Give us this day our daily bread.
இயேசுவின் சீட கோடிகள் இந்த நாம் தமிழர் திமுக போல முரட்டுதனமான ஆசாமிகளாக இருந்தன, மீன்பிடித்தல் தவிர எதுவும் அறியா மகா முரடர் கூட்டம் அது
ஆனால் இயேசுவினை நம்பி பின்னால் வந்தனர், இயேசு தனித்து பிரார்த்திக்கும் பொழுது பார்த்து கொண்டே இருந்தனர் பின் எங்களுக்கும் பிரார்த்திக்க கற்றுகொடுங்கள் என கெஞ்சினர்
இயேசும் தன் பிரசித்தி பெற்ற “பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே.. உம்முடைய நாமம்..” என தொடங்கி அந்த ஜெபத்தை கற்றுகொடுத்தார் அது கிறிஸ்தவ சுவாசமாயிற்று
தமிழகத்தில் கிறிஸ்தவம் பரவும் பொழுது காயத்திரி மந்திரம், விஷ்ணுமந்திரம் போன்றவற்றை ஒழிக இது “பரலோக மந்திரம்” என்றே சொல்லபட்டது
அதை தெரியாதன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது, நல்ல கிறிஸ்தவன் அதை ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 தடவையாக சொல்ல நேரிடும், நாமும் சொன்னது உண்டு
அப்படி சொன்னதன் பலன் இப்பொழுது தெரிகின்றது
ஆம், அதில் “எங்கள் அனுதின அப்பத்தை எங்களுக்கு தந்தருளும்” என்றொரு வரி உண்டு.
தமிழில் பின்னாளில் அனுதின உணவு என்றாக்கிவிட்டார்கள், ஆனால் வெள்ளையன் “Give us this day our daily bread” என அப்படியே வைத்தான்
இங்கு அடிக்கடி ஆங்கில வழி பிரார்த்தனைக்கு சென்றதால் , அப்படியே ” Our heavenly Father…”Give us this day our daily bread” என சொல்வது முன்பு வழக்கமாயிருந்தது
அதன் பலனோ என்னமோ இப்பொழுது 3 வேளையும் என்பதே உணவாகிவிட்டது, மூன்றுவேளையும் அதையே உண்பது முடியாதுதான் ஆனால் வழி?
ஆக “Give us this day our daily bread என கேட்டபடி தருகின்றார் இயேசுநாதர்
அவர் வல்லமையுள்ள தேவனாய் இருக்கின்றார், அல்லேலூயா
கேளுங்கள் தரப்படும் என இதைத்தான் இயேசு சொன்னாரோ என்னமோ?
அவரும் பாவம் தமிழனாய் பிறந்தால் நம் வலி தெரிந்திருக்கும், அவர் யூதனாய் பிறந்ததால் இந்த அப்பம், மீன் , ஒயின் தவிர என்ன தெரியும்? அது அவர் குற்றமல்ல
இனி அவரிடம் ஒன்றுமே கேட்க கூடாது,
கேட்டாலும் “எங்கள் அனுதின இட்லி தோசை சாம்பார்,ரசம் அவியல் பொறியல் சப்பாத்தி குருமாவினை எங்களுக்கு தந்தரும்” என்றுதான் கேட்கவேண்டும்
முதன் முதலில் தமிழில் பைபிளை மொழி பெயர்தவனை தேடி கொண்டிருகின்றேன் “ஏ கிராதகா அப்பம் என்பதை ஆப்பம் என்றாவது மாற்றியிருக்க கூடாதா? , உன் மொழிபெயர்ப்பில் கொரொனா தாக்க..”