பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தில்லையாடி வள்ளியம்மை

வெள்ளையன் உலகெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் சுரங்க வேலை என சகலத்திற்கும் தமிழரையே அழைத்து சென்றான் தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் ஆங்கிலேயருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான் அப்படி ஏகபட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான், அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி. அவருக்கு ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர்தான் வள்ளியம்மை பிறந்தது இதே பிப்ரவரி 22. அவள் பிறக்கும்பொழுது […]

ஜார்ஜ் வாஷிங்டன்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என முதலில் சொன்னவர் பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது […]

அருமையான எண்ணம்

அனிதா நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் வாழ்த்துகுரியது ஆனால் அனிதா ஏதோ பயிற்சிபெற்று வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் அல்ல, மாறாக மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் அது பலிக்காமல் செத்தும் போனவர் ஆக அவர் நினைவாக ஏதும் செய்வதாக இருந்தால் ஏழை மாணவர்கள் டாக்டராக , மருத்துவ உயர்படிப்பு படிக்க உதவினால்தான் அது மிக பொருத்தமாக இருக்கும் பயன்பெறும் அம்மாணவர்களால் அனிதாவின் சாவு அர்த்தமுள்ள சாவாக இருக்கும் இதை […]

கண்துடைப்பு

தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை: பாகிஸ்தான் நடவடிக்கை கண்துடைப்பு என்றால் என்ன என்பதற்கு இதுதான் உதாரணம் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் ஹபிஸ் சயீத், அதற்கு முன்பே அமெரிக்கா 12 பில்லியன் வரை இவனுக்கு விலை வைத்து தேடிகொண்டிருக்கின்றது அப்படிபட்ட பெரும் கொடூர தீவிரவாதியினை ஒப்படைப்பது முறையா? இல்லை இனி அந்த இயக்கத்துக்கு தடை என சொல்லி அவனை பற்றி அமைதிகாப்பது முறையா? இன்னும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பற்றியோ […]

ஒப்பற்ற தியாகி கஸ்தூரிபாய்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொதுவான நியதி, ஆனால் பெரும் தியாகிகளின், போராளிகள் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது அபூர்வம் மார்க்ஸுக்கு ஜெனி போல மிக சிலருக்கே அந்த யோகம் கிடைத்திருகின்றது, அதில் ஒருவர்தான் தேசப்பிதா மகாத்மா காந்தி 13 வயதில் அவருக்கு கஸ்தூரிபாயினை திருமணம் செய்துவைத்தார்கள். கஸ்தூரி சாதாரண குடும்பத்து பெண் அல்ல, சிலப்பதிகாரத்தில் கண்ணகி போல பெரும் வியாபார குடும்பத்து வாரிசு அக்கால வழக்கபடி கஸ்தூரி கல்வி […]

தேர்தல் நேரமல்லவா

இந்த ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா, சங் பரிவார் எனப்படு சங்கிகள், மண்ணின் மதம் என சீறும் மங்கிகளுக்கு எல்லாம் சிந்து நதி என்பது பெரும் கனவு எப்படியாவது அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி இந்தியாவில் ஓடுகின்றது என சொல்லவேண்டும் என்பது அவர்களின் லட்சியங்களில் ஒன்று யார்தான் அக்கனவினை காணவில்லை? அலெக்ஸாண்டர் கண்டான், என் ராஜ்யத்தில் சிந்து ஓடவேண்டும் என படையெடுத்தான், அவனுக்கு பின் ஏராளமானோர் படையெடுத்தனர் பின் பிரிட்டிஷ் சாம்ராயத்திலும் அந்நதி ஓடியது அந்த […]

சர்வதேச அரசியல் விளையாட்டா நதி விவகாரம்?

பாகிஸ்தானை அடித்து துவைத்து வழிக்குகொண்டுவருவதை விட , ஏராளமான உயிர்கள் பலியாகி அவர்கள் அமைதியாவதை விட மிக எளிதான குறுக்குவழி உண்டு கத்தியின்றி ரத்தமின்றி அவர்களை கதறவைக்க முடியும் ஆம் பாகிஸ்தானுக்கான ஒரே மற்றும் மிகபெரும் நீர் ஆதாரம் சிந்து நதி. அது ஒரே நதி அல்ல மாறாக சட்லெஜ், பியாஸ், ராவி, ஜீலம் , சிந்து என ஐந்து நதிகள் கலந்து பாகிஸ்தானுக்குள் ஓடும் பிரமாண்ட நதி அந்நதியாலேதான் இந்நாடு இந்தியாவாகவும் அந்த நதிக்கரை மதம் […]

புல்லட்டில்

1970களில் முக ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கும்பொழுது ஒருவர் எடப்பாடி கிராம வீதிகளில் புல்லட்டில் சுற்றிகொண்டிருந்தார் அந்த சாதாரண புல்லட் சவாரிக்காரன் பின்னொரு நாளி முக ஸ்டாலினுக்கு பெரும் அரசியல்தலைவலியாக மாறுவான் என யாராவது நம்பியிருக்க முடியுமா? காலம் யாரை எப்பொழுது எங்கே நிறுத்தும் என்பது நம் கையில் இல்லை என்பதும், குறித்த நேரம் வரும்பொழுது பல தத்துவங்கள் விளங்கும் என்பதும் இதுதான் விதியின் கரங்கள் இழுக்கும் பொழுது தெரியாது, எங்கவாது நிறுத்து வைத்து அது சிரிக்கும்பொழுதுதான் தெரியும் […]

அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்

தம்பி, ஒண்ணு நுட்பமா விளங்கிகிடனும், நடக்குறது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாம போட்டி போட்டு 40 தொகுதிலியும் ஜெயிச்சிட்டா நம்மள பிரதமராக்கிருவாங்க‌ அப்புறம் தமிழர் பிரச்சினைய பேசமுடியாது, காஷ்மீர பாரு, பீகார பாருண்ணு தமிழர் பிரச்சினையில இருந்து நம்மள காலிபண்ணிருவானுக‌ ஈழவிடுதலைக்காக அண்ணன் கொடுத்த துப்பாக்கி பயிற்சி எல்லாம் நான் பாகிஸ்தான் போரில் வீணாக்கணும் அதுமட்டுமா ராஜபக்சே வந்தா கைகொடுக்கணும் கும்பிடனும், அதுதான் இவங்க திட்டம், தாங்குமா? நடக்குமா? ஈழபிரச்சினை காவேரின்னு நமக்கு ஏகபட்ட வேலை இருக்கு அதை […]

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (2)

பயப்படாம வாங்க “அண்ணே புரொகிராம் சொல்லுங்க.. இப்போ இந்திய கம்யூனிஸ்ட்கிட்ட பேசபோறோம் 3 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் அப்புறம் 3.30க்கு வாசன் வருவார் அப்புறம் 4 மணிக்கு மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் தொகுதி புடுங்க வருது அப்புறம் 5 மணிக்கு திருமா வருவார், அவரோட மல்லுகட்டனும் அப்புறம் 6 மணிக்கு வைகோ வருவார், அவருக்கும் தொகுதி கொடுக்கணும்.. அப்புறம் அதுக்கப்புறம் நம்ம கட்சிக்குள்ள சண்டை வரும், கனிமொழி குரூப் , தயாநிதி குருப்புண்ணு அடுத்த பங்கீடு அண்ணே அதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications