் அவள் பார்த்த உலகம் அது. இப்பொழுது ஒன்றாம் வகுப்பு, புது இடம் வேறு […]

போன பிறவியில் நான் எழுத்தாளனா?

ஹஹஹஹஹா… அப்பொழுது நான் எழுத்தாளனா? அதனால் கொன்றே விட்டார்களா? என்ன இது?. சரி எவ்வளவு சம்பாதித்தேன் என்பதையாவது சொல்ல கூடாதா? இப்பொழுதும் எதனையோ கிறுக்கிகொண்டே தான் இருக்கின்றேன், இது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் … ஆனால் இப்பிறவியிலும் கொல்ல தேடலாம், யாராக இருக்கும்? சொல்லித்தான் தெரியவேண்டுமா? நிச்சயம் அங்கிள் பாய்ஸாகத்தான் இருக்கமுடியும் அல்லது பங்காளிகளாக கூட இருக்கலாம் .. எனினும் ஹானஸ்ட், இன்னோசென்ட் எல்லாம் நமக்கு இப்பிறவியில் சரிவராதவை. பெரும் அயோக்கியனில் ஒருவன் நான் […]