பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிவராத்திரி சிவாலயங்கள்

சோமவார தொடக்கமான இந்த நாளின் மாலையில் இருந்து இந்த தேசம் முழுக்க சிவராத்திரி வழிபாட்டுக்குள் செல்கின்றது இனி வரும் மூன்று இரவுகளும் மிக முக்கியமானவை, அதுவும் மகா கும்பமேளா நடக்கும் இந்த காலகட்ட சிவராத்திரி மிக மிக முக்கியமானது இந்த மூன்று மாலைகளும் முக்கியமானவை, அதுவும் மூன்றாம் நாள் இரவு முழு விழிப்பு வழிபாடும் நான்கு சாம பூஜைகளும் அதி முக்கியமானவை தேசம் பாரத பிரதமர் மோடி தலமையில் அவருடன் சிவராத்திரி வழிபாட்டை முன்னெடுக்கின்றது, எல்லா வகையிலும் […]

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில்

கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில் திருநெடுங்க‌ளம் ஆலயமும் ஒன்று. இது திருச்சி அருகே அமைந்துள்ளது. இங்கு சிவன் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் என அமர்ந்திருக்க, அன்னை மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி என அழைக்கப்படுகின்றார். சம்பந்த பெருமான் தன் தேவாரத்தில் இந்த ஆலயத்தின் “இடர் களையும் பதிகம்” என ஈசன் மேல் பத்து பாடல்களை பாடியுள்ளார், இப்படிப் தொடங்கி பாடியுள்ளார். “மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்தநிறையுடையார் […]

பஞ்ச நாக தலங்கள்

பஞ்ச நாக தலங்கள் 01 : திருநாகேஸ்வரம் “தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம் ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணா மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே” நாக வழிபாட்டு தலங்களை எல்லோரும், அறிந்திருப்போம் ஆனால் நாகங்கள் கூட்டாக வந்து வழிபட்ட தலங்கள் வெகு சில அவற்றில் ஒன்று இந்த திருநாகேஸ்வரம் […]

தேவி மஹாத்மியம்

தேவி மஹாத்மியம் 01 : மதுகைடப வதம் மார்க்கண்டேய மஹரிஷி கூறினார் “எவர் சூரிய குமாரனோ, எவர் ஸாவர்ணி என்கிற எட்டாவது மனுவாக கூறப்பட்டுள்ளானோ, அந்த மனுவினுடைய சரிதத்தை விரிவாகச் சொல்கிறேன், கேட்பீராக. ஸாவர்ணி மனு, மஹாமாயையினுடைய கருணையால் அனைத்து மந்வந்த்ரங்களுக்கும் அதிபரானார். முன்பு ஸ்வாரோசிஷன் என்ற மனுவின் கால முடிவில் சைத்ர வம்சத்தில் உதித்த, ஸுரதன் என்னும் அரசன் இப்பூமண்டலம் முழுமைக்கும் தலைவனாயிருந்தான். நாட்டு மக்களை தன் குழந்தைகளைப் போல பாதுகாத்து ஆட்சி புரிந்து வந்த […]

நவதுர்கா

சித்திதாத்ரி – 01 நவதுர்கா தேவியரின் தாத்பரியத்தில் கடைசி படிநிலை அன்னை சித்திதாத்ரி. சித்தி என்றால் பரிபூரண கடைசி நிலை வெற்றி, தாத்ரி என்றால் வழங்குபவர் என பொருள், ஆக பெரும் சித்திநிலை, இனி அடைய எதுவுமில்லை எனும் அந்த பரிபூரண நிலையினை அருள்பவள் அன்னை சித்தி தாத்ரி இது எந்த நிலை என்றால் ஏழு சக்கரம் துலங்கி, அதை அடுத்து சூட்சும உடலின் சக்கரம் துலங்கி அதனை அடுத்து பிரபஞ்சத்த்துடன் இரண்டற கலந்துவிடும் நிலை இதுதான் […]

நவபுலியூர்

நவபுலியூர் : 01 சிதம்பரம் நடராஜர் ஆலயம் நவபுலியூர் கோவிலில் முதல் கோவிலாக வருவது சிதம்பரம் நடராஜர் ஆலயம், நவபுலியூர் ஆலயங்களில் அது பெரும்பற்றபுலியூர் என அழைக்கபடுகின்றது இந்த ஆலயத்தின் சிறப்பினை அதன் மாபெரும் வரலாற்றினை எடுத்து சொல்லவேண்டுமென்றால் ஏடுகள் போதாது, அதனால் அதன் தாத்பரிய சிறப்புக்களை மட்டும் சுருக்கமாக பார்க்கலாம் அந்த ஆலயம் சங்க காலம் அல்ல வேத காலத்திலே தொடங்கிற்று, எந்த அளவு மிக மிக தொன்மையான ஆலயம் என்றால் புராணங்களிலும் இன்னும் வேத […]

பஞ்ச மயான தலங்கள்

பஞ்ச மயான தலம் 01 : கச்சி மயானம் காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயான தலம் இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் […]

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

சப்த ரங்க ஆலயங்களை போலவே மார்கழியில் கூடுதலாக வழிபட வேண்டிய ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் ஐந்து தலங்களில் பகவான் கண்ணன் எப்போதும் தங்கியிருந்து அருள்வழங்குவார் என்பது அன்றே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அவர் கொடுத்த வாக்கு, அதாவது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் எக்காலமும் எந்நேரமும் அருள் வழங்கும் முக்கியமான கிருஷ்ணன் ஆலயங்கள் இவை திருகோவிலூர், திருகண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருகண்ணபுரம் மற்றும் கபிஸ்தலம் வரும் நாட்களில் இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரு சுற்று பார்க்கலாம், மார்கழியில் […]

சப்த ரங்கம்

மார்கழி மாதம் பகவான் விஷ்ணுவுக்குரியது, பகவானுக்குரிய மாதமான அந்த தனுர் மாதத்தில் திருப்பாவை பாடுவதும், அதிகாலை கோலமிட்டு வழிபாடுகளை செய்வதும் இன்னும் ஏராளமான விரதம் நோன்புகள் இதர வழிகளில் பகவானை இடையறாமல் வணங்குவதும் நல்லது அதே நேரம் அந்த பகவானுக்குரிய, விஷ்ணு பகவானுக்குரிய ஆலயங்களை தேடி வணங்கி நின்றது சாலசிறந்தது முன்னோர்கள் கார்த்திகையில் சிவனை வழிபட சொன்னது போலவே மார்கழியில் விஷ்ணுவினை தவறாமல் வழிபட சொன்னார்கள், இந்த காலகட்டத்தில் சப்த ரங்க ஆலயங்கள் எனும் காவேரியின் இடையில் […]

தச வீரட்டானம்

அட்ட வீராட்டான தலங்கள் போலவே தச வீராட்டான தலங்கள் உண்டு, இந்த பத்து ஆலயங்களும் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் வெகு அபூர்வம், அதன் தாத்பரியம் ஆழமானது சனியின் திசை மேற்கு திசை, ஒருவரின் கர்மவினைக்கு கர்ம வினைபடியான வாழ்வுக்கும் சனிபகவானே அதிபதி, சனி ஒருவரின் ஜாதகத்தில் அவரவர் கர்மவினைக்கு தக்கவாறே பலனை வழங்கும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயங்கள் அந்த கர்மத்தை ஒருவன் சுமக்க வலுசேர்க்கும், அந்த கர்மத்தை சரியாக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications