பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காமெடி கோஷ்டிகள்

சங்கிகள் ஒரு பக்கம் வானை பார்த்து “மோடிநாதா மோடிநாதா” என கத்திகொண்டிருக்கின்றது மறுபக்கம் பகுத்தறிவு கோஷ்டிகள் வந்து “எங்கடா ஏவுகனை? எங்கே செயற்கை கோள்? ம்ம் உடைந்த பாகத்தை காட்டு?” என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றது இரண்டுமே காமெடி கோஷ்டிகள் உலகம் இந்தியா எம்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது என யோசித்துகொண்டிருக்க இந்த இரு கோஷ்டிகளும் தனியாக கத்திகொண்டிருக்கின்றன‌ இப்பொழுதெல்லாம் எது நடந்தாலும் இந்த இரு கோஷ்டிகளின் மோதல் உடனே தொடங்கிவிடுகின்றது பரமார்த்த குருவின் சீடர்கள் இருபக்கமும் இருப்பதால் […]

பக்தாள் உலகமே ஒரு தனி உலகம்…

ஒரு ஏவுகனை சோதனை நடந்திருகின்றது, அதற்குள் துருவ நட்சத்திரம் அருந்ததி நடத்திரத்தை கூட மோடியால் அடைய முடியும் மோடி நினைத்தால் வானில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்க முடியும் அழிக்கவும் முடியும் என கன்னத்தில் போட்டு கொள்கின்றன சில சங்கிகள் ஒரு சங்கி சொல்கின்றது கடலில் நடமாடும் திமிங்கலங்களில் பாதி மோடி உருவாக்கிய நீர்மூழ்கியாம் அது திமிங்கலம் மாதிரியே இருக்குமாம் இன்னொரு சங்கி வானத்தை பார் அதில் பாதி விண்மீன் அல்ல மோடியின் செயற்கைகோள் என்கின்றது பக்தாள் உலகமே […]

பெரும் அறிவிப்பு

பெரும் அறிவிப்பு என மோடி சொன்ன விஷயம் இதுதான் இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் (EMISAT) என்பதை அடுத்தமாதம் விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது 29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த கோள் விண்ணில் 7563 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தபடும் இதில் இருந்து மிக நுட்பமாக விளக்கபடும் அதில் மிக மிக நவீன வசதிகள் உண்டு, நடமாட்டம் மட்டுமல்ல அது போக அணு ஆயுத ரகசியம், சிக்கல் என்றால் எலக்ட்ரானிஸ் விஷயங்களை கட்டுபடுத்தும் நுட்பம் […]

தேர்தல் துளிகள் 27/03/2019 (2)

இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது – பாஜக மந்திரி செல்லூர் ராஜூக்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்களாம் பிரியங்காவின் மூக்கு இந்திரா போல் கூர்மையாக இருப்பதால் அவர் பிரதமராவார் என யாரோ இவரிடம் சொன்னார்கள், இவர் மறுத்தாராம் இந்திராவுக்கு மக்கள் மூக்கு பார்த்தா வாக்களித்தார்கள்? வைகோவினை உடன்பிறப்புகள் பாதுகாப்பதும், சுப்பிரமணியன் சாமியின் அட்டகாசத்தை பாஜகவினர் பல்லை கடித்து பொறுத்துகொண்டிருப்பதும் காங்கிரசார் திருமாவுக்கு பிரச்சாரம் செய்வதும் பிரேமலதாவினை ராமதாஸ் கோஷ்டி சகித்துகொண்டிருப்பதும் விதியின் பலன் […]

அஸ்வின் அநாகரிகமாக நடந்தாரா?

இன்று அஸ்வின் அநாகரிகமாக நடந்தார் என கொந்தளிக்கின்றார்கள் அன்றொருநாள் கபில்தேவ் என்பவரே தென்னாப்ரிக்காவுக்கு எதிராக இதையே செய்தார் ரன்னர் கபில் கையிலிருந்த பந்து ரிலீசாகும் முன்பே ஓடிவிட சுதாரித்த கபில் ஸ்டெம்பை தட்டினார் அன்று அது கொண்டாடபட்டது , கபில் சமயோசிதம் , சாதுர்யம் இன்னும் என்னவெல்லாமோ சொன்னார்கள் ஆனால் அதையே அஸ்வின் செய்தால் திட்டுகின்றார்கள் இதற்கெல்லாம் ஒரே காரணம் வரலாறோ முழு அறிவோ இல்லாதவர்கள் ஒரு விஷயத்தை ஆர்வ கோளாறில் எழுதவருவது ஒன்றேதான்

கார்ப்பரேட் ஜெகத்ரட்சகன்

இலங்கையில் அம்பாந்தோட்டை எனும் நகரில் அமையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் திட்ட மதிப்பீடு 28000 கோடி. இதில் 70% கிட்டத்தட்ட 18000 கோடி ரூபாய் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட சில்வர் பார்க் இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்தால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை புரிகின்றதா இனி படியுங்கள் இந்த சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்கள் யாரென்றால் இந்த ஜெகத்ரட்சகனும் அவரின் குடும்பத்தாரும் இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் இலங்கைக்கு மோடி, ரஜினி போன்றோர் செல்ல கூடாது என கொடிபிடித்த திருமா […]

பணவெறியா?

“பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள் அருத்தி வேதியர்க்கு ஆன்குலம் ஈந்து, அவர் கருத்தின் ஆசை கரையின்மை கண்டுஇறை சிரித்த தன்மை நினைந்தழும் செய்கையாள்” அதாவது ராமன் காட்டுக்குச் செல்லுமுன் தனக்கு இருந்ததை எல்லாம் தானம் செய்தானாம் , முதலில் பசுதானமாம் அப்பொழுது ஒரு அந்தணணிடம் ‘நீங்கள் எவ்வளவு தூரம் கல்லெறிகிறீர்களோ அதற்குள் அடங்கும் பசுக்களெல்லாம் உங்களைச் சேர்ந்தது’ என்று கூற, வேதியரும் கல்லெறிகிறார். கிட்டதட்ட ஆயிரம் பசுக்களுக்கு மேல் வரும் தூரத்தில் கல் எறிந்தாலும் அந்த […]

உங்க சகவாசமே வேண்டாம்

சங்கிகள் மாவீரன் திப்புவின் வீரவரலாற்றையும் மாற்றி சொல்ல ஆரம்பித்தாயிற்று நல்ல வேளையாக கட்டபொம்மன் மருதுபாண்டியர் எல்லாம் இந்துக்களாகிவிட்டனர் இல்லை என்றால் அவர்கள் நிலை அதோகதிதான் ஒரு மாவீரனின் வரலாற்றை, அதுவும் மாவீரன் நெப்போலியனே வியந்த ஒருவன் வரலாற்றை திரிக்கும் சங்கி கும்பல், பாபர் மசூதியினை எப்படி எல்லாம் திரிக்கும்? உங்க சகவாசமே வேண்டாம், போங்கடா டேய்..

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ மதியழகன் -தென்னகம்; அண்ணாதுரை -திராவிட நாடு; என் வி நடராஜன் -திராவிடன்; ஆசைத்தம்பி- தனியரசு; சி பி சிற்றரசு -போர்வாள்; கண்ணதாசன்-தென்றல்;கருணாநிதி-முரசொலி; ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; அரங்கண்ணல்-அறப்போர்; மனோகரன்-விந்தியம்;பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; எம் ஜி ஆர்-சமநீதி; மாறன்-மறவன் மடல்;நெடுஞ்செழியன் -மன்றம் உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ் பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா ஆம், அவரே எப்படி […]

கடவுள் இருக்கான் பாலாஜி..

காமராஜர் கக்கனுக்கு பின் ஒரு சாமன்யர் காங்கிரஸில் பெரும் அடையாளமாக உருவாகிவருவது வரவேற்கதக்கது கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி இருவரில் யார் சிறந்தவர் என்றால் சாட்சாத் ஜோதிமணிதான் 42 வயதேயாகும் ஜோதிமணி பெரும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் (கடந்த காலங்களில் பலமுறை இவரை தோற்கடிக்க பெரும் பணத்துடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி இப்பொழுது அம்மணிக்கு உதவியாக வந்து நிற்கின்றார் கடவுள் இருக்கான் பாலாஜி..)

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications