ஆடி பூரம்
இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது […]