நாச்சியார் திருமொழி : 51
அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]