பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் அப்படியே நீடிக்கின்றது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு அடுத்து அது நங்கூரமிட்டிருக்கின்றது காவேரி விவகாரம், மோடிக்கு கருப்புகொடி என பக்தாஸ் எல்லாம் கொஞ்சம் பிசியாக இருப்பதால் அந்த ஒரு விவகாரத்தை மறந்துவிட்டார்கள் என்ன விவகாரம்? முன்பு காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என ஒன்று வந்தது, காங்கிரஸ் ஆட்சிதான் அது. சுரேஷ் கல்மாடி என்பவர் எல்லாம் வறுத்து எடுக்கபட்டார். அன்று விளையாட்டு எல்லாம் ஊழல் இன்று விளையாட்டில் கூட நீதி, நேர்மை, வெற்றி […]

ஐபில் ஆட்டத்திற்கு விசில் சத்தம் வர ஆரம்பித்தாயிற்று

ஐபில் ஆட்டத்திற்கு விசில் சத்தம் வர ஆரம்பித்தாயிற்று. இனி சேப்பாக்க ஆட்டம் வேண்டாம் என சொல்பவர்களை டோனியின் மட்டையினை பிடுங்கி அடித்து விரட்டும் வெறிகொண்ட கூட்டம் உருவாகும் இதனால் மட்டையடியினை மண்டையில் வாங்குவதற்கு முன் அந்த அழிச்சாட்டிய கும்பல் அடங்குவது நல்லது கேமரா முன்னால் ஆடுபவர்களை விட்டுவிடுவார்களாம், ஸ்டெமப் முன்னால் ஆடினால் தடுப்பார்களாம் பன்னி கய்ஸ்…

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கின்றன, 72 நாடுகள் பங்கேற்றிருக்கின்றன‌ முன்னொரு காலத்தில் பிரிட்டனுக்கு கீழ் இருந்த நாடுகளின் அமைப்பு அது, அதனால் அவர்கள் ஆண்ட 72 நாடுகள் வந்திருக்கின்றன‌ இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மன், பிரான்ஸ், சீனா எல்லாம் வராது. அவைகள் விளையாட்டில் சூரர்கள். அப்படி இருந்ததால்தான் பிரிட்டன் ஆட்சிக்கு அடங்காமல் இருந்திருகின்றார்கள் அவர்களுக்கு அடங்கிய அப்பாவி 72 தேசங்கள் இப்பொழுது விளையாடுகின்றன, இதில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் முன்னணி இந்தியா 3 தங்கங்களை வென்றாயிற்று. இதில் […]

விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்குகிறது

இன்னும் சில வாரங்களில் உலகின் மிகபெரும் விளையாட்டு திருவிழாவான உலககோப்பை கால்பந்து ரஷ்யாவில் தொடங்க இருக்கின்றது இதனால் தகுதி சுற்றுகள் எனப்படும் நெட்டி முறித்து கிளம்பும் ஆட்டங்கள் தொடங்கிவிட்டன‌ தென்னமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுமே ஆதிக்கம் செலுத்தும் போட்டி இது பிரேசில், அர்ஜெண்டினா என லத்தீன் அமெரிக்க நாடுகளும், ஜெர்மன் பிரான்ஸ் ஸ்பெயின் போர்ச்சுகல் என ஐரோப்பிய நாடுகளுமே மகா வலுவான அணிகள் இதில் நேற்று உலக சாம்பியன் ஜெர்மனை பிரேசில் வென்று முகத்தில் குத்திவிட்டது. பிரேசில் […]

ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ்

உலககோப்பை தகுதி போட்டிக்கு ஸ்காட்லாந்துடன் மல்லுகட்டி வென்றிருக்கின்றது வெஸ்ட் இண்டீஸ் ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகினையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ், கத்துகுட்டி அணியான ஸ்காட்லாந்திடம் ஆடி தகுதிபெறும் அளவிற்கு வீழ்ந்திருக்கின்றது அரசியலில் மட்டும் என்ன வாழ்கின்றது? திமுக எனும் அகில இந்தியாவிற்கே ஒரு காலத்தில் சவால் விட்ட‌ கட்சி இங்கு தமிழக பாஜகவுடன் தடுமாற்ற ஆட்டம் ஆட தொடங்கி இருக்கின்றது காலத்தின் கோலம் என்பது சத்தியமாக இதேதான்

ஹரியான சிங்கத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளையன் இந்தியாவில் பஞ்சாபில்தான் கிரிக்கெட்டை விதைத்தான், ஹாக்கியின் பூமியாக இருந்த பஞ்சாப் பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்றபின்பும் இந்திய பஞ்சாப் அட்டகாசமான வீரர்களை கொடுத்தது, அது ஹரியானா என பிரிந்த பின்பும் கொடுத்துகொண்டே இருக்கின்றது அப்படி ஹரியானாவில் பிறந்த சிங்கம்தான் கபில்தேவ் கிரிக்கெட் அவருக்கு உணர்வில் கலந்திருந்தது, நல்ல விளையாட்டு வீரனுக்கு மனமும் உடலும் உதிரமும் ஒரே நோக்கில் ஓட வேண்டும் கபிலுக்கு அப்படி ஓடியது அதுவரை வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள்தான் வலுவானவர்கள், இந்திய […]

இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது

இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது என்பதை விட அதில் அரசியலும் நடக்கின்றது என்பது புரிகின்றது. விராட் கோஹ்லிக்கும் அணியில் சில வீரர்களுக்கும் நடக்கும் அரசியல் ஒன்றும் ரகசியமல்ல. ஹோலி திருமணம் செய்ய லீவ் போட்ட நிலையில் இலங்கையினை எதிர்கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் தடுமாறியது. “நான் இல்லா இந்திய அணி என்ன பாடு படுகின்றது பார்த்தீர்களா..” என கோஹ்லி சொல்ல அது வசதியாயிற்று அதற்கு பதிலடியாக அவர் இல்லாவிட்டாலும் மாபெரும் வெற்றி அடைவோம் , […]

விசித்திரமான கிரிக்கெட் உலகிது

ஆசிய,ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருமானம், கூடவே தொழில்புரட்சி அதாவது ஏகபட்ட உற்பத்தி, இப்படியாக 18ம் நூற்றாண்டில் செல்வத்தின் உச்சத்தில் இருந்தது பிரிட்டன், அவர்களுக்கு அன்று பெரும் சவால் விடும் நாடுகள் இல்லை, ஒரே ஒரு பெரும் மிரட்டல் நெப்போலியன், அவனையும் முடித்தாயிற்று. பணம் தமிழக டாஸ்மாக்காய் கொட்டிற்று, பணம் அதிகமானால், வேலைக்காரர்கள் அதிகமாவார்கள். வேலைக்காரர்கள் அதிகரித்தால் முதலாளிகளுக்கு ஓய்வுநேரம் அதிகரிக்கும், பின்னர் என்ன விளையாட்டுத்தான். பிரிட்டிசார் எப்பொழுதுமே அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், ஸ்டைலாக ஆட ஒரு பழைய ஆட்டத்தினை […]

தோனி நீ இந்திய அணியினை கரைசேர்த்த தோணி

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதாவதுதான் ஜாம்பவான்கள் தோன்றுவார்கள், அவர்களால் முடியமட்டும் விளையாடி அவர்களே விரும்பும்பொழுது ஓய்வு கொடுப்பதுதான் சரி ஆனால் இங்கு அப்படியல்ல எந்த சாதனையாளன் சிறிது சறுக்கினானாலும் பொங்கிவிடுவார்கள், உடனே வெளியே போ என கத்துவார்கள் கவாஸ்கருக்கு மட்டுமே இங்கு அந்த வாய்ப்பு வந்தது ஸ்ரீகாந்த் என்ற , சச்சினுக்கு முன்னோடியான அவருக்கும் இதே சிக்கல்கள் லேசாக கிளம்பின‌ கபில்தேவ் எனும் இந்திய கிரிக்கெட்டுக்கே புத்துயிர் பாய்ச்சிய, இந்திய கிரிக்கெட்டின் பெரும் அடையாளமான கபில் கடைசி காலங்களில் இச்சிக்கலை […]

கால் பந்து வீரர் மாரடோனா பிறந்த தினம்

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு 1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது. அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார். 1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது. கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications