பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முழுவதும் பொய் என்றால் எப்படி?

70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்துவிட்டோம் என மார்தட்டுகின்றார் மோடி, அரசியலில் பொய் அவசியம் ஆனால் முழுவதும் பொய் என்றால் எப்படி? அதே கேள்வியினை திரும்ப கேட்கலாம் மிஸ்டர் மோடி காங்கிரஸ் இந்நாட்டுக்காக செய்த காரியங்கள் ஏராளம், நினைவில் இருப்பதை சொல்கின்றோம், மறந்துவிட்டதை மக்கள் சொல்வார்கள் சுதந்திர இந்தியா ஏழையாக பிறந்தது, இங்கு சுரண்டி போட்ட பாண்டமாக மலர்ந்தது, அதில் பிரிவினை வேறு அந்த பிரிவினை கொடுத்த ரத்த ஆறும், பலியும் வலியும் வரலாறு மறக்காதவை […]

சமூக பொறுப்பு

இந்திய தேசிய எதிர்ப்பு, இன்னும் பல விவகாரங்களில் இந்த மனிதர் மேல் பெரும் அபிமானமில்லை ஆனால் இந்த விஷயத்தை வெளிகொண்டு வந்திருப்பவர் இவர்தான், அன்று ஆட்டோ சங்கர் முதல் பல விஷயங்களை உடைத்தது போல் இன்றும் இந்த மாபெரும் பாதகத்தை வெளிகொண்டுவந்திருக்கின்றார் ஒருமனிதன் சமூக பொறுப்போடு சில காரியங்களை தைரியமாக செய்யும்பொழுது நிச்சயம் வாழ்த்த்த வேண்டும் நக்கீரன் கோபாலுக்கு துணை நிற்க வேண்டியது நம் கடமை, இல்லையேல் அறக்கடவுளே நம்மை கொன்றுவிடும் மனசாட்சி இருப்பவர்கள் இவர்பக்கம் நிற்றல் […]

பொள்ளாச்சி விவகாரம்

”பொள்ளாச்சி குற்றவாளிகளை வெளியே நடமாடவிடுவது பேராபத்து” : ஜி.வி.பிரகாஷ் இந்த சுசித்ரா வெளியிட்ட வீடியோ காட்சிகள் பற்றிமட்டும் அன்னார் வாய்திறக்கமாட்டார் அவர்கள் நடமாடலாம், சினிமாவில் கூட நடித்துகொண்டே இருக்கலாம்.. சினிமா கோஷ்டிகள் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கு தகுதியில்லாதது, இந்த சின்மயி என்பவருக்கு ஆதரவாக என்ன செய்தார்கள் இவர்கள்? என்னடா இது? கொடநாடு கொலையாளிகளை ஏற்பாடு செய்த ஜெயாவின் டிரைவர் கனகராஜின் கார் விபத்துக்குள்ளாகி எல்லோரும் சாகின்றனர் கொடநாடு கொலையாளிகள் கார் விபத்துகுள்ளாகின்றது இப்பொழுது இந்த பொள்ளாச்சி சம்பவத்தை […]

சொல்வது யார் தெரியுமா?

இந்திய ராணுவம் சம்பந்தமான செய்திகளை எல்லாம் அள்ளிவிடலாம், ராணுவ தாக்குதல் செய்திகள் எல்லாம் இல்லா பொய்களை சொல்லி என்னவும் பேசலாம் டெல்லி என்றால் எதுவும் எழுதலாம், இந்திய அரசு என்றால் கிழிக்கலாம், தமிழக அரசு என்றால் கிழித்து கொண்டே இருக்கலாம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை எப்படி எல்லாமோ எழுதலாம், இல்லாதது நடக்காதது என சொல்லலாம், நடந்ததை நடக்கவில்லை எனவும் சொல்லலாம் அதற்கெல்லாம் ஒரு சமூக பொறுப்பும் தேவையே இல்லை.. ஆனால் பொள்ளாச்சி விஷயத்திற்கு மட்டும் மக்கள் பொறுப்போடு […]

இந்த இலங்கையர்களை எப்படி விடுவிக்க முடியும்?

அகில உலகிலே தன் சொந்த நாட்டில் வந்து தாக்குதல் நடத்திய அந்நியநாட்டு தீவிரவாதி 4 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒரே கோஷ்டி இதுதான் தன் கணவன் ராணுவத்தில் இறந்தபின் தன் மகனையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பும் மனைவியர் வாழும் நாடு இது தன் ஒரு மகன் நாட்டிற்காக செத்தால் அடுத்தமகனை அனுப்பும் தேசமிது அந்த நாட்டில் இந்த அற்புதம்மாள் போன்றவர்கள் இருப்பதும் உண்டு அற்புதம்மாள் மேல் ஒரு வருத்தம் எப்பொழுதும் உண்டு, ஒரு நாளாவது அம்மணி தன் […]

அதென்ன பனங்காட்டு படை?

அதென்ன பனங்காட்டு படை? பனைமரம் வைத்திருக்கும் அல்லது மரமேறும் நாடார்களுக்கு மட்டுமான கட்சியோ? பனைஏறுபவர்களுக்கு கிரேன் எல்லாம் கொடுக்கும் கட்சி போல் இருக்கின்றது ஆக இந்த பனங்காட்டு படையில் சிவகாசி, மதுரை கன்னியாகுமரி நாடார்களுக்கு தொடர்பே இல்லை என்று தெளிவாக சொல்லிகொள்கின்றார்களாம் இந்த கட்சி இனி உடைந்தால் என்னாகும்? பனங்காட்டு பதனீர் கட்சி, பனங்கற்கண்டு கட்சி, பனங்காட்டு கள் கட்சி, என பல துண்டுகளாக உடையும் இப்போதைய நிலையில் இது ஒத்தபனை கட்சி என்பது மட்டும் புரிகின்றது

அடேய் அதிகம் பேசாதீர்கள்

அடேய் அதிகம் பேசாதீர்கள் இந்திய வரலாற்றிலே ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் உபரி நிதிக்கு ஆட்டையினை போட முயன்ற ஒரே அரசு இதுதான் ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் கால்பந்து ஆடிய ஒரே அரசு இதுதான் போரும் இல்லை, உலக பொருளாதார நெருக்கடியுமில்லை, கச்சா எண்ணெய் கடும் உயர்வுமில்லை பெரும் இயற்கை அழிவுமில்லை அவ்வாறான ஒரு இடர்பாடுமே இல்லா நேரத்தில் உபரி நிதியினை கோரினால் இவர்களின் நிர்வாகமும் ஆட்சியும் எப்படி இருந்திருக்கும்?

முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம்

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்களாம், இனி முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம், பல வித எச்சரிக்கைகள் இந்திராவின் மிசா காலங்களில் அரசியல் கூட்டங்களுக்கு தடை என்றபொழுது கல்யாண வீடுகளும், காது குத்து வீடுகளும் அரசியல் மேடைகளாயின‌ இன்னும் என்னென்ன வழியில் எல்லாமோ தமிழகத்தில் அரசியல் பேசி ஆனானபட்ட இந்திராவுக்கே தலைசுற்ற வைத்த தமிழகம் இது மோடி ஆண்ட கதை என பழங்கதையினை சொன்னால் அது அரசியலா ஆகும்? வரலாற்று கதைதான் ஆகும் தமிழகம் இதற்கெல்லாம் அஞ்சாது […]

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? – ஸ்டாலின் அறிக்கை மிக சரியான கேள்வியினை எழுப்புகின்றார் ஸ்டாலின், தமிழகத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் காக்கும் பொழுது எதிர்கட்சி தலைவர் மிக பொறுப்பான கேள்வியினை கேட்டிருப்பது மிக நல்ல விஷயம் நீதி கிடைக்கும் வரை அவரின் போராட்டம் தொடரட்டும், அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழகத்தார் கடமையாகும் தன் இயலாமையின் உச்சத்தில் அப்பெண் கண்ணீர் மல்க “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், […]

சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலை

இப்பொழுதும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் எந்த கட்சியினை இழுக்கலாம் என அரசியல் செய்ய சிலர் ஆசைபடுகின்றார்களே தவிர, நடந்துவிட்ட கொடூரத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை இது நிச்சயம் சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலையின் எதிரொலியே அன்றி வேறல்ல‌ நிச்சயம் பாதிக்கபட்ட பெண்கள் தப்பி வந்ததும் அவர்கள் மனம் துடித்திருக்கும், தன் நிலையினை யாரிடாமாவது சொல்லி அவர்களை பழிவாங்கவோ இல்லை தன் மன கொதிப்பிற்கு பரிகாரம் தேடவோ அவர்கள் துடித்திருப்பார்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications