சப்த விடங்கர் ஆலயங்கள் : 05 / 08 திருக்குவளை
ஸ்ரீ வண்டமர் பூங்குழலி சமேத அவனிவிடங்கர் சப்த விடங்கர் ஆலயத்தில் அடுத்த ஆலயம், அதாவது ஐந்தாவது ஆலயம் திருக்குவளை என அழைக்கப்படும் திருக்கோளிலி ஆலயம். இது காவேரியின் தென்பக்கம் அமைந்துள்ள ஆலயம், இது தேவாரம் பாடபட்ட தலமாகும். சைவ குரவர்களும் பலரும் வந்து வழிபட்டிருக்கின்றார்கள் “நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கேஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே” என்பது சம்பந்தர் பாடல். “மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்தொக்க கையினன் செய்யதோர் சோதியன்கொக்க […]