இலங்கை தமிழருக்கு உதவிபொருட்களை வழங்குவதாக திமுக அறிவித்ததற்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மனமுருகி நன்றி தெரிவித்திருக்கின்றார் எந்த ராஜபக்சே? திருமா, வைகோ உள்ளிட்ட திமுகவின் கூட்டணியினரால் போர் குற்றவாளி, தமிழின விரோதி என்றெல்லாம் விமர்சிக்கபட்ட அதே ராஜபக்சே போகிற போக்கில் திடீரென ரஜபக்சே அறிவாலய பக்கம் வந்தால் கூட ஆச்சரியமில்லை போலிருக்கின்றது, அப்படி வந்தால் அங்கிள் சைமன் நிலை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை
மிகபெரிய வெடிமருந்துகளுடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பஞ்சாபிய எல்லையில் கைது செய்யபடுவது கவலை அளிக்கும் விஷயம் இந்தியாவின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் வலுவாக இருப்பதால் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கபடுகின்றன என்றாலும் மிகபெரிய தாக்குதலுக்கு எதிரிகள் தொடர்ந்து திட்டமிடுகின்றார்கள் என்பது கூடுதல் கவனத்துக்கு வழி செய்கின்றது பஞ்சாப் அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது, சர்வதேச உளவு அமைப்புக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் நல்லுறவால் தெய்வாதீனமாக ஒவ்வொரு ஆபத்தும் முறியடிக்கபட்டு கொண்டே இருக்கின்றது
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 10
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 10 “நிலாமண்ட பத்தி னிறைந்த வமிர்துண்ணில்உலாவலா மந்தரத்தின் மேல்” இக்குறள் “நிலா மண்டபத்தில் உறைந்த அமிர்து உண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்” என பிரிந்து பொருள் தரும் நிலா மண்டபம் என்பது உச்சியில் இருக்கும் சக்கரத்தை குறிக்கின்றது இன்னும் சூரிய சந்திர கலை நாடிகளின் சேர்க்கையினை குறிக்கின்றது அந்த உச்ச சக்கரம் துலங்கி அமிர்தம் வழியும் பொழுது அதை உண்டால், அன்னாக்கில் […]
இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு
இஸ்ரேல் தன் 75ம் ஆண்டு சுதந்திர நாளை கொண்டாடுகின்றது, இந்த உலகில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் போராடி நாடு அடைந்த இனம் அது அவர்களின் நீங்கா துயரத்துக்கும் கடைசியில் வெற்றி அடையவும் ஒரே காரணம் பைபிள் அந்த இயேசு நிச்சயம் இயேசு எனும் யூதர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இன்று அடையாளமற்ற மிக சிறு இனமாக யாசிதி போல பார்சி போல யூத இனமும் நாடற்று போயிருக்கும், இயேசு எனும் பெயரில் பைபிள் உலகெல்லாம் திணிக்கபட்டது, அந்த […]
ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் மோடி
ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் மோடி பிரான்ஸ் அதிபரை அவரின் அதிகார பூர்வ மாளிகையான எலிசி மாளிகையில் சந்தித்திருக்கின்றார் இம்மாதிரி அந்நாட்டு அதிபர் மாளிகையில் சந்திப்பது மிக உச்சபட்ச மரியாதைகளில் ஒன்று, அமெரிக்க அதிபர் அயல்நாட்டு அதிபரை சாதாரண மேடையில் சந்திப்பதற்கும் வெள்ளைமாளிகைக்கு அழைத்து சந்திப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா அப்படி. இந்த பெரும் மரியாதை மூலம் உலகுக்கு இந்தியா சொல்லவரும் விஷயம் சில உண்டு இந்தியா பிரான்ஸுடன் பல ராணுவ தொடர்புகளை கொண்டிருக்கின்றது, இந்தியாவின் பழைய ரஷ்ய ஆயுதங்களை […]
காலை கழுவும் சடங்கு
கிறிஸ்தவ கத்தோலிக்க ஆலயங்களில் காலை கழுவும் சடங்கு பெரிய வியாழனில் நடக்கும் அதாவது இயேசு கொல்லபடுவதற்கு முன்பு மேற்காசிய கலாச்சாரபடி சீடர்கள் காலை கழுவி முத்தம் செய்தாராம், அது இன்றளவும் கத்தோலிக்க சம்பிரதாயம் அது தமிழக கத்தோலிக்க ஆலயங்களிலெல்லாம் நடக்கும் அன்று குருவானவர் சீடர்கள் அல்லது சாமான்யர்கள் பாதங்களை தன் கையால் கழுவி முத்தம் செய்வார் இந்த பகுத்தறிவு கூட்டம் என்றாவது மனிதன் காலை மனிதன் கழுவுவது தவறு அது சமூக இழிவு, சமூக நீதிக்கு எதிரானது […]
இந்து அறநிலையதுறைக்கு ஒரு அரசியல்வாதி எப்படி தலமையேற்க முடியும் என்பதுதான் தமிழக இந்து ஆலய நிர்வாகங்களில் எழும் மிகபெரிய குழப்பம் இந்து அறநிலையதுறை ஆன்மீக ஆலயங்களை பரிபாலனம் செய்ய ஏற்படுத்தபட்டது என்றால் அதற்கு ஒரு மடாதிபதியோ அல்லது துறவிகளின் கூட்டமைப்போதான் அதற்கு தலமை ஏற்றிருக்க வேண்டும் அது அல்லாது ஆன்மீகமோ மத சம்பிரதாயங்களோ வேதங்களோ அதன் பாரம்பரியமோ அறியாதவர்களை அமைச்சர்கள் என்பதும் அவர்கள் கீழ் ஆலயங்கள் இயங்க வேண்டும் என்பது சரியல்ல இங்கு நடந்துவிட்ட குழப்பம் ஆலயத்தை […]
திமுகவின் ஒருவருட ஆட்சி
திமுகவின் ஒருவருட ஆட்சி பற்றி அவர்களே சரியான விளக்கம் அளிக்க முடியாமல் ஒருவருட சாதனை என எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாமல் இருக்கும் கனத்த அமைதி ஒன்றே உண்மை நிலையினை உலகுக்கு சொல்லும் அவர்கள் எத்தனையோ நூறு வாக்குறுதிகளை அள்ளி எறிந்துதான் வந்தார்கள், அந்த வாக்குறுதியில் ஏதாவது சரியாக நிறைவேற்றபட்டிருக்கின்றதா என்றால் இல்லை மதுகடைகள் அப்படியே நீடிக்கின்றன, மேற்கொண்டு சரக்கு விலை உயர்ந்திருக்கின்றது பால் விலை உள்ளிட்ட விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன, சொத்துவரி உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்திருக்கின்றன இது […]
ராமானுஜர்
ஒன்பதாம் நூற்றாண்டில் வைணவ மறுமலர்ச்சி ஏற்பட்டது, ஆதிசங்கரரின் எழுச்சிக்கு பின் சைவமும் வைணவமும் வளர்ந்தன அந்த வைணவ பரம்பரை நாதமுனிகள் என்பவரிடம் இருந்து தொடங்குகின்றது, சைவத்தில் நம்பியாண்டார் நம்பி போல வைணவத்தில் அவர்தான் ஆழ்வார்கள் வரலாறு இன்னும் பல விஷயங்களை தொகுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கினார், ஆச்சாரிய குருபரம்பரை அவரால் தோற்றுவிக்கபட்டது அந்த பரம்பரையில் ஆளவந்தார் எனும் யமுனாச்சாரி அவர் திருவரங்கத்தில் இருந்து மிகபெரிய வகையில் வேத விளக்கங்களுடன் வேத பரிபாலனுமும் பகவான் சேவைகளும் செய்துகொண்டிருந்தார் […]
ஆதி சங்கரர்
இந்துமதம் மகா சூட்சுமனானது, அது எக்காலமும் எதிரிகளை கொண்டிருக்கும் அந்த எதிரிகள் வடிவம் எதுவோ அதற்கேற்ப தன்னில் ஒரு வடிவினை அது உருவாக்கும் அரிஸ்டாட்டிலின் தயாரிப்பில் அலெக்ஸாண்டர் வந்தால் அது சாணக்கியனின் குப்தனை உருவாக்கும் முகமது கோரி வந்தால் அது நாயக்க மன்னர்களை உருவாக்கும், அவுரங்கசீப் வாள் எடுத்தால் அது சிவாஜியினை உருவாக்கி வாள் கொடுக்கும் அப்படிபட்ட இந்துமதம் தத்துவ விளக்கம் என இந்துமதத்தை சமணமும் பவுத்தமும் குழப்பிய காலங்களில், இந்த சைவ சமயம் பெரும் இருளில் […]