பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரான் முன்னிலை வகிக்கின்றது

மீன் பிடிப்பதை போல கப்பல் பிடி விளையாட்டில் இறங்கியிருக்கின்றது ஈரான், இப்பொழுதும் ஒரு கப்பலை இழுத்து சென்றிருக்கின்றார்கள் காரணத்தை கேட்டால் அது கடத்தல் எண்ணெய் என்கின்றார்கள், யார் கடத்தினார்கள்? யாருக்காக கடத்தினார்கள் என்றால் ஈரானிடம் சரியான பதில் இல்லை மாறாக சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் என சொல்லிவிட்டு கப்பலை துறைமுகத்தில் கட்டிகொண்டிருக்கின்றது ஆக ஹோம்ஸ் கடற்சந்தியில் கப்பல்பிடி விளையாட்டு தீவிரமாக நடக்கின்றது 1:2 என்ற எண்ணிக்கையில் இப்பொழுது ஈரான் முன்னிலை வகிக்கின்றது

இன்று நண்பர்கள் தினமாம்

இன்று நண்பர்கள் தினமாம், வெள்ளையன் சொல்லித்தான் நட்பின் அருமை தெரிய வேண்டுமா என்ன? நட்புக்கே இல்லகணம் கொடுத்தது இந்தியா, வெள்ளையன் வரலாற்றில் அலெக்ஸான்டர் மட்டுமே நட்புக்கு அடையாளமாய் நிற்கின்றான், அதுவும் அருமை நண்பன் பார்மேனியொவினை கொன்றபின் தன் ராஜ்ஜியத்தை நண்பர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு செத்துவிட்டான், நண்பனுக்கான அஞ்சலி அது பாரதமும் ராமாயணமும் நட்புக்கான இடத்தை மிக அழகாக பதிவு செய்கின்றன‌ வள்ளுவன் அதற்கு குறளே அமைத்தான் எதிரியினை மிக சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் மனிதன் நண்பனை மிக […]

இது பாஜகவின் காலம், அவர்கள் ஆடுகின்றார்கள் ஆடட்டும்

காஷ்மீரில் மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருகின்றது என்பது தெரியவில்லை, ஆனால் நடக்கும் காட்சிகள் மாபெரும் திட்டத்தை அரசு வைத்திருப்பதை தெளிவாக காட்டுக்ன்றன‌ 370ம் சட்டபிரிவு ரத்து, இன்னும் காஷ்மீர் 3 மாநிலமாக பிரிப்பு ஏக ஏக செய்திகள் வருகின்றன‌ அரசு மறுத்தாலும் அதன் அசைவின்றி இம்மாதிரியான செய்திகள் வெளிவர வாய்ப்பு இல்லை மக்களின் நாடிதுடிப்பினை காண அரசு இன்னொரு பக்கம் மூலம் செய்திகளை கசிய விடுகின்றது என்பது அரசியல் புரிந்தோருக்கு புரிகின்றது அதிரடி செய்திகள் விரைவில் […]

தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார் டிரம்ப்

இந்த சூயஸ்கால்வாய் என்றொரு கால்வாய் எகிப்தில் உண்டு , ஐரோப்பாவினையும் ஆசியாவினையும் இணைக்கும் கடல்பாதை அது அதை தோண்டியது பிரிட்டனும் பிரான்ஸும் என்றாலும் அது அமைந்திருப்பது எகிப்தில் என்பதால் அது எகிப்துக்கு சொந்தமானது என்றார் கர்ணல் நாசர் அரபுகளின் தன்னிகரற்ற தலைவனாக விளங்கிய நாசர், ஒரு கட்டத்தில் அதை எகிப்தின் நாட்டுடமை ஆக்கினார், போராட வந்த பிரிட்டனை விரட்டி அடித்தார் அதன் பின் ஐநா படைகள் வந்ததும், போதாகுறைக்கு இஸ்ரேல் நாசரை வீழ்த்தியதும் வரலாறு இன்று அந்த […]

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருகின்றது

அமெரிக்காவில் மறுபடியும் துப்பாக்கி சூடு நடந்திருகின்றது, 20 பேர் பலி என்கின்றார்கள் ஒரு காலத்தில் துப்பாக்கி ஏந்தி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா அதனால் எதிர்காலத்திலும் ஜனநாயகத்துக்கு ஆபத்தென்றால் அவர்கள் துப்பாக்கி அளவு அவர்கள் சட்டம் வழி செய்கின்றது ‘ ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இம்மாதிரி சம்பவங்கள் நடக்கின்றன‌ நல்ல வேளையாக இந்தியாவில் இம்மாதிரி சட்டம் இல்லை, இருந்தால் நாம் தமிழர் தும்பிகள் சும்மா இருக்கும் என கருதுகின்றீர்கள்? எல்லோரையும் சுட்டுவிட்டு கடைசியில் சீமானையும் சுட்டுவிடும் […]

கலைஞருக்கு முதல் வருட அஞ்சலிக்கு என்ன ஏற்பாடு?

எலேய் கலைஞருக்கு முதல் வருட அஞ்சலிக்கு என்ன ஏற்பாடு? அண்ணாச்சி கோவில்ல பிரார்த்தனை, 50 பேருக்கு சாப்பாடு அப்புறம் படத்த்துக்கு மாலை போட்டு அஞ்சலி, நீரு 10 நிமிஷம் ஒழுங்க பேசணும், இல்லண்ணா அன்னைக்கு உமக்கு நினைவுநாளா ஆயிரும் அதெல்லாம் சரிடா, துர்கா ஸ்டாலின் திதி ஏதும் குடுத்தா சிக்கலாகுமேடா? அண்ணாச்சி, என்ன மனுஷன் நீரு, வரலாறு தெரியுமா தெரியாதா? சொல்லுய்யா பெரியார் பெரிய நாத்திகர், ஆனா அவரோட முதல் மனைவியும் அம்மாவும் அப்படி பக்திமான், ஒருவார்த்தை […]

காஷ்மீரில் அசாதரண நிலை நிலவுகின்றது

காஷ்மீரில் அசாதரண நிலை நிலவுகின்றது, இந்திய செய்தியினை புறம்தள்ளுங்கள் ஒன்று ஆளும் கட்சிக்கு ஜால்ரா அல்லது தேசத்துக்கு எதிர்ப்பு இந்த இரு பிரிவினை தவிர வேறு பத்திரிகை இந்தியாவில் இல்லை ஆனால் உலக செய்திகள் அதிர வைக்கின்றன, காஷ்மீருக்கு சுற்றுபயணிகள் வரவேண்டாம் வந்தவர்கள் உடனே வெளியேற வேண்டும் என இந்தியதரப்பில் செய்தி வந்ததாக அவை சொல்கின்றன‌ வழக்கமாக இப்படி இந்திய வரலாற்றில் நடக்காது, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகுவிக்கும் அதன் பின்பே இந்தியா களமிறங்கி அடித்துவிரட்டும் இம்முறை […]

ஆடிபெருக்கு

தமிழகத்து கலை அடையாளங்கள், அழியா வரலாறுகள், இச்சமூகம் வாழ்வாங்கு வாழந்த அடையாளம் எல்லாம் காவேரியால் வந்தது அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது. அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் […]

ஆகஸ்ட் 3, புலிகளின் இஸ்லாமிய வெறுப்பினை கொடூரமாக உலகிற்கு சொன்ன நாள்

இலங்கை தமிழர்கள் பிரச்சினை என எடுத்துகொண்டால் ஈழதமிழர், மலையக தமிழர், இந்த தமிழ்பேசும் இஸ்லாமியர் என மூவரும் கலந்ததே வருவார்கள், தீர்வு இவர்களை உள்ளடக்கியே கொடுக்கபட வேண்டும் ஆனால் புலிகள் ஈழதமிழருக்கு தனிஈழம் என்ற நிலைபாட்டில் இருந்தனரே தவிர மலையக தமிழர், தமிழ்பேசும் இஸ்லாமியர் எல்லாம் அவர்கள் கணக்கிலே வரவில்லை, ஏன் என்றால் ஈழபோராட்டம் ஈழதமிழனுக்கானது எனும் குறுகிய புத்தி அது இந்தியா இவர்கள் கலந்த ஈழ‌ சிக்கலுக்கு முடிவினை கொடுக்க விரும்பியது, புலிகள் விரும்பவில்லை. முதல் […]

இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண்

இங்கிலாந்தில் 220 காதல் தோல்விகளால் விரக்தியடைந்த பெண் நாயினை திருமணம் செய்து கொண்டார் : செய்தி 220 காதலா?, அம்மணி டபுள் செஞ்சுரி அடித்து ஆடிகொண்டிருந்ததை ஒரு நாய் முடித்து வைத்திருக்கின்றது. எதற்கு நாயினை மணமுடித்தார் அந்த பெண்மணி? கணவன் என்பவன் நாய்போல் நடக்க வேண்டும் என நினைத்து 220 முயற்சிகளை செய்திருக்கலாம், அவைகள் தோற்றபின் ஏன் நாய்போல கணவன், நாயே பரவாயில்லை என முடிவு செய்திருக்கலாம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications