பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விநாயகர் அனுபூதி : 16 to 20

விநாயகர் அனுபூதி : 16 “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” பாடல் இப்படிப் பிரியும். “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர!யான்சாற்றும் தமிழ் மாலை தனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” விநாயகப்பெருமானே, “உன் பெரும் சக்தி தெரியாமல், அறியாமல் அறியாமையால் நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னிப்பாயாக. கோபம் தவிர்ப்பாயாக‌. நான் உன்னை துதித்துச் சாற்றும் தமிழ்மாலையினை உன் […]

விநாயகர் அனுபூதி : 11 to 15

விநாயகர் அனுபூதி : 11 “வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிரஎஞ்சித் தமதில் இனிதே உனதுகஞ்சக் கழல்வை கணநா யகனே” தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய் என்பது பொருள். ஐம்புலன்களையும் அடக்காமல் எதிலும் வெற்றி இல்லை.அதுவும் ஆன்மீகப் படிநிலையில் இந்தப் புலனடக்கம் மிக மிக முக்கியமானது. […]

விநாயகர் அனுபூதி : 06 to 10

விநாயகர் அனுபூதி : 06 “ஒருகொம் புடையான் உயர்மோ தகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமா குமெலாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” பாடல் புரிந்துகொள்ள எளிதானது. “ஒரு கொம்பு உடையான் உயர்மோதகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமாகும் எல்லாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” அவன் ஒரு தந்தம் உடையவன், மோதகத்தை விரும்புபவன், விடை எனும் காளைமேல் ஏறிவரும் சிவனின் குமரன், வண்டுகள் மொய்க்கும் மாலையினை அணிந்திருப்பான், அடியார்கள் சுகமாக நிம்மதியாக வாழ எல்லா வரத்தையும் […]

விநாயகர் அனுபூதி : 01 to 05

விநாயகர் அனுபூதி : 01 முருகம்பெருமானுக்குக் கந்த சஷ்டி கவரம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் எனப் பல வகை பாடல்களைப் பின்னாளில் அடியார்கள் பாடிவைத்தனர். இதன் முன்னோடி விநாயகப் பெருமானுக்கான வழிபாடு விநாயக வழிபாடு எனும் மூத்த வழிபாட்டை சப்த ரிஷிகள் செய்தார்கள், ஒளவையார் செய்தார் இன்னும் ஏகப்பட்டோர் விநாயகப் பெருமானின் பெருமைகளை வகை வகையாக பாடிவைத்தார்கள். நாயன்மார்கள் வரலாற்றை முதலில் பாடிய நம்பியாண்டார் நம்பி பெரும் விநாயக அடியார். இப்படிப்பட்ட வரிசையில் முக்கியமானவர் காசிப […]

காளிதாசனின் ரகுவம்சம் : 36 to 40

காளிதாசனின் ரகுவம்சம் : 36 வசந்த கால துவக்கத்தில் கர்னிகாரமரம் (கோங்குமரம்) அக்னிஜுவாலை போன்ற தன் மலர்களைப் புஷ்பித்திருந்தது, மெல்லிய இலைகொழுந்துகள் மேல் பொன்னிறத்தில் மின்னிய அப்பூக்கள் வசந்த கால லட்சுமிதேவி பூமிக்கு அருளிய பொன் நகைகள் போலிருந்தன. அந்த கர்னிகாரமரத்தின் பொன்னிற பூக்களை விரும்பி பறித்துத் தங்கள் தலையில் மிகுந்த ஆசையுடன் பெண்கள் அணிந்து கொண்டனர். செழித்த மாஞ்சாடி வகை மரங்கள் அழகான மலர்களுடன் பூத்துக் குலுங்கியது, அது அம்மரத்துக்குத் திலகமாய் அமைந்தது, அம்மலர்களுக்காக அம்மரங்களின் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 31 to 35

காளிதாசனின் ரகுவம்சம் : 31 அஜன் தன் நல்லாட்சியினைத் தொடர்ந்தான், அவன் ஆண்மையுடன் ஆளும் பூமி எனும் பெண்ணும் இந்துமதியும் அவன் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக தன்னிடமுள்ள எல்லாமும் கொடுத்தார்கள். பூமிபெண் அவனுக்குத் தன்னிடம் உருவான எல்லாவற்றையும் சிறந்து கொடுத்தாள். அப்படியே இந்துமதியும் அழகான ஆண்மகவினை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தாள். ஆயிரம் கரங்களைக் கொண்ட சூரியனுக்குப பிரகாசம் உடையவனும், பத்து திசைகளிலும் பெரும் புகழ் பெறப்போகும் மகனை தசரதன் எனப் பெற்றாள் இந்துமதி, அவனே பின்னாளில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 26 to 30

காளிதாசனின் ரகுவம்சம் : 26 அஜனைக் கண்டதும் இந்துமதி முகத்தில் ஏற்பட்ட மெல்லிய நாணத்தைக் கண்ட ஸூனந்தை மெல்ல புன்னகைத்தாள். இதனால் நாணத்தில் சிவந்த அவளைப அஜன் முன் நிறுத்திச் சொல்லத் தொடங்கினாள், அவளின் இயல்பான பேச்சுவன்மை இப்போது இன்னும் அழகாக கூர்மையாய் இருந்தது. “பெருமை மிகு இஷ்வாகு குலத்திலே அரசர்களுள் சிறந்தவரும் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவருமான ஒரு மன்னர் இருந்தார். அவர் பெயர் காகுத்ஸர், குலப பெருமையான அவரின் பெயரை அவர் சந்ததியில் வரும் உத்ரகோசல […]

காளிதாசனின் ரகுவம்சம் : 21 to 25

காளிதாசனின் ரகுவம்சம் : 21 ரகுவின் மகன் அஜய் சூரிய குலத்தின் மரபுப்படி எல்லாக் கலைகளிலும் தேர்ந்து வளர்ந்தான், காட்டில் முதிய யானை தடம்பற்றி நடக்கும் குட்டியானைபோல் தடம் தப்பாமல் நடந்து வளர்ந்தான், காலம் அவனை விரைவில் வாலிபனாக்கிற்று. காதல்கொண்ட பெண் தன் காதலனை அடைய பெரும் ஆசை கொண்டிருந்தபோதும் தகப்பன் உத்தரவினை எதிர்பார்ப்பது போல ராஜலஷ்மி இஷ்வாகு வம்ச அரியணை மூலம் அவனை அடையவிரும்பிய நிலையில் ரகுவின் உத்தரவினை எதிர்பார்த்து நின்றாள். அந்நேரம் ஷத்திரிய வம்சத்தில் […]

காளிதாசனின் ரகுவம்சம் : 16 to 20

காளிதாசனின் ரகுவம்சம் : 16 ரகுவுக்கு எல்லாப் பலமும் இருந்தது. அந்தப் பலத்தினை சரத்காலம் முடிந்த பருவம் இன்னும் பலமாக்கியது, மழைக்காலம் முடிந்ததால் ஆறுகள் கர்ப்பமான யானைகளின் வயிறு குட்டி ஈன்றதும் வற்றியதைப் போல் வற்றியது, அந்த ஆழம் சுருங்கிய ஆறுகளைக் கடப்பதும், தேங்கிய சேறு நிறைந்த இடம் உலர்ந்துபோனதால் படைநடத்துவதும் அவனுக்கு எளிதானது. இதனால் படை நடத்தி திக் விஜயம் செல்ல விரும்பிய ரகு அதற்கான யாகமான வாஜிநிராஜனம் எனும் யாகத்தைச் செய்தான். அப்போது யாக […]

காளிதாசனின் ரகுவம்சம் : 11 to 15

காளிதாசனின் ரகுவம்சம் : 11 தனக்கொரு மகன் பிறந்தான் எனும் அமிர்ததுக்கு ஈடான செய்தி கேட்டதும் சூரியனை மகனாய்ப் பெற்ற காசிப முனிவரைப்போல் மகிழ்ந்த திலீபன் அந்தச் செய்தியினைச் சொன்ன பணியாளனுக்குத் தன் செங்கோல், வெண்கொற்றக்குடை, மணிமுடி தவிர வேறு எல்லாமும் அள்ளி அள்ளி கொடுக்கும் அளவு எல்லையே இல்லா மகிழ்வினை கொண்டவனாய் மகனைக் காண விரைந்தான். அங்கே கலைமான் மடியில் கன்றினைப்போல் சுதக்ஷனை அருகே கிடந்த தன் மகனைக் காற்றில்லா இடத்தில் ஆடாத தாமரை மலர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications