காளிதாசனின் சாகுந்தலம் : 02
அன்னை காளியின் புகழ்போல் மிகவும் பெரிதாகப் படர்ந்து உயர்ந்திருந்த ஹிமாலய மலை அது. அதன் உச்சியில் வெள்ளியினை உருக்கி ஊற்றி வைத்தது போல் பனிச் சிகரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. சூரியக்கதிர்கள் பட்டு அந்த மலைச்சிகரம் தங்கமாகவும் நவமணிகளாகவும் மாயமால ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. பச்சை வர்ண புடவையினை சாற்றியது போல் மலை எங்கும் பசுமை சூழ்ந்திருந்தது. அமுதத்தை ஊற்றியது போல அருவிகள் வீழ்ந்து கொண்டிருந்தன. அந்த மலையின் எல்லா வளங்களையும் தான் சுமந்து மக்களுக்கு கொடுப்பதற்காக வார்த்தையால் […]