பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

  ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்? அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை […]

மலையக மக்களை பற்றி சொன்னால் …

மலையக மக்களை பற்றி சொன்னால் அப்படியா? அப்படி கொஞ்சம் தமிழர் உண்டா? என வியந்து கேட்கின்றார்கள் இது கூட தெரியாமலா ஈழத்திற்கு கொடிபிடித்தார்கள் என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கின்றது வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் இந்த சிக்கலை பட்டும் படாமலும் சொல்லி வந்தவர் கலைஞர், மலையக மக்களை நேசித்த‌ பத்மநாபா போன்றவர்கள் மீது அன்றே அவருக்கு ஒரு அனுதாபம் இருந்தது ஈழபோராட்டத்தில் இப்படி எல்லாபிரிவினையும் அவர் அழைத்து செய்த ஆலோசனைக்குத்தான் புலிகள் வர மறுத்தனர், ஆனால் எம்ஜிஆர் அழைத்தவுடன் ஓடினர் […]

இலங்கைத் தமிழரும், இந்திய பிரதமர் இலங்கைப் பயணமும்….

இலங்கை பிரச்சினை என்றால் ஈழதமிழர் என்பார்கள், சிங்களகொடுமை , புலிகள், போர் , மறக்காமல் காங்கிரஸ் கலைஞர் துரோகம் இப்படித்தான் செய்திகள் வரும் இலங்கையில் மூவிதமான தமிழர்கள் உண்டு, ஈழதமிழர், இஸ்லாமிய தமிழர், மலையக தமிழர் இதில் ஈழதமிழரை பற்றித்தான் எல்லோரும் பேசுவார்கள், இஸ்லாமிய தமிழரும், மலையக தமிழரும் மறக்கபட்டவர்கள் இஸ்லாமிய தமிழர்களின் பிரச்சினை வேறுமாதிரியானது, முதலில் சிங்களனும் யாழ்பாண தமிழனும் அவர்களை போட்டுத்தான் அடித்துக்கொண்டிருந்தான், பின் சிங்கள யாழ்பாண மோதல் வந்தபின் புலிகள் மட்டும் அடித்துகொண்டிருந்தனர் […]

கந்தன் கருணை இல்லம் : புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம் அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று […]

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடி கொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம்

நான் சொல்லும்படி கேட்டிருந்தால் குர்துகள் போல புலிகள் போராடிகொண்டிருப்பார்கள் : நார்வேயின் எரிக் சோல்ஹிம் ஈழதமிழரை விட பெரும் சிக்கலான இனம் குர்து, ஈழத்தின் எதிரி சிங்களம், கொஞ்சம் ராஜதந்திரமாக முயற்சித்திருந்தால் ஈழம் என்றோ தன்னாட்சி பிரதேசமாக மாறியிருக்கும், புலிகளின் பிடிவாதம் அதனை அழித்தது, புலிகளும் அழிந்தனர் ஆனால் குர்து இனம் மூன்று நாடுகள் சந்திக்கும் முச்சந்தியில் சிக்கியது, சிரியா, துருக்கு, ஈராக் என முன்று நாடுகளை அவர்கள் சமாளிக்க வேண்டும் குர்து போராளிகள் இந்த மூன்றுநாடுகளுடனும் […]

இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது: ஓபிஎஸ் கண்டனம் ஆமாம், ஜெயலலிதாதான் தமிழக படைகளை அனுப்பி இலங்கை கடற்படையினரை மிரட்டி வைத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது ஜெயா காலத்தில் தமிழக மீணவர்கள் இலங்கை தாண்டி, இந்தோனேஷியா வரை சென்று மீன்பிடித்தனர் என நம்பிகொள்ளுங்கள் மெரினாவினை சுத்தபடுத்துகின்றேன் என சொல்லி சொந்த தமிழக மீணவர்களை சுட்டுகொன்றவர் எம்ஜிஆர், எத்தனை பேர் செத்தார்கள் என்பது இதுவரை தெரியாது இடிந்தகரை மீணவ‌ மக்கள் அடித்து நொறுக்கபடும் பொழுதும், சிலர் சாகும்பொழுதும் […]

கொஞ்சம் பக்கத்து நாட்டையும் பார்ப்போம்…

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன : சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார். இப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டாம் தளபதியாரே. புலிகளை அழித்தது கலைஞரும் சோனியாவும் என எவ்வளவு கஷ்டபட்டு இங்கு பேசவைத்திருக்கின்றார்கள், அதனை கெடுக்கவா பார்க்கின்றீர்?? புலிகளின் கப்பலை கடலில் நீந்தி சென்று பார்த்து காட்டி கொடுத்தது கலைஞர், உடனே அமெரிக்காவிடம் சொல்லி அழித்தது சோனியா, இந்த கலைஞர் சொன்னவுடன் சோனியாவிடம் நள்ளிரவிலே […]

தனிநாடு வாங்கபோகின்றோம் என ஆடிய புலிகள்

ஈழ தமிழ்மக்களின் நிலங்களிலிருந்து சிங்கள ராணுவம் முழுமையாக வாபஸ் ஆகாத நிலையில் ஒரு தமிழ்பெண்ணின் சோகம் இப்படி இன்று இருந்தது “சிங்கள ராணுவம் எல்லாம் அக்காலத்தில் வடக்கே வராது, அதன் போக்கில் கொழும்பு பக்கம் இருக்கும் தனிநாடு வாங்கபோகின்றோம் என புலிகள் ஆடிய ஆட்டத்தினை அடக்கத்தான் சிங்கள ராணுவம் வந்தது தனிநாடு வாங்க கிளம்பி, தமிழக நிலங்களை எல்லாம் சிங்கள ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு புலிகள் அழிந்து போயினர்” ஆக சிங்கள ராணுவத்தை வலிய அழைத்து தமிழக நிலங்களை […]

இலங்கை தேநீரும், மலையக தமிழரும்…

இலங்கை தேநீருக்கு அப்படி ஒரு சுவை, தமிழரின் உழைப்பில் விளைவதாலோ என்னமோ எந்த பானமும் கொடுக்காத திருப்தியினை மலையக தேநீர் கொடுக்கின்றது உலகில் மிக மோசமான அபலை வாழ்க்கை வாழும் தமிழர்கள், அந்த தேயிலை தோட்ட தமிழர்கள் ஆனால் அவர்களின் நிலைபற்றி யாரும் பேசமாட்டார்கள், எந்த உணர்வாளனும் பேசமாட்டான், முழங்கமாட்டான் சரி அவர்கள் உழைப்பின் தேநீரையாவது தமிழகத்தில் கிடைக்கவிடுவானா என்றால், அய்யகோ அது இலங்கை அரசுக்கு செல்லும் பணம் அதனால் புறக்கணிப்போம் என கிளம்புவார்கள் அது தமிழுணர்வு, […]

பிரபாகரன் இப்படிபட்ட பைத்தியக்காரனா?

கலைஞர் ஈழத்தில் தமிழர் சாகும்போது வேடிக்கை பார்த்த்தாராம், அதனால் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது இவர்கள் வேடிக்கை பார்ப்பார்களாம் இப்படி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியும், அமைதிபடை காலத்தில் அவர் காட்டிய புலி அபிமான செயல்கள், ஆட்சி இழந்தது என பல பார்த்தாகிவிட்டது ஈழப்போர் எப்படி நடத்தபட்டது என்பதையும் சொல்லியாகிவிட்டது, பிரபாகரன் எப்படிபட்ட பைத்தியக்காரனாக இருந்தான் என்பதனை சமீபத்தில் இலங்கை பத்திரிகையாளர் எழுதியதில் புரிந்துகொள்ளலாம், அவர் பாலசிங்கத்திற்கு நெருக்கமானவர் அதாகபட்டது நார்வே, ஜப்பான் என எல்லா […]