பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விசித்திர காட்சிகள்

தொடக்கத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் கலைஞர், காமராஜருக்கும் கலைஞருக்குமான பெரும் போர் உலகறிந்தது விருதுநகரில் காமராஜரை கலைஞர் கோஷ்டி தோற்கடித்தபொழுதுதான் கனிமொழி பிறந்தார் நாகர்கோவில் வரை அவரை விரட்டியடித்தார் கலைஞர் நாகர்கோவிலில் “இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?” என முழங்கியவர் கலைஞர் நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின் அந்த தோல்வியில் காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி அப்பொழுது கனிமொழிக்கு வயது 5 […]

அவ்வளவு நல்லவர்கள் நீங்கள்

போங்கடா டேய் அந்த வைகோவினையே சேர்த்து கொண்டீர்கள், கலைஞர் மேல் சீறிபாய்ந்த பாய்ந்த அந்த கலைராஜனையும் நேற்று சேர்த்து கொண்டீர்கள் உங்களை மிக மிக கொச்சைபடுத்துபவர்களை எல்லாம் தேர்தல் உடனே அணைத்து கொள்கின்றீர்கள். யாரெல்லாம் கடந்த காலங்களில் உங்களுக்கு குழிபறித்தார்களோ அவர்களை எல்லாம் தயக்கின்றி இப்பொழுது மேலே ஏற்றிவிட அரும்பாடுபடுகின்றீர்கள் எவ்வளவு நல்லவர்கள் நீங்கள்? எப்படி எல்லாம் இந்த நபர் நம்மை அவமானபடுத்தினார், தோற்கடித்தார் இம்சைபடுத்தினார் என்றெல்லாம் கொஞ்சமும் உங்களுக்கு கவலையே இல்லை உங்கள் மறதியும் பெருந்தன்மையும் […]

திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி

“ஒமுங் குமார் இயக்கியுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டது. அதில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுகிறது. திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” இப்படி சொல்லி நீதிமன்றம் செல்கின்றது திமுக‌ அந்த வரியினை கவனியுங்கள் //திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி// எந்த திமுக? வேலைக்காரி, பராசக்தி தொடங்கி சினிமாவினை தன் கட்சி விளம்பரத்திற்காக பயன்படுத்திய அந்த திமுக‌ கொஞ்சமா திரைபடத்தில் ஆடினார்கள்? […]

நாஸ்டர்டாமஸ் இந்தியா பற்றி சொன்னது

“உலகின் முடிவில் கிழக்கிலிருந்து பெரும் ராணுவம் ஒன்று வரும், சில நதிகள் காய்ந்துவிடும் அது வழியாக அந்த மாபெரும் சேனை வரும் அந்த வலிமையான சேனை மாபெரும் யுத்தத்தை தொடுக்கும், அதை தடுப்பார் யாருமிலர்.” இப்படி சொல்வது பைபிளின் திருவெளிப்பாடு இதை முதலில் உலகம் நம்பவில்லை, கிழக்கில் இருந்து ஒரு பெரும் அரசா? வாய்ப்பே இல்லை என நம்பினார்கள் ஆனால் செங்கிஸ்கான் அந்த அச்சுறுத்தலை கொடுத்தான், என்ன காரணமோ தெரியவில்லை அவன் மேற்காசியா பக்கம் பாயாமல் ஐரோப்பாவுக்குள் […]

ஆயிரம் மடங்கு அழகு

எங்கு போனாலும் உயர்ந்த பட்டுடுத்தி, கவனமாக ஒப்பனையிட்டு, தலையெல்லாம் பூச்சூடி , நகையெல்லாம் பூட்டி கிட்டதட்ட கிளியோபாட்ரா தோரணையில் வருபவர் அவர் பெரும் போராட்டமோ இல்லை நாட்டுக்காக சில கருத்துக்களோ சொன்னதே இல்லை அவர், தந்தை வழியில் அவரால் மட்டுமே அரசியலுக்கு வந்தவர் நாகரீகமான மேடைகள், மேலிடத்தோர் வீற்றிருக்கும் அவைகள் தவிர அவரை காணமுடியாது ஆனால் டாக்டராயினும் எங்கு சென்றாலும் பரட்டை தலையுடனும், வயலுக்கு செல்லும் பெண்ணின் பாமர தோற்றத்துடனும் மனதில் பட்டதை மிக தைரியமாக சொல்லியும் […]

இதுதான் தமிழக அரசியல்

மூத்தவர்களை மோடி மதிப்பது இல்லை, இதோ அத்வாணியினை ஒதுக்கிவிட்டார்கள் என பலர் கிளம்பிவிட்டார்கள் வரலாற்றில் இக்காட்சியினை கொண்டுவந்தது காங்கிரஸ் இந்திராவும், சஞ்சயும் அதற்கு வழிகாட்டிகள். இந்திரா என்ன மூத்தோரை மதித்தாரா? காமராஜர் முதல் கிருபாளினி வரை அவர் எப்படி மதித்தார் என்பது தெரியாதா? கொஞ்சமும் மதித்தது இல்லை அவர்களை ஒப்பிடும் பொழுது 91 வயது அத்வானிக்கு ஓய்வு கொடுத்திருப்பது கவுரவமே.. அத்வாணிக்கு சீட் கொடுக்கவில்லை “ஹேய்ய்ய்ய் பாசிச பாஜக..” என பொங்குபவர்கள் எல்லாம் க‌.அன்பழகனுக்கு ஏன் சீட் […]

தெளிவாகவே காய் நகர்த்துகின்றார்

டிடிவி தினகரன் தெளிவாகவே காய் நகர்த்துகின்றார் தேசிய அரசியல் அவருக்கு தேவையில்லை, மாநில அரசியலே பிரதானம் அதில் ஆர்.கே நகரில் வென்றும் விட்டார் அவருக்கு ஒரே இலக்கு பழனிச்சாமி கும்பலை விரட்டுவதேயன்றி வெல்லுவதோ இல்லை டெல்லிக்கு செல்வதோ இல்லை டிடிவி தினகரன் பிரிந்திருப்பது திமுக முகாமுக்கு மிக மிக‌ நல்லது, அது யாருக்கோ பொறுக்கவில்லை யாருக்காக இருக்கும்? கருணாநிதி ஒரு காலத்தில் “ஆண்டி பண்டார” கட்சி என அழைத்த அந்த கட்சிக்காக இருக்குமோ?

இனி என்ன செய்யலாம்?

பொது தேர்தல் 2019 – தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட சமூக வலைதளங்கள் ஒப்புதல் நல்லது, இனி என்ன செய்யலாம்? வெண்டக்காய் உடலுக்கு நல்லதா? கம்பங்க்கூழ் தயாரிப்பது எப்படி? தியானம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன? அதிகாலை ஏன் எழ வேண்டும் சூரியனின் கரும்புள்ளிகள் என்ன செய்யும்? கருந்துளை என்றால் என்ன? இன்னொரு அண்டம் உண்டா? அங்கிருந்து எகிப்துக்கு உயிர்கள் வந்ததா? ஆதிகால மனிதனின் நாகரீகம் எப்படி இருந்தது? இதுபோன்றவைகள் பக்கம் திரும்பிவிட வேண்டியதுதான்

நாம் தரம் தாழ்ந்துவிட்டோமா?

ஒரு சில பதிவுகளை கடக்க முடிந்தது, அதில் நாம் லைக் என்பதற்காக எழுதுகின்றோம் என்றும் தரம் தாழ்ந்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் முகநூல் என்றால் என்னவென்றே அறியாத காலங்களை திரும்பி பார்க்கின்றேன், அன்று நான் மட்டும்தான் இருந்தேன் இத்தனையாயிரம் பேர் வருவார்கள் என்றோ, இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்றோ எண்ணி கீபோர்டை தட்டவில்லை எமக்கு எது நியாயமோ? எது மனதை பாதித்ததோ? எது நாட்டுக்கான விஷயமோ அதைத்தான் சொன்னோம், எம் போக்கில் எழுதி கொண்டே இருந்தோம் திரும்பி பார்த்தால் […]

அமெரிக்காவே கண்டிக்கும் அரசு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு உடனே இதோ பார் அமெரிக்காவே கண்டிக்கும் அரசு என கிளம்பிவிட்டார்கள். நாம் அப்பொழுதே சொன்னோம், தமிழ்நாடு அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சில சக்திகள் நடமாடும் பகுதி. இந்தியாவினை உடைக்க அவர்களை அமெரிக்கா தூண்டிவிடும் தூபமிடும் சீனா தன் நாட்டில் செய்யாத அட்டகாசம் கிடையாது, அவர்களுடனெல்லாம் கைகுலுக்க தெரிகின்றது இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலையாளிகள் ராஜ்பக்சேயும் , சரத்பொன்சேகாவும் அமெரிக்க பிரஜைகள் ஒரு வார்த்தை கண்டிப்பு கிடையாது அட அவ்வளவு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications