பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரகுவரன்

தமிழகத்தில் மறக்க முடியாத கலைஞர்கள் பலர் உண்டு எனினும், ஆர்பாட்டமில்லா அமைதியான நடிப்பில் பின்னி எடுத்து நிலைத்தவர்கள் மிக சிலர் முகத்திலே எல்லா உணர்ச்சிகளையும் காட்டிவிட்டு அதிகம் பேசாமல் அமைதியாக அட்டகாசமாக ஏற்ற பாத்திரத்தை ஜொலிக்க வைத்த‌ நடிகர்களை தமிழகத்தில் ஒரே விரலில் எண்ணிவிடலாம் அவ்வகையில் முதலிடத்தில் இருந்தவர் ரகுவரன் எல்லா வகை உணர்ச்சிகளையும் முகத்திலே அற்புதமாக காட்டிய மாபெரும் நடிகர் அவர் குணசித்திரம் முதல் பல வேடங்களில் அவர் நடித்திருந்தாலும் அவரின் வில்லன் வேடங்களில் மனதில் […]

டெங்கி கொசு கும்பல்கள்

பாஜகவின் சில சங்கி கும்பல்தான் அள்ளிவிடும் என்றால் இந்த திமுகவின் டெங்கி கொசு கும்பல்கள் அதை விடமோசமாக அள்ளி விடுகின்றது இதோ இப்படியாக‌ //கலைஞர் பிறந்தது திருவாரூர் சுற்று வட்டாரத்திலேயே அதிக வசதியான குடும்பத்தில்தான். அவர் பெற்றோர் அன்றாடம் காய்ச்சிகளில்லை.செல்வந்தர்கள். அவரது வீடு பெரிய வசதியான ஓட்டு வீடு. திருக்குவளையின் மையத்தில் அமைந்திருந்த்து அது. அந்த காலத்திலேயே ஆங்கில மீடிய பள்ளியில் சேர்ந்து படித்தவர் கலைஞர்.// தன் நெஞ்சுக்கு நீதியிலும் இன்னும் பல இடங்களிலும் தன் குடும்ப […]

இது குதிரை பந்தயம்

சில கட்சிகளில் குறிப்பாக பெரிய கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களிடம் கேட்டால் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா? இப்படித்தான் “நேர்முகம் எல்லாம் சும்மா, நேரடியாக 10 கோடிக்கு மேல் கேட்டார்கள், அவ்வளவு இல்லை என்றோம். அப்படியா சரி கட்சி முக்கியம் அல்லவா? அதனால் உங்களை விட யாரால் கொடுக்க முடியுமோ அவர்களுக்கு சீட், மற்றபடி உங்கள் ஒத்துழைப்பு தேவை அடுத்த தேர்தலுக்குள் குறிப்பிட்ட‌ பணம் சேர்த்துவிட்டால் உங்களுக்கு அப்பொழுது கண்டிப்பாய் சீட் கொடுக்கபடும், கட்சி யாரையும் கைவிடாது” மேற்கொண்டு சொன்னார், […]

வாழ்த்தத்தான் வேண்டும்

டெஸ்ட் போட்டியில் தன் முதல் வெற்றியினை பெற்றிருகின்றது ஆப்கன் அயர்லாந்துக்கு எதிரான வெற்றி என்றாலும் அவர்களுக்கு முதல் வெற்றி ஆப்கன் மற்ற “தான்” நாடுகளை போல் அமைதியாகத்தான் இருந்தது, “கம்யூனிசத்திற்கு எதிரான உலக இஸ்லாமியரே ஒன்று கூடுங்கள்” என்ற சி.ஐ.ஏவின் கோஷ்த்தினால் 1980களில் எரிய ஆரம்பித்தது கம்யூனிசத்தை விரட்ட மதவெறியே சரியான தேர்வு என அது ஊட்டபட்டது, அந்த வெறி ஏற ஏற அச்சூழல் இந்தியா பாகிஸ்தான் ஏன் அமெரிக்காவினையே தாக்கியது அதன் பின் விஷயத்தின் விபரீதம் […]

ரஷ்யா கனத்த அமைதி

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த சிக்கல்கள் என எதிலும் ரஷ்யாவோ புட்டீனோ வாயே திறக்கவில்லை மாறாக அமெரிக்க துப்பாக்கிகளை விட ரஷ்ய துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கபடும் என இந்தியா அறிவித்தது ஆயினும் ரஷ்யா கனத்த அமைதி, ஏன் இந்த அமைதி என்பதில் பல கணக்குகள் இருந்தன‌ விஷயம் இந்திய விமானபடையில் இருக்கின்றது கிட்டதட்ட 200க்கு மேலான மிக் விமானங்கள் விபத்துகுள்ளானது, இது மொத்த விமானபடை எண்ணிக்கையில் 4ல் ஒரு பங்கு ஆகும் ரஷ்யாவின் சுகோய் 30 சில […]

உலக சிட்டுகுருவிகள் தினம்

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம் தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள். சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர். லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று […]

நாம் தமிழர்ணே சும்மா அலறவிட்டோம்ல‌

அண்ணே எங்க ஆடியோ கேட்டீங்கல்ல, நாம் தமிழர்ணே சும்மா அலறவிட்டோம்ல‌ என்னடா அலறவிட்டீங்க, ஏதோ சின்னபசங்க கபடி ஆடுறமாதிரி சண்டையெல்லாம் போட்டு காமெடியா இல்ல‌ அண்ணே, எனக்கு கோபம் வந்துரும். இது வேற‌ என்னடா? அண்ணே எந்த கட்சியில இது சாத்தியம்? தலைவன் நேரடியா தொண்டர்கிட்ட பேசுறதும், வெளியே போங்குறதும். தலைவன் போடான்னு சொன்னாலும் முடியாதுன்னு நிக்குறோம்ல, இதுதாண்ணே கெத்து மானமுள்ள கட்சிண்ணே, இத பார்த்து மத்த கட்சி எல்லாம் பயந்து போய் இருக்கு , இது […]

ஒன்றும் ஆச்சரியமல்ல

இது தேர்தல் திருவிழா நடக்கும் நேரம் பல வகையான விளையாட்டுக்கள், கூத்துக்கள் எல்லாம் நடக்கும், அது ஒன்றும் ஆச்சரியமல்ல‌ மேளம் அடிக்கும் வேலையினை பத்திரிகைகளும் டிவிக்களும் செவ்வனே செய்கின்றன‌ மக்கள் எனும் ஆடுகளை வெட்ட பல இடங்களில் மஞ்சள் தண்ணீர் தெளித்தாகிவிட்டது, அவைகளும் தலையாட்டி கொண்டு காத்திருக்கின்றன‌ திருவிழாவின் கடைசி நாளில் தீமிதிப்பார்கள், அது வரை கொண்டாட்டம்தான் முதலில் ஜல்லிகட்டு நடத்தி தங்கள் பலம் காட்டினார்கள், விஜயகாந்த் என்ற காளை மட்டும் போக்கு காட்டியது , அதுவும் […]

எப்படி அரசியல் செய்வது?

37 எம்பிக்களை வைத்து என்ன வற்புத்தினீர்கள் என ஆளும் கட்சிக்கு ஏக நெருக்கடி கொடுக்கபடுகின்றது பதில் அவர்களிடமே இருக்கின்றது, ஆனால் அமைதி ஏன் காக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை முதல் விஷயம் ஜல்லிகட்டு, அந்த மாபெரும் எழுச்சி வெற்றியாக இந்த அரசும் அந்த எம்பிக்களும் காரணம் இன்னும் காவேரி நடுவர் ஆணையம், எட்டு வழிசாலை, ஜிஎஸ்டியில் பங்கு, அது போக பல விஷயங்கள் நடந்தன‌ ஜல்லிகட்டை நாங்கள் மீட்டோம் என மார்தட்டினாலே எதிர்கட்சிகளிடம் பதில் இருக்காது நிறைய விஷயங்கள் […]

ஒய் மைடியர் சன்

“மம்மி, அந்த ஸ்டாலின் பிரதமராக போகுதா? ஒய் மைடியர் சன் பின்னே, தேர்தல் அறிக்கைன்னு என்னமோ வாசிக்குது,நம்ம ஆளுங்க சம்பிரதாயத்துக்கு கூட இல்ல. இது பிரதமர் தேர்தலா இல்ல அவங்க சட்டமன்ற தேர்தலா? ரொம்ப ஷேம் மம்மி மை சன், அவங்கள பத்தி உனக்கு தெரியாது, எங்களை கண்டு அமெரிக்காவும் ரஷ்யாவும் அஞ்சுகின்றன என்றெல்லாம் கூட பேசியவர்கள் அவர்கள்? இஸ் இட் மம்மி, இப்போ கூட அகில இந்திய பிரச்சினை எல்லாம் அவங்க சென்னையிலே சால்வ் பண்ற […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications