பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாட்மிட்டன் வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை படமாக்கபடுகின்றது

பாட்மிட்டன் வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை படமாக்கபடுகின்றது காற்றுள்ள போதே தூற்றிகொள் என்பது போல இப்பொழுதெல்லாம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக்கபட்டு வருகின்றது அது என்னவோ தெரியவில்லை அரசியல் தலைவர்களின் வாழ்க்கை இப்பொழுதெல்லாம் வருவதில்லை, ஜெயா கதையினை எடுத்து கொண்டிருக்கின்றார்கள் அது நல்லமுறையில் வருமா என்பது தெரியவில்லை கலைஞர் கருணாநிதி கதையினை எடுக்கலாம், அதற்கு தகுதியான நபர் என நாசர் அல்லது பிரகாஷ்ராஜ் என இருவரை சொல்லலாம் இருவரும் இல்லையென்றால் மம்முட்டி நல்ல தேர்வு இவர்கள் மூவரில் ஒருவரை […]

இஸ்ரேல் செல்லுகின்றார் பழனிச்சாமி

இஸ்ரேல் செல்லுகின்றார் பழனிச்சாமி அவர் இன்று இருந்திருந்தால் பழனிச்சாமி முதல்வரே இல்லை, மீறி இருந்திருந்தால் கலைஞர் இப்படித்தான் எழுதுவார் “நான் எல்லா நூலையும் போல பரமன் இயேசுவின் பைபிளையும் பலமுறை படித்திருக்கின்றேன், நான் சிலுவை அணியாத கிறிஸ்தவன் என்பது எஸ்ரா சற்குணம் பால் தினகரன் போன்றவருக்கு தெரியும் அன்றும் இன்றும் இஸ்ரேலாக அறியபடும் அந்த தேசத்திலே எத்தனையோ புரட்சியாளர்கள், நலமனமிக்கோர், ஏழையின் கண்ணீர் துடைத்த ஏந்தல்கள் எல்லாம் ஏசு போல் நடமாடியிருகின்றார்கள் ஆனால் அதே மண்ணில்தான் யூதாசும் […]

உங்கள் ராக்கெட்டின் பெயர் என்ன‌

நாம் தமிழர் தும்பிகளோடு பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமான விஷயம் அப்படி ஒரு தும்பி வந்தது, சந்திராயனை தவறவிட்ட சோகத்துடன் இருந்தது பரவாயில்லை தும்பிகளுக்கும் நாட்டுபற்று வந்துவிட்டது போல திருந்திவிட்டதோ என பேச்சு கொடுத்தால் தும்பி அதிர்ச்சி கொடுத்தது இப்படியாக‌ “அண்ணே சந்திராயன் இன்னும் கிடைக்கவில்லை இதெல்லாம் சகஜ வெளிநாட்டில் உயிர்பலி எல்லாம் வாங்குது, நமக்கு வெறும் பணம்தானே போகட்டும் அது இல்ல்லை இது தமிழருக்கு எதிரான சதி நிலாவுமா தமிழருக்கு எதிராக சதி? உதயசூரியன் மட்டும்தானே வழக்கமாக‌ […]

ராபர்ட் முகாபே

சமீபத்தில் ஒரு பெருமகன் இறந்தார், ஆனால் உலக நாடுகளோ அதன் தலைவர்களோ அவனை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவனுக்கும் மாபெரும் வரலாறு உண்டு ராபர்ட் முகாபே ஜிம்பாப்வே தலைவர் அவன் வாழ்வு முழுக்க ஜிம்பாப்வே நாட்டுக்காக, ஆப்ரிக்காவுக்காக‌ அர்பணிக்கபட்டது, முழு நீண்ட போராட்ட வாழ்வது நமக்கெல்லாம் அரபு அரசியல் தெரியும் எண்ணெய் ஒன்றுக்காக பொம்மை தலைவர்களை வைத்துகொண்டு வல்லரசுகள் ஆடும் ஆட்டம் உலகறிந்தது மதம் மன்னர் இன்னபிற அவைகளுக்கு வாய்ப்பாயின இதே போன்றதொரு அரசியல் பார்வை தெற்கு ஆப்ரிக்காவிலும் […]

இம்மானுவேல் போன்றோருக்கான மகத்தான அஞ்சலி

அந்த சம்பவமும் அதை தொடர்ந்த கலவரமும் தமிழகத்தின் இருண்ட நாட்கள், தமிழகம் முழுக்க அக்கலவரம் பரவி விடுமோ என அஞ்சிய நாட்கள்என்ன நடந்தது?1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது,ஏன் பரவியது என்பதுதான் மர்மம்.அந்த கமுதி ராமநாதபுரம் முதல் மதுரை தேனி வரையான பகுதியில் கடவுளுக்கு நிகராக வணங்கபட்டவர் பசும்பொன் தேவர். தேசாபிமானியான தேவர் இந்து மத அபிமானம் மற்றும் குற்றபரம்பரை சட்ட எதிர்ப்பால் […]

பழியினை சுமந்து நின்றது அந்த கோவில் யானை

பாரதியின் கடைசி காலங்களை அருகிருந்து பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள் அனுதினமும் கோவிலுக்கு சென்று அப்பனே கணேசா உன்னை வணங்குகின்றேன் என யானைக்கு பழம் கொடுப்பது பாரதி வழக்கம் அன்றும் அப்படித்தான் பழம் கொடுத்திருகின்றார், யானை தள்ளிவிட்டிருக்கின்றது அதற்கு மதம் பிடித்த காலமுமல்ல, அது அவரை வேண்டுமென்றே தாக்கவுமில்லை மாறாக எல்லா நாளும் விளையாடுவது போல விளையாடியிருக்கின்றது, ஆனால் படக்கூடா அடிபட்டு பாரதி விழுந்துவிட்டார் பாரதி விழுந்து அவரை எல்லோரும் சூழ்ந்திருக்கும் பொழுது அந்த யானை மிகுந்த வருத்தத்துடன் […]

ஒரு பயலிடமும் பதில் இருக்காது

அந்த இம்மானுவேல் சேகரன் கொலையிலும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சாதி கலவரத்திலும் திமுக என்ன செய்தது என கேளுங்கள் ஒரு பயலிடமும் பதில் இருக்காது ஆனால் இது பெரியார் மண், சாதி ஒழித்த அண்ணா கலைஞர் மண் என ஆளாளுக்கு அளந்து விடுவார்கள் அன்று தேவரை வெளிப்படையாக‌ கண்டிக்க அஞ்சி ஓடி ஒளிந்த மாவீரமான இயக்கம்தான் அது

உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம்

உலகெல்லாம் செப்டம்பர்மாதம் கருப்பு மாதம், பல துயரமான விஷயங்கள் அப்பொழுதுதான் நடந்தது செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். இம்மானுவேல் சேகரனுக்காக ஒரு இனம் அழுதுகொண்டிருக்கும் நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர், தென் தமிழகத்தின் […]

தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முறிந்த மறு நொடியே தாலிபன் தன் வேலையினை காட்டிவிட்டது காபூலின் அமெரிக்க தூதரகம் தாக்கபட்டிருகின்றது, அதாவது அமெரிக்க தாலிபன் போர் மறுபடியும் தொடங்கிவிட்டது தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல அமர்ந்திருக்கின்றது பாகிஸ்தான்

விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல

ஆந்திராவில் உள்மாநில அரசியல் சிக்கலில் சந்திரபாபு நாயுடு சிறைவைக்கபட்டிருக்கின்றார் விஷயம் இன்னும் திமுக தலைவருக்கு தெரியாது போல ஆந்திரா காஷ்மீரை விட தொலைவில் இருப்பதுதான் அதற்கு காரணம் அன்றி வேறல்ல.. இந்தியாவில் எங்கு ஜனநாயகம் மறுக்கபட்டாலும் திமுக பொறுக்காது என்பது ஜகன்மோகன் ரெட்டிக்கும் தெரியவில்லை திமுக தலைவருக்கு விஷயம் தெரியட்டும் , அதன் பிறகு என்ன ஆகும் தெரியுமா? ஜெகன் மோகன் ரெட்டியினை ரொட்டியாக்கிவிடுவார் காஷ்மீர் தலைவர்கள் வீட்டுகாவலில் இருந்தால் பொறுக்கா திமுக, சந்திரபாபு நாயுடுவினை மட்டும் […]