பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 15/03/2019(1)

தங்கபாலு நேரடியாக உண்மையினை மேடையில் சொல்லிவிட்டார் மற்ற காங்கிரசார் அறிக்கை என்ற பெயரில் சொல்வார்கள் ஆம், ஒருநாளும் டெல்லியின் உண்மையான கருத்தை இங்குள்ள காங்கிரசார் ஒழுங்காக புரிந்துகொண்டதுமில்லை இங்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமில்லை பாஜக நிலையும் இதுவேதான் உண்மையினை மறைக்காமல் மேடையிலே சொல்லிவிட்ட தங்கபாலுவுக்கு வாழ்த்துக்கள் அதெல்லாம் இருக்கட்டும் ராகுல்காந்தி “தலைவிக்கு சீட் இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட…” “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறி எயிற்று […]

சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

மும்பை.சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய நடை பாதை பாலம் சரிந்து 7 பேர் பலி 30 காயம் அந்த நிலையத்தை கட்டியது வெள்ளையன் அதற்கு விக்டோரியா டெர்மினல் என பெயரும் வைத்தான் இந்த சிவசேனா கோஷ்டி பெயரை மட்டும் மாற்றியது மராமத்து பணிகளை செய்யவே இல்லை, அதை எல்லாம் செய்ய பிரிட்டிஷ்காரனா வருவான்? பிரிட்டிஷார் போல் பராமரிக்காமல் , சும்மா பெயரை மட்டும் மாற்றுவது என்பது அயோக்கியதனம், எதற்கும் சென்னை சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

சட்டவிரோத பண பரிவர்த்தனை

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும், ஒரு கோடி அபராதம். கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை. ஆக அதிமுக பக்கமும் ஒரு பாயின்ட் கிடைத்தாயிற்று, நிச்சயம் அவர்கள் பேசமாட்டார்கள் காரணம் ஜெயா வழக்கு முடிவு உலகறிந்தது அதனால் என்ன செய்வார்கள்? அதோ வந்துகொண்டிருக்கின்றார் அக்கா தமிழிசை, கூடவே எச். ராசாவும் அலெக்ஸாண்டரின் குதிரை வேகத்தில் வருகின்றார்

நடக்கவே நடக்காது

இந்த பொள்ளாச்சி குற்றவாளிகளை என்ன செய்யலாம்? குதறலாமா? கொல்லலாமா? இல்லை நந்தா பட பாணியில் அறுத்துவிடலாமா என ஆளாளுக்கு தீர்ப்புகள் உண்மையில் என்ன செய்யலாம், அவர்கள் எப்படி இப்பொழுது அடிவாங்கி கொண்டிருக்கின்றார்கள்? “மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா., பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே.” என சொல்லி சொல்லி அடி வாங்கி கொண்டிருப்பதால் அவர்களுக்கு அட்டகாசமான தண்டனை இருக்கின்றது இந்த பட்டினத்தார் பாடலை ஒரு நாளைக்கு ஆயிரம் முறை படிக்க வைக்க வேண்டும், அதுவும் இந்த வரிகளை மூச்சுவிடும் […]

பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி

நேற்று காலை பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி நடந்தது, விஷயம் இப்பொழுதுதான் வெளிவருகின்றது ஆம் நேற்று காலை முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் இயங்கவில்லை, அதற்கு முன்பே வாட்சப்பில் சிக்கல் என்கின்றார்கள், நாம் அதிகாலை கனவில் தலைவி குஷ்பு பிரதமராக பதிவியேற்கும் வைபவத்தில் இருந்ததால் அது தெரியவில்லை ஆனால் முகநூலில் உணர்ந்தோம், நுழையமுடியவில்லை இன்னும் பலர் முகத்தில் சாணியடித்தது போல் அலைந்தார்கள் அட்மின் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தான், எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகைகள், ஆயிரம் […]

மில்லியன் டாலர் விலையாக இருக்கலாம்

தொன்மையான ஆவணம் என்றாலும் குறிப்பு என்றாலும் ஆங்கிலேயனாலும், சீனராலும் அவர்கள் மொழியில் படிக்கமுடிகின்றது லத்தீன் மொழி ஜூலியஸ் சீசர் காலத்து குறிப்புகளை படிக்களவும் இன்றும் அப்படியே இருக்கின்றது யூத இனம் தொலைந்து போன ஹீப்ரு மொழியிக்கே உயிர்கொடுத்து பண்டைய வரலாற்றினை புள்ளிமாறாமல் படிக்கின்றது ஆனால் 100 வருடம் முந்தைய நிலபத்திரங்களை கூட தமிழன் படிக்க முடியாமல் தடுமாடுகின்றான் அவனுக்கும் 3 தலைமுறைக்கு முந்தைய தமிழுக்கும் கூட தொடர்பே இல்லை இதில் பண்டைய தமிழும், ஓலைசுவடி தமிழும் எப்படி […]

பசவண்ணா என்றொரு புரட்சியாளர்

இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் பேசிய பெண்விடுதலையினை அன்றே கன்னடத்தில் சொன்ன பசவண்ணா என்றொரு புரட்சியாளர் இருந்தார் அவர் இந்திய வரலாற்றில் முக்கியமானவர், லிங்காயத் பிரிவு அவரால் தொடங்கபட்டது, பெரியாருக்கு 700 ஆண்டுகள் முன்பு பிறந்த பசுவண்ணா பல புரட்சி செய்தார் பசவண்ணாவினை பெரியாருடன் ஒப்பிட்டால் பசவண்ணா இந்திரா காந்தி, பெரியார் மோடி, இதற்கு மேல் நீங்களே முடிவு செய்யுங்கள் அப்படி என்ன செய்தார் என்றால் ஏகபட்ட சீர்திருத்தங்களை அன்றே செய்தார், ஆச்சரியமான புரட்சியாளர் அவர், […]

அக்கா கேட்ட கேள்வி

அக்கா தமிழிசையினை எப்படி கலாய்த்தாலும் இப்பொழுது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு காங்கிரசாரிடமே பதில் இல்லை ராகுலை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் நிச்சயம் காட்டமான ஆனால் படுநியாயமான கேள்விகள் பழைய வரலாறுகள் குறிப்பாக இனதுரோகி என உங்களை அழைத்த சக்திகளுடன் உங்களுக்கு கூட்டணி ஏன் என்பதெல்லாம் காங்கிரசார் கேட்க வேண்டிய கேள்விகள் ஆனால் பாஜக தலைவரான தமிழிசை கேட்டிருக்கின்றார் அக்கா கேட்ட கேள்வியில் மிக அருமையான கேள்வி காமராஜரை ஏன் காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? என்பது இதற்கு ராகுலிடமும் பதில் […]

நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல

வறட்சி ஒருபுறமும், அவைகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் ஊடுருவி ஆக்கிரமித்து அவைகளை விரட்டுவதாலும் இப்பொழுதெல்லாம் யானை உட்பட காட்டுமிருகங்கள் அடிக்கடி வெளிவந்து சாவது அதிகரித்துவிட்டது நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, அவைகளுக்கும் இவ்வுலகில் சரிபங்கு உண்டு. நம் எல்லைக்குள் அவை வருவதே இல்லை, நாமே அதன் எல்லைக்குள் சென்று அவைகளின் வாழ்வினை சாகடிக்கின்றோம் நாம் அறிவில் உயர்ந்துவிட்டோம் என்பதை தவிர என்ன இறுமாப்பு இருக்க முடியும்? அவைகளுக்கு நம் அளவு சிந்திக்க தெரியாது ஆனால் அவைகளும் உயிர், அவைகளும் […]

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது. இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications