பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாபெரும் உதாரணம் கலைஞர்

இந்த ஜாதாகத்தோடு இணைபவர் மாபெரும் உயரங்களை அடைவர் என்பது உன்மையாக இருந்தாலும், அது தானாக அமைய ஒரு விதி வேண்டும் மாபெரும் உதாரணம் கலைஞர் ராசாத்தி அம்மாளை திருமணம் செய்தபின்புதான் மிகபெரும் பதவிகளும் நிரந்தர சிம்மாசனமும் அவரை தேடி வந்தன‌ தலைவிதி நன்றாய் இருந்தால் எல்லாம் தானாய் தேடிவரும் என்பது அதுதான் தலைவர் வாழ்வுதான் எவ்வளவு விசித்திரமானது? நாத்திகத்திக்கும் பகுத்தறிவுக்கும் அவர்தான் எடுத்துகாட்டு, ஆச்சரியமாக ஜாதகத்துக்கும் தலைவிதிக்கும் அவரேதான் உதாரணம்

கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

இனி குற்றாலம் நெல்லை மாவட்டத்துக்கு இல்லை, முன்பு வஉசியும் கட்டபொம்மனும் தூத்துகுடி மாவட்டத்துக்கு சென்றது போல் வாஞ்சிநாதனும் , பூலித்தேவனும் இனி தென்காசிக்குசென்று விடுவார்கள். கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்

பாரிசாலனுக்கு பின் திடீரென வைரலாகி எல்லோரிடமும் கும்மாங்குத்து வாங்கிகொண்டிருப்பவர் திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன். இளம்வயது பயமறியாது பக்குவமும் அறியாது என்பார்கள் இவர் விஷயத்தில் அது சரி. ஜோதிடம் என்பது கணக்குத்தான், கட்டங்களை எண்ணி இன்னும் பலவற்றை கணக்கிட்டு சொல்லும் வழிதான் ஆனால் அதன் அடிநாதம் கணக்கு அல்ல, பக்தி. முழு பக்தி, கடவுளுக்கு தான் ஒருஅடிமை எனும் சித்தனின் மனநிலை அந்நிலை பணத்தை தேடாது, புகழை தேடாது. தன்னை நாடிவருபவருக்கு மட்டுமே சில பதில்களை […]

ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்

மிக சுவையான உணவுக்கும், மிக கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார். அவர் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி 12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள் முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் […]

திமுக வளர்த்த தமிழ்

அந்த தமிழும் அதன் பிழையும் ஆச்சரியமில்லை, திமுக வளர்த்த தமிழ் இந்த அளவாவது இருப்பது கலைஞரின் தொல்காப்பிய பூங்கா கொடுத்த விளைவு இல்லாவிட்டால் நிலமை இன்னும் மோசமாயிருக்கும் ஆனால் ஒரு ஜோசியக்காரனுக்கு திமுகவின் உச்ச மேலிடத்தை நேரில் திருமணத்துக்கு அழைக்கும் அளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதைத்தான் படம் காட்டுகின்றது ஆக திமுகவுக்கு ஜாதகம் ஜோசியம் எல்லாம் சிக்கலே அல்ல, மாறாக பிராமணரிடம் அது சிக்கியிருப்பதுதான் சிக்கல் பிராமணரை தவிர யார் ஜோசியம் ஜாதகம் என சொன்னால் அது […]

இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

மாவோவின் கைக்கு ஆட்சி வரும்பொழுது மிகவும் பிந்தங்கிய விவசாய நாடு சீனா, கொரிய யுத்தம் போன்றவற்றாலும் இன்னும் பல காரணங்களாலும் சோவியத் யூனியன் ஆதரவு சீனாவுக்கு தொடக்கத்தில் கிடைத்தது அதில் அணுகுண்டுவரை செய்தது சீனா, ஆனால் பொருளாதாரம் இன்றைய வடகொரியா போலத்தான் இருந்தது மாவோ நமது தமிழக‌ நாம் தமிழர் போல விவசாயத்தில் தேசத்தை மாற்றுகின்றேன் என கிளம்பினான், அவன் செய்த மாணவர் புரட்சி எனும் அழிச்சாட்டியம் இன்றுவரை சீனாவின் கருப்பு பக்கம் என்ன செய்தது மாவோ […]

எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்

ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 வாங்கினாலோ இல்லை வேறு நவீன சிஸ்டம் வாங்கினாலோ பொருளாதார தடை வீசபடும் என மிரட்டிகொன்டிருந்தது அமெரிக்கா அவர்களின் அலாவுதீன் பூதமான மைக் பாம்பியோ கூட இந்தியா வந்து அதுபற்றி மிரட்டிவிட்டுத்தான் சென்றார் என்கின்றன செய்திகள் இப்படியான நிலையில் டிரம்பின் வலது கன்னத்தில் இந்தியாவும் இடது கன்னத்தில் புட்டீனும் மாறி மாறி அடித்துவிட்டார்கள் எப்படி திட்டமிட்டன? இப்படித்தான். “பொருளாதார தடை என்பது என்ன? சில நுட்பங்களை அல்லது பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நாட்டுக்கு […]

ம்ம் அதேதான் “அண்ணா நாமம் வாழ்க..”

ஏண்டா ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், உனக்கு என்ன தெரியும்? நீ எல்லாம் போனா நாடு கெட்டுபோயிரும்டா, அரசியலுக்கு போகாதே ” எம்.ஆர் ராதா “கூத்தாடி பய ஒருத்தன இன்னொரு கூத்தாடி பய சுட்டுபுட்டான்னு ஊருக்குள்ள கலவரமுங்க.. மக்கள் சிந்தனை மாறலண்ணா நாடு நாசமாயிருமுங்க..”: பெரியார் “சினிமாகாரர்களை திமுக அரவணைப்பது சரி, ஆனால் அவர்களுக்கு பெரும் இடம் கொடுப்பது சரியல்ல. இது அறிவும் சிந்தனையும் சார்ந்த இயக்கம் என்பதால் கலைஞர்களை தள்ளிவைப்பதே நமக்கு பெருமையும் பயனும் தரும்” […]

இந்த சுயநலவாதிக்கு என்ன இருக்கின்றது?

சூர்யா என்பவர் மேல் கோபம் எதுவுமில்லை, அவர் அடிக்கடி பல சமூக விஷயங்களை பேசினால் விட்டுவிடலாம் இதோ சமுத்திரகனி இருக்கின்றார், கல்வி சீரழிவு முதல் பல விஷயங்களை தன் படத்தில் வைக்கின்றார். அதில் பெரிதாக சம்பாதித்தாரா என்பதல்ல விஷயம், ஆனால் தன்னால் முடிந்ததை பேசுகின்றார், படமாக எடுக்கின்றார் 4 நல்ல விஷயங்களை இச்சமூகத்திற்கு சொல்ல நினைகின்றார், தன்னால் பொறுக்கமுடியாத விஷயங்களை சட்டென சொல்கின்றார் அவர் நினைவாலும், சொல்லாலும் செயலாலும் சமூக பொறுப்போடு இருக்கின்றார் சூர்யா அப்படி அல்ல‌ […]

நான் மாட்டுகறி உண்டேன், உண்டேன், உண்பேன்

மாட்டுகறி விருப்பம் என்றால் அதை உண்ண வேண்டிய அவசியம் இருந்தால் தனியாக உண்ணலாம், தன்னை போன்ற நண்பர்களோடு சேர்ந்து உண்ணலாம் மாறாக மாட்டுகறி திருவிழா நடத்துகின்றேன் என சொல்லி அதை உண்ணாதோர் மனதை புண்படுத்துவதெல்லாம் கலவரம் ஏற்படுத்தும் செயல் நான் மாட்டுகறி உண்டேன் என சத்தமாக சொல்லி திரிவதும், மாட்டுகறி விருந்து வைக்க போகின்றேன் என சொல்லி வம்பிழுப்பதும் சமூக அமைதிக்கு ஆபத்தானது.. நாமும் கவனித்து பார்க்கின்றோம், நீ உண்டது மாட்டுகறியா என யாரும் தேடிபிடித்து, ஆய்வக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications