பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேசியே கெட்ட மாநிலம் தமிழகம்

பேசியே கெட்ட மாநிலம் தமிழகம் பட்டுகோட்டை அழகிரியின் பேச்சு இன்று வைகோவின் பேச்சாக உருமாறி யாருக்கும் உதவமாலே போய்விட்டது பசும்பொன் தேவரின் பேச்சின் சாயல் இல்ல மாறாக அவரின் “எக்குலமும் வாழட்டும் அதில் முக்குலத்தோர் வாழட்டும்.. என்ற சாயல் அங்கிள் சைமனின் “தமிழன் ஆளட்டும்” என உருமாறி வந்து காமெடியாகிவிட்டது அண்ணாவின் பேச்சு கலைஞரில் தொடர்ந்தது, கலைஞர் அண்ணாவாக சிந்தித்தார், அண்ணாவாக மாறினார் அண்ணாவாக எழுதினார் சும்மா சொல்ல கூடாது, அண்ணாவினை தன் பேச்சிலும் எழுத்திலும் அந்த […]

அந்த நாடகத்தை இப்பொழுதும் நடத்துகின்றது

தமிழ் தமிழ் என முழங்குபவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன கிழித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை தமிழை வளர்க்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும் சைவ சித்தாந்த கழகம் விட்டு சென்ற பணிகளை திராவிட மற்றும் திமு கழகம் செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை ஏன்? அப்படி செய்தால் தமிழனின் மதம் இந்து என பண்டைய இலக்கியங்கள் சொல்வதை உறுதிபடுத்தபடும் என்பதால் தயங்கி மறைத்தார்கள் சரி, ஆந்திரமும் கன்னடமும் மலையாளமும் இந்தியினை எதிர்க்கவில்லை ஆனால் சொந்தமொழியினை காத்தன‌ இங்கு இந்தியும் […]

வல்லவன் வகுத்ததே வியாபாரம்

“லேய் மாமா, அரோம்கோவுல குண்டு வெடிச்சிட்டாம்ல, எங்க அப்பா பிரண்டு அங்கதாம்ல வேலை செய்றார், என்ன ஆச்சின்னு தெரிலடா, நாங்கெல்லாம் பயந்து இருக்கோம்டா..” என மருகன் சொன்னபொழுது சவுதியின் தென் எல்லையான தமாம் பக்கம் ஏதோ குண்டுவெடிப்பு என சாதாரண செய்தியாகத்தான் கடந்தோம் ஆனால் விஷயம் பெரும் விளைவுகளை கொடுக்கின்றது கச்சா எண்ணையினை காவேரியாக கொண்டால் அரோம்கோ எனப்படும் சவுதி அமெரிக்க எண்ணெய் ஆலையினை மேட்டூர் மற்றும் கிருஷ்ணராஜ சாகருக்கு ஒப்பிடலாம் அவ்வளவு பெரும் எண்ணெய் வயல் […]

ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது

ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது அவ்வகையில் பெரும் தோல்வி இந்த அண்ணா என்பவருடையது, நிச்சயம் அது பெரும் தோல்வி திராவிட நாடு என்பது இன்று சீமான் சொல்லும் இனவிடுதலை போன்றது இன்று அங்கிள் சைமன் எந்த நிலையில் இருக்கின்றாரோ அன்று அந்த நிலையில்தான் அண்ணா இருந்தார், சீமானின் ஒரே பலம் அவரின் தொண்டை , அண்ணாவின் பலம் ஆங்கிலமும் தமிழும் தேனில் விஷம் தடவும் அந்த தன்மையும் பெரியாருக்கு ஆங்கிலம் வராது, ஆனால் […]

இது ஒருவகை தந்திரம்

“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும், வெறியில் மதிமாறும் அந்நேரம் எதிரி இடம் கண்டு அடிப்பான், வெறி மேலும் ஓங்கி மதிகெட்டு அறிவுகெட்டு அவன் படுகுழுயில் வீழ்வான்” இது ஒருவகை தந்திரம், மகாபாரத சகுனி இதைத்தான் செய்ததாக சொல்கின்றான் கண்ணன் இந்த இடத்தில் துரியோதனன் நம் இம்ரான்கான், சகுனி யாரென்றால் ரஷ்யா காஷ்மிர் கைவிட்டு போனபொழுது அமெரிக்கா காட்டிய அமைதி, தாலிபான்களோடு தன்னைவிட்டு அமெரிக்கா மட்டும் பேசியது என ஏக கடுப்பில் இருக்கும் பாகிஸ்தானை ரஷ்யா சீண்டியது ரஷ்ய பத்திரிகை […]

இன்சினியர் தினம்

சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம். நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர். காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது […]

“ஒரு யோகியின் சுயசரிதை”

இந்து மதத்தின் சிறப்பினை மிக நுட்பமாக அழகாக சொல்லும் புத்தமாக “ஒரு யோகியின் சுயசரிதை” புத்தகம் பிரமாதம் என்கின்றார்கள் அதன் தமிழாக்கம் கிடைக்குமா? எமக்கு படிக்க வாய்பளிக்க முடியுமா? யாராயினும் எமக்கு அந்த உதவியினை யாரும் செய்தால் மிக்க நன்றியுடவனாக இருப்போம்.

“ஆறு மனமே ஆறு”

என்னடா இது? ஒரு கோஷ்டி நீ சங்கி என்கின்றது, இன்னொரு கோஷ்டி கிறிஸ்தவ கைகூலி என்கின்றது ஒரே குழப்பம் இதனால் சங்கம் இனி ஆண்டன் கட்டளை சிவாஜிகணேசன் போல “ஆறு மனமே ஆறு” என ஆலயம் சுற்றும் பவனிக்கு கிளம்ப போன்றுகின்றது வரும் வழியில் மசூதியும் புத்த விகாரைகளும் இருந்தால் அங்கேயும் சென்று “ஆறு மனமே ஆறு..” என பாடிவிட்டு வரவேண்டியதுதான்

“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா?

“தமிழின தலைமகன்” அண்ணாவின் சாதனை என்ன தெரியுமா? ம்ம்ம் ….பன்னீரும் பழனிச்சாமியும் முதல்வரானது, ஜெயக்குமாரும் செல்லூர் ராஜூவும் அமைச்சரானது எம்மை பொறுத்தவரை நடிகர்களை வளர்த்துவிட்டு நாட்டை கெடுத்த அண்ணாவினை விட, நடிகர்களை திமுக‌ வளர்த்து தமிழகத்தினை நாசமாக்கினால் அந்த பாவகாரியத்தில் நான் இருக்கமாட்டேன் என விலகி ஓடிய ஈ.வி.கே சம்பத் ஆயிரம் மடங்கு உயர்வானவர் அவர் கால்தூசிக்கு அண்ணா எனும் சுயநலக்காரன் வரமுடியாது

சில நல்ல அரசியல்வாதிகள்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் […]