பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டிய பேரோளி பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது அதில் பத்மினி செல்லமாக பப்பி, அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில்  14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள் அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி […]

சில்க் ஸ்மிதா

பேசா படங்கள் வந்து பின் தமிழில் பேசும்படங்கள் வந்தபொழுது தமிழக சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னி தவமணி தேவி (அவர் இலங்கை தமிழச்சி) அவரை குறிப்பிடும்பொழுது அக்கால சில்க் ஸ்மிதா என சொல்லும்பொழுதே புரியும் தமிழ்சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அழியா இடம். ஆந்திராவின் ஏழை குடும்பத்தில் பிறந்தவர், பலவகை தோல்விகளுக்கு பின், திருமண தோல்விக்கும் பின்னர்தான் ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு வந்தவர், பின் நடிகை ஆனார். அவரை சினிமாவிற்கு கொண்டுவந்தது யார் என ஆளாளுக்கு தன்னை காட்டுவார்கள். […]

சிதறல்கள்

September 22, 2018 எல்லையில் இஸ்ரேலிய பாணியில் மின் அலை வேலி அமைத்துவிட்டோம் இனி ஒரு பயலும் ஊடுருவமுடியாது என்றார் ராஜ்நாத் சிங் ஆனால் பாகிஸ்தானியரோ அவர்கள் போக்கில் வந்து ஒரு ராணுவ வீரரையும் சில போலிஸ்காரர்களையும் கொடூரமாக கொன்றிருக்கின்றார்கள் ஆக இவர்கள் மின் வேலி எல்லாம் சும்மா கட்டுகதை, தமிழிசை போலத்தான் உச்ச தலமை வரை பேசிதிரிகின்றார்கள் மின்வேலி அமைத்துவிட்டோம் வந்துபார் என சீண்டியது இவர்கள்தான் வேறுயாருமல்ல‌ நாட்டுக்காக உயிரை நீத்த அந்த தியாகிகளுக்கு அஞ்சலி […]

போர்கப்பல் எம்டன்

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

கில்லாடி கிளைவ் : 10

கில்லாடி கிளைவ் : 10 நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம் திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான் அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் […]

சிதறல்கள்

மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது மணி நிச்சயம் அர்ஜூனன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் தேரோட்டிகள் வசனகர்த்தாக்களும் கதை விவாதக்காரர்களும் என்பதுதான் விஷயம் அப்படி பாலகுமாரன், சுஜாதா என இருந்தவரை மணியால் நினைத்த குறியினை அடிக்க முடிந்தது, காரணம் தேரோட்டிகள் அப்படி மிக நுணுக்கமான ரசனையாளர்களாக அவருககு உதவினர் ஆனால் அவர்கள் இல்லா மணி தடுமாற ஆரம்பித்தார், அது ராவணா, கடல், ஒகே கண்மணி இந்த படுமொக்கையான காற்றுவெளியிடை வரை தெரிந்தது நல்ல தேரோட்டி கிடைக்காவிட்டால் […]

ஈழ அழிவுக்கு காரணம் யார்

ஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள் இதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார் ஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் […]

அயன் லேடி

சினிமா ஒன்றே மூலதனமான கட்சி அதிமுக, ஜெயா இல்லா நிலையில் இனி பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு சினிமா அடையாளம் தேவை அதற்காக பழனிச்சாமியோ, பன்னீரோ மேக் அப் போட்டு ராமசந்திரன் போல ஆடினால் நன்றாயிராது, ஜெயக்குமாருக்கும் ரஜினி படத்தின் வில்லன் கேரக்டர் கிடைக்கவில்லை இதனால் என்ன செய்யலாம் என பரிதவித்தவர்களுக்கு ஜெயாவின் கதையினை சினிமாக எடுத்து பாராளு மன்ற தேர்தலையொட்டி ஓடவிட்டால் என்ன? என்ற எண்ணம் வந்தாயிற்று இதனால் ஜெயா வாழ்க்கை அயன் லேடி என […]

சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான் ————————————————————————————————————————————– டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்   பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: […]

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம்

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1858ம் ஆண்டு இதே நாளில் நடந்தது முடிந்தது என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications