பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்ன …. ஒழிப்பீர்கள் அமைச்சரே?

ஜாதி ஒழிய வேண்டுமானால் சாதி கயிறினை ஒழிக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார் முடி சிக்கலை தவிர்க்க மயிரை ஒழிக்க வேண்டும் என அன்னார் சொல்லாதவரை நல்லது. ஜாதியினை இட ஒதுக்கீடு என வளர்ப்பது அரசியல், அந்த அரசியல் ஆட்சி அமைக்கும் பொழுது ஜாதி எப்படி ஒழியும்? அமைச்சரே சில கல்வி கூடங்களின் பெயர் என்ன தெரியுமா? சங்கர் ரெட்டியார் அரசு பள்ளி, அய்ய நாடார் கல்லூரி, நாடார் உறவின் முறை பள்ளி, தெட்சன நாடார் சங்க […]

இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது

என்ன செய்தாலும் , எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் ஒன்றுமே நடக்காது என தெரிந்தாலும் கண்ணீரை துடைத்து கொண்டு சம்பிரதாயத்துக்கு போராட வரும் தலைவர்கள் இரண்டே பேர் ஒருவர் இம்ரான் கான் , இன்னொருவர் முக ஸ்டாலின் இருவருக்கும் ஒரேஜாதகம் போலிருக்கின்றது

நீங்கள் எல்லாம் ஒரு அக்கா…

அக்கோவ், நாங்களும் அனுதினமும் உங்களை அக்கா, அக்கா என அழைக்கும் ஒரே நபர் இந்த சங்கம் ஒன்றுதான் ஆனால் இந்த சங்கத்து கை வெற்றாக இருக்கும் பொழுது எங்களை கடந்து பழனிச்சாமி அண்ணனுக்கு ராக்கி கட்டியிருக்கின்றீர்கள்? உண்மையினை சொல்லுங்கள் அது அக்கா அண்ணனுக்கான கயிறா? இல்லை உன் பதவிக்கு நான் பொறுப்பு என் பதவிக்கு நீ பொறுப்பு என்ற ஒப்பபந்த கயிறா? எங்கள் கைகளும் சும்மாதான் இருக்கின்றது, ம்ம்ம்ம்ம் நீங்கள் எல்லாம் ஒரு அக்கா…

பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள்

கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவி ஆத்திரம், காதலன் உதவியுடன் கணவன் மேல் கொதிக்கும் எண்ணெயினை ஊற்றினாள் மனைவி ஒரு காலத்தில் நளாயினியும் கண்ணகியும் கணவனை அப்படி கொண்டாடினார்கள் ராமனும், அர்ஜூனனும் மனைவிக்காக யுத்தம் நடத்தினார்கள், பெரும் ஆபத்தை கடந்தார்கள் அது ஒருகாலம் பதிருஹரி போன்றவர்கள் மனைவியால் ஞானியாகிவிட்டார்கள் அதுவும் ஒரு காலம் இப்பொழுதெல்லாம் பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள் கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், இப்பொழுதெல்லாம் பத்தினிகள் கணவனையே கொன்று தாங்கள் பத்தினிகள் என நிரூபிக்கின்றார்கள் இச்செய்தியினை […]

மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடு

நாம் முன்பே சொன்னதுதான், இந்நாடு மதசுதந்திரம் முழுமையாக கொடுத்திருக்கும் நாடுதான் ஆனால் அதை மிக தாரளாமக பயன்படுத்தி இம்சை செய்யும் கூட்டம் மேல் சில கட்டுபாடுகளை விதித்தல் வேண்டும் இந்துக்கள் பெரும்பாலும் தங்களின் ஆலயத்தின் உள்ளேதான் பிரார்த்திப்பார்கள், இன்னொரு ஆலயம் கட்டுவது என்பது பொருட்செலவும் இன்னபிற சிக்கல்களும் கொண்டது என்பதால் பெரும்பாலும் பாரம்பரிய ஆலயங்களே சிறுதெய்வ வழிபாடே அங்கு சிக்கல், அதை கட்டுபாடு இன்றி அவர்களால் எங்கும் தொடங்க முடிகின்றது. கல்லோ இல்லை தூணோ வைத்து ஒரு […]

பெண்கள் விவகாரம் என்றால் தனி உற்சாகம் வந்துவிடுகின்றது

இந்திய பத்திரிகை எல்லாம் காஷ்மீர், ஐநா, உலக நிலவரம், பெட்ரோல் காரில் இருந்து மின்சார காருக்கு அவசரமாக போக்குவரத்து மாறிகொண்டிருக்கும் நிலையில் மோட்டார் வாகன தொழிலில் ஏற்பட்டிருக்கும் திகைப்பு என பல விஷயங்களை சுவாரஸ்யமாக எழுதுகின்றன‌ நமது நக்கீரன் பத்திரிகை மட்டும் திருச்சியில் விபசாரத்தை மிக தீவிரமாக புலனாய்ந்து எழுதுகின்றது விபச்சாரம் என்ன மிக பெரும் விஷயமா? எந்த ஊரில் இல்லை? அது என்னவோ தெரியவில்லை நக்கீரனுக்கு விபச்சாரம், நடிகை, பெண்கள் விவகாரம் என்றால் தனி உற்சாகம் […]

அது தற்செயலா இல்லை

அது தற்செயலா இல்லை ஆன்மீகமா என்பதல்ல விஷயம் அத்திவரதர் சிலை நீருக்குள் செல்லும்பொழுது கனமழை கொட்டும் என்பது ஐதீகம், இதோ காஞ்சிபுரம் ஏரியா வெள்ளத்தில் மிதக்கின்றது சில விஷயங்கள் விஞ்ஞானத்துக்கும் இயற்கைக்கும் அப்பாற்பட்டவை இது ஆன்மீகம் என்றால் ஆன்மீகம், பருவமழை என்றால் பருவமழை..

ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்

பாஜக அரசு ஒருமாதிரியான அரசாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது அதாவது 1998 அணுகுண்டு சோதனைக்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை செய்தன‌ “இருவருமே முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம்” என்பது அது பல இடங்களில் அதை மேற்கோள்காட்டி இரு நாடுகளுமே பதற்றமான நேரங்களில் பேசிகொள்ளும் இப்பொழுது ராஜ்நாத் சிங் அதை முறிக்கும் விதமாக பேசியிருக்கின்றார் “ஆம், அப்படி ஒரு ஒப்பந்தம் உள்ளது, ஆனால் எதிர்காலமே அந்த ஒப்பந்தம் முறிக்கபடுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்” என […]

இதோ உண்மையாயிற்று

முழுக்க நியாயம் இந்தியா பக்கம் இருப்பது புரிந்தாலும், யாரிடமும் இதை புகாராக சொன்னால் செருப்படி நிச்சயம் என உணர்ந்தாலும் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை காஷ்மீர் என்பது அவர்களின் மாபெரும் அரசியல், வோட்டு முதல் ராணுவ விவகாரம் வரை அதுதான் அங்கு மந்திரக்கோல் அதை முறித்துபோட்டால் என்ன செய்வார்கள்? அதுவம் இம்ரான் காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் காத்தார் என்றால் அவரின் அரசியல் என்னாகும்? அவர் முதுகில் மிதித்துவிட்டு ராணுவம் பதவியில் அமர எவ்வளவு நாழிகை ஆகும்? இதனால் பெரிதாக […]

வரலாற்றை புரட்டுங்கள் உங்களுக்கு தானாக தெரியும்

இந்தியா பாகிஸ்தான் பிரிக்கபட வேண்டுமா என அன்று வாக்கெடுப்பு நடத்தபடவில்லை, மக்களிடம் ஏதும் கேட்கவில்லை போர்ச்சுகீசிய, பிரெஞ்ச் பகுதிகள் யாருடன் இருக்கவேண்டுமென வாக்கெடுப்பு நடத்தபடவில்லை ஐதரபாத் சமஸ்தானத்தினை போரில் பட்டேல் இணைத்தார், யாரிடமும் ஒரு கருத்தும் கேட்கவில்லை இந்திரா அதற்கும் மேல் அந்த சிக்கிமை இணைக்கும்பொழுதுகூட ஒரு வார்த்தை அவர்களிடம் கேட்கவில்லை பொற்கோவில் சம்பவத்தின் பொழுது பஞ்சாபியரிடம் ஒருவார்த்தை கேட்டாரா? இந்த வங்கப்போர் குறித்து வங்காளிடம் என்று கருத்து கேட்கபட்டது? கச்சதீவினை கொடுக்கும் போது ஒரு வார்த்தை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications