பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்..

உபர் மற்றும் ஓலா என்பது இன்று இனிக்கலாம், அட சவுக‌ரியமான விலை மற்றும் சேவை என குதிக்கலாம் எல்லாம் மற்ற சேவைகளை அதாவது வாடகை கார்கள் ஆட்டோக்கள் என எல்லாவற்றையும் ஒழித்துகட்டும் வரைதான் ஒரு காலத்தில் இவற்றால் மற்ற வாடகை வாகனங்கள் பாதிக்கபட்டு ஒரு கட்டத்தில் நின்றே விடும் அதன் பின் உபரும் ஓலாவும் ஏகபோக நிறுவணங்களாகிவிடும், அவர்கள் வைத்ததே வேதமாகிவிடும் அவர்கள் வைத்ததுதான் கட்டணம் என அள்ளி குவிப்பார்கள், நம்மை கசக்கி பிழிவார்கள் பல நாடுகள் […]

வெள்ளை அறிக்கை

ப‌ழனிச்சாமி வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தரவேண்டும் என முக ஸ்டாலின் கேட்டதற்கு பழனிச்சாமி ராஜேந்திர பாலாஜினை சைகை காட்டிவிட்டார் ராஜேந்திர பாலாஜி அடாவடி ஆசாமி, கிட்டதட்ட ஜெர்மன் ஷெப்பர்டு ரகம், பாய்ந்தால் அவ்வளவுதான் “என்ன வெள்ளை அறிக்கை? நாங்கள் வெள்ளை, பச்சை மஞ்சள் என எல்லா அறிக்கையும் கொடுப்போம், வெள்ளரிக்காயும் கொடுப்போம்..” என தடாலடியாக பேசிவிட்டார் பாலாஜி இதெல்லாம் திமுக பாணி பதில் என்பதில் ஆடிபோய் இருக்கின்றது திமுக‌ ஆம் கலைஞர் கருணாநிதி பாணி […]

தலித்துக்களுக்கு எதிரி யாரென்றால் சாட்சாத் அவர்களேதான்

தலித்துக்களுக்கு எதிரி யாரென்றால் சாட்சாத் அவர்களேதான் அவர்கள் கொடுக்கும் ஓவர் பில்டப் அப்படி அட இந்த படத்தையே எடுத்து கொள்ளுங்கள், இப்படி ஒரு துப்பாக்கி எந்த உலகிலுமே இல்லை, சீமான் கூட இப்படி ஒரு துப்பாக்கி வரைய முடியாது 1890களின் மாடலும், ஏகே 203 எனும் நவீன ரகமும் இணைந்த இந்த துப்பாக்கி எவன் சிந்தனையிலும் உதிக்காது, இவர்களுக்கு உதிக்கின்றது இம்மானுவேல் சேகரன் சாதாரண சிப்ப்பாய், அவர் எதிரியினை சுட்டாரா? சப்பாத்தியினை சுட்டாரா என்பது கூட தெரியாது […]

கார் விற்பனை ஏன் சரிந்தது

விஜய் மல்லையா சொத்துக்களை கையபடுத்தும்பொழுது கார்கள் மட்டும் 200 கைபற்றபட்டன‌ ஜெயலலிதாவின் சொத்துக்களில் பல சொகுசுகார்களும் சிக்கின‌ ஹம்மர் கார் சர்ச்சையில் சிக்கிய மூன்றாம் கலைஞர் அதன் பின் காரே வாங்கவில்லை தன் வயதிற்கு ஏற்ப காரினை மாற்றும் கலைஞரும் இல்லை ஆக கார் விற்பனை ஏன் சரிந்தது என சங்கமும் பல கோணங்களில் யோசித்து கொண்டிருக்கின்றது

பாடிய வாய் சும்மா இருக்குமா?

15 நாளில் தெலுங்கு கற்பேன்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டாம் அக்கா வேண்டாம் , தெலுங்கில் என்ன சொல்வீர்கள்? பாடிய வாய் சும்மா இருக்குமா? “தெலுங்கானாவில் தாமரை மலர்ந்தே தீரும்” என்பீர்கள், அது உங்கள் பதவிக்கே ஆபத்தாக முடியலாம் உங்கள் குடியரசு தலைவர் பதவி கனவுக்கு காலம் இருக்கின்றது அக்கா.. இதனால் வழக்கமான சிரிப்பினை மட்டும் உதிர்த்துவிட்டு சென்றால் நல்லது 15 நாளில் தெலுங்கு, ஆனால் கடைசி வரை அரசியலை மட்டும் கற்க போவதே இல்லை, அப்படித்தானே அக்கா?

நமக்கு அதுதான வேணும்…

“என்னய்யா அந்த ஆளு இந்தியாவுல 100 நாள் சாதனைன்னு சொல்லிட்டு இருக்காரு, நாம என்ன சொல்ல‌? 100 நாளாகியும் பாகிஸ்தான்மேல் படை எடுக்காமல் இருப்பதே பெரிய சாதனைன்னு போட்டு தாக்குங்க வேணாம் டென்ஷனாயிருவாரு நமக்கு அதுதான வேணும்…”

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம்

அகில இந்திய அளவில் தேசிய தரமதிப்பீட்டு குழு (NACC) பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கு முதலிடம் கொடுத்ததாக தெரிவிகின்றது கலை அறிவியல் கல்லூரியில் அதுதான் இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றதாம் இந்த மதிப்பு 5 ஆண்டுகளுக்கு இருக்கும், அதன் பின் மறுமதிப்பீடு செய்வார்களாம் நமக்கு அறிவு கொடுத்த கோவில் அது, அனுதினமும் நாம் வணங்கும் ஆலயம் அது என்றவகையில் நமக்கு பெருமையே அங்கு கணிப்பொறி பிரிவில் சேர்ந்தாலும் அதை தவிர வேறு எல்லாவற்றையும் உருப்படியாக படித்தது […]

மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார்

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 12 பாடல்கள் நாம் முன்பே சொன்னோம், மணிசார் இதற்கெல்லாம் சரி படமாட்டார். அந்த கதையினை கொன்று குதறி வைப்பார் மன்னர் கதைகளுக்கு வசனமும் தமிழும் நீண்ட வசனமும் இன்னபிற நுட்பங்களும் முக்கியம் இந்த மணிரத்னம் பாணியான ம்ம், ஆம், ச்சீ.. கொன்னுரு..அவன்..வேண்டாம்..” இம்மாதிரி நவநாகரீக ஒரு வார்த்தை வசனங்கள் எடுபடாது மொத்ததில் மணல் சிற்பம் நுட்பம் கற்சிலை செதுக்குவதற்கு சரிவாராது படம் வரும்பொழுது செத்து போல கல்கியே வந்து மணிரத்னம் தலையில் […]

பனை வடலி நட்ட அந்த தருணம்

ஈழ போராட்டத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு அன்னார் அதில் பனை வடலி நட்ட அந்த தருணம் (அடேய் கிறுக்கு பயலுகளா, பனைக்கு விதை என தமிழ் சொல்லவில்லை, அதெல்லாம் உங்களுக்கு நீக்கபட்ட சமாச்சாரம் பனங்கொட்டை, பீலி, வடலி என்றுதான் தமிழ் அதை சொல்லும் தமிழும் தெரியாது, தமிழ் பெயரும் தெரியாது ஆனால் பெயர் மட்டும் நாம் தமிழர்கள் தமிழையும் அதன் நல்ல பழம் வார்த்தைகளை அழிக்க நீங்கள் மட்டும் போதும்)

விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம்

ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, பார்த்தவுடனே சிரிப்பு வரவழைக்கும் குபீர் சிரிப்பு கோஷ்டி அது விநாயகருக்கு எதிராக புத்தர் ஊர்வலம் என தொடங்கியிருக்கின்றது புத்தருக்கான ஆடை மஞ்சள் அல்லது சிகப்பு, ஆனால் இவர்களுக்கோ காண சகிக்காத கருப்பு சரி இவர்களுக்குத்தான் மதமே கிடையாதே? ஊர்வலம் செல்ல வேண்டுமானால் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், லெனின் போன்ற நாத்திகர்களை அல்லவா சுமக்க வேண்டும்? ஏன் புத்தர் அதை கேட்டால் அம்பேத்கர் புத்தமதத்தை தழுவினாராம் அம்பேத்கர் பெரும் மக்களோடு புத்தமதம் தழுவியது உண்மை, ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications