பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கத்து சாபம் சும்மா விடாது

இந்த மார்ச் 15 ஒரு நாசமாய் போன நாள், கருப்பு நாள், கலங்க வைத்த நாள் ஆம் அன்றொருநாள் இதே நாளில்தான் ஜூலியஸ் சீசர் எனும் பெரும் சாகசக்காரன் தான் நம்பியவர்களால் கொல்லபட்டிருக்கின்றான் ஐரோப்பாவின் நவீன நாகரிகத்தை அவனே தொடங்கி வைத்தான், இன்றளவும் ஐரோப்பாவின் அரச அமைப்பும் பல விஷயமும் அவனையே பின்பற்றுகின்றன‌ அந்த மாபெரும் பராக்கிரமசாலி வீழ்த்தபட்டான், அவனை நம்ப வைத்து உடனிருந்தவர்களே கொன்றனர் முதல் இரு வெட்டு முதுகில் விழுந்ததும் நண்பர் புரூட்டஸிடம் ஓடினான், […]

உலகில் மறுபடியும் பரபரப்பு

மிக அமைதியான நாடு நியூசிலாந்து, பெரும் வம்பு சண்டைக்கு எல்லாம் செல்லாது ஆனால் மனிதாபிமான விஷயங்களுக்கு பாடுபடும் ஒரு நல்ல நாடு அந்த நாட்டையும் சண்டாள தீவிரவாதம் விட்டுவைக்கவில்லை, இன்று அங்கும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது முதல் தீவிரவாத தாக்குதலை தன் நாட்டில் எதிர்கொண்டிருகின்றது நியூசிலாந்து உலகில் மறுபடியும் பரபரப்பு தொற்றிகொண்டிருக்கின்றது

சீனா விவகாரம்

சீனா விவகாரத்தில் ராகுல் மோடியினை சீண்ட, மோடி கும்பல் ராகுலை இழுத்து வைத்து கேள்வி கேட்கின்றது என்ன கேட்கின்றார்கள், “சீனாவிற்கு ஐநா சபையில் அந்தஸ்து வாங்கி கொடுத்ததே நேருதானே, அவர்தான் சிக்கலுக்கு முழு காரணம்” என பொங்க தொடங்கிவிட்டார்கள் எல்லா சிக்கலுக்கும் அந்த காலகட்டத்தை பார்க்க வேண்டும், கோரி முகமது காலத்தில் ஏன் மிராஜ் விமானங்கள் பாவிக்கபடவில்லை என்றால் அது அர்த்தமற்றது அக்காலம் கொடுமையானது, இந்தியா சுதந்திரமடைந்த புதிது, வறுமையும் இன்னும் ஏராளமான சவால்களும் இங்கு இருந்தன‌ […]

அவனது அமைச்சரவையே காட்டும்

“கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்மலைப் பெயல் காட்டும் துணை..” ஆற்றில் வரும் பெருவெள்ளம் மலையில் பெய்த மழையின் அளவினை சொல்லும், நல்ல தலைவனின் கல்வியின் அளவை அவன் நிர்வாகத்தை, செல்வ‌ பெருக்கத்தை நீதி கூறும் முறையையும் அவனது அமைச்சரவையே காட்டும்

இருவர் அதிகாரம்

உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்றமுரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடுகொண்டுளவாகிய இரண்டு காளைகள் ஒரு நீர்த்துறையில் ஒன்றாக மேயுமோ? ஒன்றாக‌ தண்ணீர் உண்ணுமோ? உண்ணாது , அது போல மாறுபாடு கொண்ட இருவர் அதிகாரத்தில் ஒற்றுமையாக‌ இருக்க முடியாது (ஆனால் இரு காளைகளையும் அடக்கி வண்டியில் பூட்டும் வல்லமை கொண்ட ஒருவன் முன்னால் அவை அடங்கி வண்டி இழுக்கும்)

சங்கம் பொறுப்பல்ல…

“நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா – அறையோ! வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துதல் என்றுமோ இல்..” அதாவது மனதால் கட்டுபாடு இல்லாத‌ பெண்ணை பெரும் காவலில் வைத்தாலும் தீயவையிலிருந்து காக்க முடியாது, அப்படி காக்க முடியும் என நம்பினால் அது நாய்வாலை நிமிர்த்துவதற்கு சமம் இந்த பாடலுக்கும் பொள்ளாச்சி சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக கருதினால் சங்கம் பொறுப்பல்ல…

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

அந்த 7 பேர் மேலும் கொஞ்சமும் வருத்தமில்லை என “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..” என்பது போல பெருந்தன்மையாக சொல்லியிருகின்றார் ராகுல் காந்தி இந்த 7 பேர் விடுதலை நாடக கம்பெனியும், அந்த மகா முக்கிய ஆர்ட்டிஸ்ட்டான அந்த அற்புதம்மாளும் கண்டு கொண்டதாக தெரியவில்லை நல்லவர்கள் அந்த ராகுலை சந்தித்து நன்றி சொல்ல வேண்டாமா? இந்த ராமதாஸ் கோஷ்டி எதிர்தரப்பு (இப்போது மட்டும்) என்பதால் கண்டுகொள்ளவே இல்லை மற்ற வழக்கமான இந்த 7 பேர் விடுதலை என […]

ராகுலின் எளிமை அந்த குலத்தின் அளவு

நேரு மிகபெரும் செல்வந்தர் ஆயினும் கேம்பிரிட்ஜ்ல் படித்தவராயினும் கதர் தவிர வேறு ஆடை அணிந்ததில்லை தன் தனி அடையாளமான அந்த‌ கோட் கூட கதராக இருக்குமளவு கவனமாக இருந்தார் இந்திரா நூல்சேலை தவிர எந்த ஆடையும் கட்டியதில்லை, காதிலும் கழுத்திலும் கூட ஒரு நகை நீங்கள் பார்த்திருக்க முடியாது ராஜிவ் மிக சாதாரண ஆடைகளையே அணிந்தார், சோனியாவின் சேலையும் பாமரபெண் சாயலிலே இருக்கும் பிரியங்கா, ராகுல் உடைகளும் ஒருநாளும் விலை உயர்ந்தவை அல்ல‌ இவ்வளவிற்கும் சோனியா குடும்பம் […]

தமிழகம் உணர்ந்த உண்மை..

எழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,அழகுடையான் பேதை எனல் அதாவது அழகான மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். இனிய புல்லாங்குழல் தரக்கூடாத ஒலியினை தருதல் துன்பமாம், குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம். ஆம் அறிவில்லாதவன் அழகாயிருந்தால் மிக மிக ஆபத்து எனபது தமிழகம் உணர்ந்த உண்மை..

இதெல்லாம் அவர்களின் அரசியல்..

இதெல்லாம் அவர்களின் அரசியல்.. பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சுதந்திரமான விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைக்க வேண்டும் – வைகோ இந்த கோஷ்டிகள் ஒருமாதிரி ஆகிவிட்டன‌ பொள்ளாச்சி விவகாரத்தில் மாநில காவல்துறை விசாரித்தால் சரிவராது என்றார்கள், பின் சிபிசிஐடிக்கு மாற்றபட்டது அது போதாது என்றார்கள், பின் சிபிஐக்கு வழக்கு வந்தது இப்பொழுது சிபிஐயும் வேண்டாமாம் ஐகோர்ட்டே விசாரிக்க வேண்டுமாம் இனி ஐ.நா மேற்பார்வை வேண்டும் என்பார்கள், அப்படியே ராஜபக்சேவினையும் விசாரிக்க வேண்டும் என்பார்கள் இதெல்லாம் அவர்களின் அரசியல்.. முக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications