பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவனுக எல்லாம் லூசா?

நேற்றுவரை அய்யகோ வடநாட்டான், அய்யய்யோ பான்பராக் வாயன், அய்யய்யோ வடநாட்டான் ஆக்கிரமிப்பு என்றெல்லாம் புலம்பிகொண்டிருந்தவன் நேற்றுமுதல் காஷ்மீரிய சகோதரர்கள் என கண்ணீர் விடுகின்றான் இவனுக எல்லாம் லூசா? இல்லை அப்படி நடிக்கின்றார்களா

மாபெரும் தவறு அது

இந்திய வரலாற்றில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கின்றது, மாபெரும் தவறு அது இந்த பாஜக 1985களிலே பதவிக்கு வந்து இந்த 370 பிரிவினை அப்பொழுதே நீக்கியிருந்தால் நிச்சயம் பாபர் மசூதி இடிபட்டிருக்காது போல‌ பூரா பயலும் அகண்ட காஷ்மீர், நீண்ட காஷ்மீர், தோண்ட வேண்டிய காஷ்மீர், தாண்ட வேண்டிய காஷ்மிர் என கிளம்பிவிட்டான். தேசம் வீணாக ஒரு மசூதியினை இழந்து சில கலவரங்களையும் சந்தித்திருப்பது வேதனை

பூரா நடிப்பு

காஷ்மீரில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம் என அஞ்சுகின்றோம் : திராவிட தமிழ்தேசிய இம்சைகள் இந்த கோஷ்டிகள் எல்லாம் கோமாவில் இருக்கும் போல‌ ஏற்கனவே தமிழக பகுதிகள் பல மொழிவாரி பிரிவினையில் கேரளாவுக்கும் ஆந்திராவுக்கும் சென்றாயிற்று கச்சதீவு அந்நிய நாட்டுக்கே சென்றாயிற்று அப்பொழுதெல்லாம் இந்த கோஷ்டிகள் எங்கே ஆரஞ்ச் ஜூஸ் குடித்து கொண்டிருந்ததோ தெரியாது தமிழக பகுதிகள் பிரித்து கொடுக்கபடவே இல்லையா? அதை எல்லாம் தடுத்தார்களா? இல்லை மீட்டுத்தான் எடுத்தார்களா? என்ன கிழித்தார்கள்? ஒன்றுமே இல்லை நல்ல […]

முதுகெலும்பென்றால் என்ன?

முதுகெலும்பென்றால் என்ன? கலைஞர் காலத்தில் போட்ட அதே வணக்கத்தை அவர் மகனுக்கும் பேரனுக்கும் வெட்கமே இல்லாமல் போட்டு, அப்படி வணங்கியே தொடர்ந்து எம்பியாக அமர்ந்து பல வழிகளில் சம்பாதிப்பதின் பெயராகும்

ஆனால் செய்யமாட்டார்கள்

கலைஞர் நிச்சயம் பல்துறை வித்தகர், எல்லா துறையும் எல்லா மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், பிரமணாள் உட்பட‌ ஆம் அவர்மட்டும் அப்படி ஒரு பிராமண எதிர்ப்பினை காட்டாவிட்டால் அப்பாவி பிராமண கூட்டம் இங்கு ஆலயத்தில் மணியடித்து கொண்டு, கோவிலை கழுவிவிட்டு இங்கு சாதாரண பணியில் இருந்து வறுமையில் வாடியிருக்கும் அவர் அடித்த அடியில்தான் பன்னாட்டு கம்பெனிகளின் நினைத்துபார்க்க முடியா பெரும் இடத்தில் பிராமணர் அமர்ந்திருக்கின்றனர் அந்த அளவில் அவர்களுக்கு நன்றி இருந்தால் அவரை வணங்கட்டும் விஷயம் […]

கலைஞருக்கு பின் இன்னொரு கலைஞர் இல்லை

தமிழக அரசியலில் மட்டும் அல்ல, இந்திய அரசியலிலே பெரும் சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது பலநூறு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய சக்திகளை நொறுக்கி, பாட்டாளிகளின் குரலாக ஒலித்த அந்த குரல் நின்றுவிட்டது அடிதட்டு மக்களை எல்லாம் ஏற்றிவிட்ட ஏணி ஒன்று சரிந்துவிட்டது, ஏராளமானோரை கரை சேர்த்த தோணி உடைந்துவிட்டது அறியாமை நீக்க, மான உணர்வூட்ட, அடிமைதளை களைய, தமிழர் தன் நிலை அறிய நீண்ட பயணம் செய்த கால்கள் ஒய்வுக்கு சென்றுவிட்டது சிந்தனை கலங்குகின்றது, எழுத்து நடுங்குகின்றது, இவ்வளவு […]

சுஷ்மா சுவராஜ்

இந்திய அரசியல் பெண்மணிகளில் மிக அறியபட்ட முகமாய் இருந்த சுஷ்மா சுவராஜ் நேற்று காலமாகிவிட்டார், அவர் இனி இல்லை சுதந்திரத்தின்போது லாகூரில் இருந்து ஹரியானாவுக்கு குடிபெயர்ந்த குடும்பத்தின் வாரிசு அவர். அந்த சோகமோ என்னமோ அவர் இரத்ததில் அரசியலும் தேசபற்றும் கலந்திருந்தது 25 வயதிலே வழக்கறிஞராகிவிட்டு அரசியலுக்கு வந்து தேவிலாலின் ஹரியானா ஜனதாதள அரசிலே அமைச்சருமாயிருந்தார் மிக இளவயதில் அமைச்சரானவர்களில் அவரும் ஒருவர், அந்நாளில் அவரை இந்தியா திரும்பிபார்த்தது. ஜனதா பின்னாளில் சிதறி அது பாரதீய ஜனதாவாக […]

முதுகில மிதிச்சி கேளு போடா..

அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க, காமராஜர் ரொம்ப உத்தமர், நல்லவர், தியாகி இந்த கருணாநிதிதான் அவர ஏமாத்தி தோற்கடிச்சாரு, அப்படியே தமிழ்நாட்டை நாசமாக்கிட்டாரு, அவரை பற்றி எல்லாம் எழுதாதீங்கண்ணே ஒஹோ காமராஜர் நல்லவரு அப்படித்தானே? இதுல எண்ணண்ணே சந்தேகம், அவர் ஆட்சி பொற்கால ஆட்சி அவர் என்ன கட்சி காங்கிரஸ்னே? அது நல்ல கட்சியா? என்னண்ணே இப்படி கேட்டுபுட்டீங்க, மத துவேஷம் இல்லாத இந்தியா ஒருமைபாட்ட காக்குற கட்சின்னே இந்த இந்துத்வா மாதிரி இல்ல‌ அப்போ காங்கிரஸ் […]

மக்களவையில் அமித்ஷா ஆவேசம்

காஷ்மீரை மீட்க உயிரை கொடுக்கவும் தயார் – மக்களவையில் அமித்ஷா ஆவேசம் கச்சதீவின் உரிமையினை மீட்க உயிர் எல்லாம் கொடுக்க வேண்டாம், வெட்டி போட்ட நகம் போதும் பிளீஸ்…

பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள்

காஷ்மீரிய முன்னாள் மன்னரின் வாரிசுகள் பா.ரஞ்சித் என்பவரை தேடி கொண்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌ எங்கள் நிலத்தை எல்லாம் இந்தியா பிடுங்கிகொண்டது என கதறி அழ அவர் ஒருவர்தான் தகுதியான நபர் என நேற்றுத்தான் உணர்ந்தார்களாம் அவர்கள் வலி பா.ரஞ்சித் என்பவருக்குத்தான் பெரும் நிலத்தை ராஜராஜ சோழனிடம் இழந்தவர் என்ற முறையில் புரியுமாம்