பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுல் மிக கவனமாக இருக்கட்டும்

உபியில் ராகுல் மேல் துப்பாக்கி சூட்டுக்கு முன் விழும் லேசர் கதிர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருகின்றது, கொலைமுயற்சியாக இருக்கலாம் என்ற தகவல் பாதுகாப்பு அமைச்சிடம் கொடுக்கபட்டுள்ளது இது பற்றி முழு தகவல் வெளியிடபடவில்லை என்றாலும் ராகுல் மிக கவனமாக இருக்கட்டும் அவருக்கான பாதுகாப்பு வலுப்படுத்தபடட்டும் இத்தேசத்தின் இளம் தலைவர் அவர், இந்நாடு அவரை எதிர்பார்க்கின்றது, இந்த தலைமுறையினை அவர் வளமான இந்தியாவுக்குள் அழைத்துசெல்வார் என நம்புகின்றது அவருக்கான பாதுகாப்பினை அரசு வழங்கட்டும், ராகுலும் எச்சரிக்கையாக இருக்கட்டும் கோடிகணக்கான […]

ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைது

அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிகொண்டிருந்த ஜூலியஸ் அசாஞ்ச்சே லண்டனில் கைதுசெய்யபட்டுவிட்டார் அன்னார் உலகெல்லாம் சர்வர்களில் புகுந்து தகவல் திரட்டி அசாஞ்சே லீக்ஸ் என ரகசியங்களை வெளியில் கொட்டிகொண்டிருந்தார் (ஆனால் அவராலும் கொடநாட்டிலும் கோபாலபுரத்திலும் ஊடுருவ முடியவில்லை, தமிழகம் என்றால் சும்மாவா) அதில் நிறைய அமெரிக்காவுக்கு எதிரானது என்பதால் அந்நாடு வலைவீசி தேடியது , ஈக்வெடார் நாடு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது அதை வைத்து லண்டனில் சுற்றிகொண்டிருந்தார் இந்நிலையில் ஈக்வெடார் அரசு கையினை விரித்துவிட அசாஞ்சே கைதாகிவிட்டார் அமெரிக்க அரசுக்கான […]

நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் கொடூரம் இது

மாட்டுக்கு ஆண்மை நீக்கம் செய்து விவசாய பணிகளை செய்யவைப்பது போல ஒரு கொடுமை மனிதர்களுக்கும் மகாராஷ்டிராவில் நடந்திருகின்றது அதாவது பெண்களுக்கு கருப்பையினை நீக்கிவிட்டு ஒரு இயந்திரம் போல மாற்றி ஒரு கும்பல் பயன்படுத்தியிருகின்றது கருப்பை இழப்பால் வரும் விளைவுகள் பற்றியோ இதர பலவீனம் பற்றியோ அறியா அப்பாவி பெண்களும் அதில் சிக்கியிருக்கின்றனர் நிலசுவாந்தார்கள் இன்னும் பலரின் கொடுமையான சிந்தனையில் உதித்த அத்திட்டம் இந்த நாகரீக உலகில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது நினைத்து பார்க்கவே மனம் நடுங்கும் […]

பிளாக் ஹோல்

விண்வெளி ஆய்வில் தியரியாக சொல்லபட்டது கருந்துளை அல்லது பிளாக் ஹோல் அதாவது ஒரு நட்சத்திரம் வாழ்ந்து முடித்தபின் அது சுருங்கி கருப்பு வடிவமாகும் அப்பொழுது அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதனருகில் செல்லும் எல்லாவற்றையும் அது ஈர்க்கும், ஏன் ஒளியினை கூட ஈர்த்துகொள்ளும் ஒரு பொருளில் ஒளிபட்டு அது எதிரொளியாக நம் கண்ணுக்கு வந்தால்தான் பார்க்க முடியும், ஒளியினையும் இழுத்து ஒலியினையும் அது இழுத்து வைத்தால் என்னாகும்? அதை காணவே முடியாது உணரத்தான் முடியும், இதுவரை வந்ததெல்லாம் […]

திமுக மேல் என்ன வன்மம்?

ஏன் கலைஞரை போற்றுகின்றாய் அதே நேரம் இப்பொழுதிருக்கும் திமுக மேல் என்ன வன்மம் என்றால் சொல்ல ஒன்றுமில்லை இப்போதிருக்கும் திமுக என்பது திமுக எனும் மூன்று எழுத்தை போல ஸ்டாலின் உதயநிதி கனிமொழி என ஆகிவிட்டது கலைஞர் எதில் தனித்து நின்றார் என்றால், காமராஜரை எதிர்த்து அவரின் அரசியல் இருந்தது ஒரு கட்டத்தில் ஆட்சி அவரிடம் சிக்கி கொண்டது பொற்கால ஆட்சி நடத்திய காமராஜரை வீழ்த்தி மக்கள் இந்த ஆட்சியினை நம்மிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றால் அதையும் மீறிய […]

ஜாலியன் வாலாபாக் படுகொலை வருத்தம்

பிரிட்டிசார் பெரும்பாலும் உயர்ந்த மனநிலையில் இருந்தவர்கள் இருப்பவர்கள் தாங்கள் உயர்ந்த நாகரீகம் கொண்டவர்கள் எது செய்தாலும் சட்டபடிதான் செய்வோம் அதன் விளைவுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற இருமாப்பில் இருப்பார்கள் இதனால் கேட்க வேண்டிய பல மன்னிப்புகளை கேட்கவே இல்லை அதில் முக்கியமானது ஜாலியன் வாலாபாக் படுகொலை அது நடந்த காலத்தில் உலகத்தின் மிகபெரும் வல்லரசு பிரிட்டன் , அவர்களுக்கு அடுத்து பிரான்ஸ் . ஸ்பெயினும் ஜெர்மனும் 3ம் இடத்திற்கு மோதிகொண்டிருந்தது அமெரிக்கா அப்பொழுது […]

பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார்

இஸ்ரேலில் மறுபடியும் பெஞ்சமின் நேதன்யாகு வெற்றிபெற்றுவிட்டார் ஹமாஸை ஒடுக்கியது, இஸ்ரேலில் தீவிரவாத கொசு கூட வராமல் தடுத்தது, ஜெருசலேமினை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது என பல விஷயங்கள் அவருக்கு சாதகமாயிருக்கின்றன‌ மறுபடியும் அரியணை ஏறிய சிங்கம் எப்படி உறுமுகின்றது என்றால் இப்படித்தான் ஈரானை ஒழிப்போம் விரைவில் 3ம் ஆலயம் ஜெருசலேமில் அமையும் படி மத விவகாரங்கள் இறுக்கமானதாக்கபடும் ஆக விரைவில் இஸ்ரேலிலும் “கர சேவை” நடக்கலாம்

எப் 35 ரக விமானம் விபத்து

உலகின் நம்பர் 1 போர் விமானம் என அமெரிக்காவின் லாஹின் மார்ட்டினால் அறிமுகபடுத்தபட்ட எப் 35 ரக விமானம் ஜப்பான் பக்கம் விபத்துக்குள்ளாயிருக்கின்றது இது அமெரிக்காவுக்கு பலத்த அதிர்ச்சி ஸ்டெல்த் எனப்படும் விமான வகை அது, அமெரிக்காவிடம் மட்டுமே அது உண்டு , சீனா அதை ஓரளவு உருவாக்கிகொண்டிருக்கின்றது ரஷ்யா இவ்விஷயத்தில் பின் தங்கியே இருக்கின்றது ஸ்டெல்த்திற்கும் மற்ற விமானங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக வித்தியாசம் இருந்தாலும் பார்த்தவுடன் எப்படி அடையாளம் காண்பது? மற்றவை உளுவை மீன் போல […]

நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர்

தென் தமிழகத்தில் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் தேர்வில் சொதப்பியிருக்கின்றது என்கின்றன செய்திகள் நிச்சயம் அந்த அப்பாவு என்பவர் சரியான தேர்வாக இருந்திருக்க கூடும் இப்போதைய வேட்பாளர் மேல் பலத்த சர்ச்சைகள் ஏராளம் ஓடிகொண்டிருக்கின்றது அது திமுகவின் மொத்த இமேஜையும் காலி செய்திருக்கின்றது பொதுவாக அப்பகுதி காங்கிரஸின் கோட்டை, அதை உடைத்து திமுகவினை மிக நுட்பமாக வளர்த்திருந்தார் கலைஞர் அப்பாவு என்பவரை அப்படித்தான் உள்ளே இழுத்து போட்டு கட்சியினை வலுவாக வைத்திருந்தார் இப்பொழுது அனுபவம் குறைந்த ஸ்டாலின் […]

ரகசிய விசாரணை நடந்தால் நல்லது

ரபேல் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள், நவீன நுட்பங்கள் போன்றவை வெளியில் வராதவண்ணம் ரகசிய விசாரணை நடந்தால் நல்லது அவை சற்று வெளிதெரிந்தாலும் உலக அரங்கில் இந்திய விமானபடை பலத்தின் ரகசியம் வெளிவந்துவிடும் என்பதால் அதைத்தான் செய்ய வேண்டும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications