பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விசித்திர விதி

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் உலகமெல்லாம் கடை திறந்து சாப்பாடு போட்டாலும் அன்னாருக்கு சிறையில்தான் சோறு என்பது விதி விசித்திரமான விதி “விலைமகள் ஒரு நேரத்து சோறு, ஆனால் அடுத்தவன் மனைவி மனைவி உயிரை எடுத்துவிடுவாள் ” என முன்னோர்கள் சொன்ன தத்துவம் இவர் விஷயத்தில் உண்மையாயிற்று

பதில் இல்லை

இவர்கள்தான் கஜா புயலுக்கு மோடி ஏன் வரவில்லை அதற்கு ஏன் வரவில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஒரு கோஷ்டி கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி கஜா புயலுக்கு ஏன் வரவில்லை, ஒருவர் செத்தார் வருவார்? 40 பேர் செத்தால் வரமாட்டாரா? என கேள்வி எழுப்பிகொண்டே இருக்கின்றது அதற்கு பாஜகவினரிடமும் பதிலில்லை திமுகவிடமும் பதிலில்லை ஏன் தோளில் வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்கிரமாதித்தனிடமே பதில் இல்லை

விளம்பர பிரியர்

கொல்லபட்ட தீவிரவாதிகள் உடலை அன்றே புதைத்துவிட்டது பாகிஸ்தான், இது தனிபட்ட இந்தியாவின் அடி என்றால் யுத்தம் வெடித்திருக்கும் ஆனால் வல்லரசுகள் பின்னால் இருப்பதால் பாகிஸ்தான் அமைதி, அதே நேரம் இன்னொரு முறை இந்திய விமானம் வந்து செல்லமுடியாதவாறு வான் பரப்பை பாதுகாத்தாயிற்று இன்னொரு தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் நடக்காது என சொல்ல உறுதியில்லை, எப்பொழுதும் நடக்கலாம் ஆனால் இன்னொரு முறை இந்திய விமானம் எல்லை மீறுவது மகா சிரமம் நாடு எத்தனையோ பிரதமர்களை கண்டிருக்கின்றது, இப்படி ஒரு […]

இருந்து பாருங்கள், நிச்சயம் செய்வார்கள்

ராணுவ வீரர்கள் 44 பேர் செத்தற்கே விடுதலை புலிகள் படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்திய கோஷ்டி சங்கி கோஷ்டி மிக சீரியசாக கண்ணீர் எல்லாம் விட்டு அஞ்சலி செலுத்தி சத்தியம் எல்லாம் செய்தது அப்படிபட்ட கோஷ்டி இதோ பாகிஸ்தான் செயற்கை கோளை தகர்த்த விஞ்ஞானிகள் என இவர்கள் படத்தையும் வைத்து வணங்குவார்கள் இருந்து பாருங்கள், நிச்சயம் செய்வார்கள். அவர்களின் நாட்டுபற்று அப்படி..

இதென்ன பிரமாதம்

“இதென்ன பிரமாதம், எங்க அண்ணன் விட்டான் பாரு ஒரு ராக்கெட், அதுல விண்புலிகள் 10 பேர் போனாங்க அண்ணன் தான் ஓட்டுனாரு, நேரே போய் சிங்களனுக்குள்ள செயற்கை கோளை அணைச்சி போட்டானுக‌ நம்ம புலிகள். நானும் அண்ணனும் அதை கவனிச்சிட்டே இருந்தோம் அது ராத்திரி 12 மணிங்கிறதுனால உலகம் தூங்கிட்டு எவனுக்கும் தெரியல, அந்த‌ நேரத்துல இலங்கையில‌ தொலை தொடர்பு இல்ல, அந்த இடைவெளியிலதான் புலிகள் ஆயுதம் வாங்குறது, சிங்களன அடிக்கிறது எல்லாம் பொட்டண்ணா கூட அப்போ […]

செயற்கைகோள் முக்கியம்

வறுமை அமெரிக்காவிலும் உண்டு, சீனாவிலும் உண்டு, ரஷ்யாவிலும் உண்டு வறுமை இல்லா நாடு என ஒன்றுமில்லை அது எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் இருக்கின்றது நாட்டின் பாதுகாப்பே பிரதானம் அதற்கு பல விஷயங்களை செய்யத்தான் வேண்டி இருக்கின்றது என்ன செய்து தொலைப்பது எதிரிகள் நமக்கு உருவாக்கபட்டார்கள் நாம் உருவாக்கவில்லை, இந்த யழவுபட்ட உலக அரசியலில் நம் பாதுகாப்பையும் பார்க்க வேண்டி இருக்கின்றது செயற்கை கோள்களை அனுப்பித்தான் புயல் வருவதையும் மழை வருவதையும் எச்சரிக்க முடிகின்றது தொலைதொடர்பு முதல் […]

ஏன்?

அந்த ஆளு பிரதமராக இருந்தால் அடுத்தமுறை உலக கோப்பையினை வாங்கவே கூடாது ஏன்? பின்னே, உடனே வந்து கோப்பையினை பிடுங்கி என்னால்தான் வெற்றி என்பார், கண்டிப்பா வந்து சொல்வார் அதை கூட தாங்கலாம். ஆனால் அடிபொடிகள் மோடி அடித்ததில் பந்து பாகிஸ்தானில் விழுந்தது, மோடி பவுலங்கில் ஸ்டெம்ப் லண்டனுக்கு பறந்தது நாங்கள் கண்ணால் பார்த்தோம் என்பார்கள், அதை தாங்கமுடியுமா? சத்தியமா முடியாது, அதுவும் ஒரே பந்துல 9 விக்கெட் எடுத்தாரு, ஒரே பந்துல 10 சிக்ஸ் அடிச்சாருன்னு […]

அவர்களுக்கு புதிதா என்ன?

மோடி எதிரி நாட்டு செயற்கை கோளை உடைத்துவிட்டார் என மறுபடியும் கானசபா கோஷ்டிகள் தொடங்கிவிட்டன‌ சும்மா இன்னொரு நாட்டு செயற்கை கோளை மாட்டுகறி வைத்திருந்த இஸ்லாமியனை அடிப்பது போல் எளிதாக அடிக்க முடியாது பாபர் மசூதி போல சும்மா இடிக்கவும் முடியாது அதுவும் பாகிஸ்தான் செயற்கைகோள் எல்லாம் விஷயமே அல்ல, அவர்களே சாதாரண செயற்கைகோளுகே தடுமாறுகின்றார்கள் இந்த சோதனையில் பாகிஸ்தானின் செயற்கைகோள் எதுவும் தொட்டு கூட பார்க்கபடவில்லை பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் ஏகபட்ட கைவிடபட்ட விணகலன்கள், செயற்கைகோள்கள் […]

பெருங்கொடுமை

கோவையில் 6 வயது சிறுமியினை கற்பழித்து கொன்றிருக்கின்றார்கள் இதெல்லாம் இனி சட்டம் போட்டு தடுக்கும் கதையாக தெரியவில்லை, சீர்கேடுகள் வேறு எங்கோ இருக்கின்றன சட்டத்தால் தடுக்க முடியாததை விழிப்புணர்வு மூலமாகத்தான் தீர்க்கமுடியும் இச்சமூகத்தின் கடைசி சிறுமிக்கு ஆபத்து நிகழ்ந்தபின் யோசிப்பதை விட இப்பொழுதே உரிய திட்டங்களை தீட்டுதல் நலம் அதற்கு முன் இந்த குற்றவாளிகளுக்கு மாபெரும் தண்டனை கொடுத்தே தீரவேண்டும் கடும் பசியிலிருக்கும் விலங்குகள் கூட குட்டிகளை தொடுவதில்லை. இந்த கொடூரர்கள் அவைகளை விட மகா மோசம் […]

உலகிற்கே புதிது

வழக்கமாக மாபெரும் சோதனை முடிவுகளை தலமை விஞ்ஞானி அறிவிப்பார் பிரதமர் வாழ்த்துவார் சதீஷ் தவான் காலத்திலிருந்து இந்த ரவி அருணன், சிவன் காலம் வரை அதுதான் நடந்திருக்கின்றது சம்பந்தபட்ட விஞ்ஞானதரப்புத்தான் வெற்றியோ தோல்வியோ அதற்கு பொறுப்பு அவர்கள்தான் சொல்ல வேண்டும், அதுதான் முறை இப்பொழுது பிரதமர் செய்தி வாசிக்கின்றார், விஞ்ஞானிகள் எல்லாம் கைதட்டுகின்றனர் இதெல்லாம் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications