பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகின் மூத்த மொழியானது தமிழ் என்பதில் இந்தியனாக பெருமை அடைகின்றேன் : மோடி

உலகின் மூத்த மொழியானது தமிழ் என்பதில் இந்தியனாக பெருமை அடைகின்றேன் : மோடி முன்பெல்லாம் அகில இந்திய தலைவர்கள் மேல் ஒரு குற்றசாட்டு உண்டு, தமிழ்நாட்டை தமிழர் வரலாற்றை புறக்கணிக்கின்றார்கள் மண்மூட பார்கின்றார்கள் என ஏக இம்சைகள் மோடி இப்பொழுதெல்லாம் அடிக்கடி தமிழ்நாட்டை மேற்கோள் காட்டுகின்றார் சோழர் காலம், பாரதியார் அதை தொடர்ந்து உலகின் மூத்தமொழி என தமிழை ஒப்புகொள்ளுதல் என தமிழகத்தோடு நெருங்குகின்றார் இப்படி நல்ல விஷயங்களை அவர் தொடர வாழ்த்துக்கள் வழக்கமான காங்கிரஸ் கோஷ்டி […]

ரக்‌ஷா பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

இன்று அன்னை தெரசா பிறந்தநாள்

இன்று அன்னை தெரசா பிறந்தநாள், இப்பொழுது பதிவு எழுதியவுடன் சங்கிளுடன் மல்லுகட்ட வேண்டும் அன்னையின் தொன்டை பற்றி சொன்னால் “ஏ சதிகாரா, நீ கிறிஸ்தவன் அவள் கிறிஸ்தவச்சி, மதமாற்றிய கிறிஸ்தவச்சி” என சங்கிகள் பொங்குவார்கள் திமுகவினருடன் சண்டை முடிந்த நிலையில் இன்னும் சில மணிதுளிகளில் சங்கிகளுடன் அடுத்த யுத்தம் தொடரும் இன்று அவர்களோடு மல்லுகட்டு என எம்பெருமான் இட்டமுடன் எழுதியிருக்கின்றான் கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?, “ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு […]

உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி

நீ நிலையானவன் அல்ல, உன்னை நம்ப முடியாது. ஒரு நேரம் ஒன்றை சொல்கின்றாய் மறுநேரம் மறுக்கின்றாய் நீ குழப்பவாதி என ஏகபட்ட உள்பெட்டி செய்திகள் ஒரு விஷயத்த்தை பல கோணங்களில் பார்ப்பதால் வரும் சிக்கல் இது, எம் மனநிலை அப்படித்தான் உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி, அது உண்மையும் கூட‌ அப்படி ஒரு முகத்தை சொன்னால் புகழ்வதும், இன்னொரு முகத்தை சொன்னால் திட்டுவதும் அவர்கள் பாணி அதற்காக எம் […]

ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்

மிஸ்டர் சைமன், நீர் இல்லாத பொய்களை அவிழ்த்துவிட உமக்கு பதில் சொல்லித்தான், உமது பொய்முகத்தை கிழிக்கத்தான் எழுதினோம் அப்பொழுது நீர் கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொட்டிருந்தீர் உமது பொய்களை கிழிக்கும் பொழுது இந்த திமுகவினர் எல்லாம் ஓடிவந்து ஆம், அப்படித்தான், நன்றி நன்றி என சொல்லித்தான் சேர்ந்தார்கள் இப்பொழுது நீர் ஓய்ந்துவிட்டீர், இருக்கின்றீரா இல்லையா என்பதே தெரியவில்லை, உலகின் அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு ஓடிவிட்டீர் இதுகளோ இப்பொழுது எம்மை சுற்றி கொண்டு விடமறுக்கின்றது, சில விஷயங்களை சொன்னால் உம்மை […]

உண்மை இப்படி இருக்க ….

உண்மை இப்படி இருக்க , துபாய் அரசர் 400 கோடியோடு கொச்சி கடலில் நிற்கின்றார் ஒருவன், அபுதாபி சுல்தான் 300 கோடியினை கையில் வைத்து கொண்டு இந்தியா வாங்கவில்லை என அழுதுகொண்டிருந்தார் என்றான் இன்னொருவன் ஒரு சிலர் “ஏ சுல்தானே மோடியினை மீறி எங்களிடம் கொடுங்கள்” என கேட்குளவு நிலமை சென்றது இப்பொழுது அவர்களை எல்லாம் காணமுடியாது, அந்த பயல்கள் பூராவும் இடுக்கி அணைக்கு அடியில் சென்று பதுங்கிவிட்டான்

இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார் பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் […]

ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை : கீர்த்தி சுரேஷ்

குதிப்பு மீனும் குஷ்பு படமும் கிடைத்திருப்பதால் சங்கம் யுத்த களத்தை விட்டு ஓய்விற்கு செல்கின்றது அடேய் ஒரு நாளாவது , அதுவும் மலையாளிகளின் நல்ல நாளிலாவது பகுத்தறிவிற்கு ஓய்வு கொடுக்க கூடாதா? ராஜராஜசோழன் உண்டு ஆனால் அவன் கோவில்கட்டி வணங்கிய சிவன் கிடையவே கிடையாது என்பதெல்லாம் என்ன வகை பகுத்தறிவு? நாம் தான் ஆத்திகவாதி சரி , நாத்திகவாத கட்சியின் திமுக தலமை ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்கின்றார், அவரிடம் அந்த பகுத்தறிவு கேள்விகளை கேட்டால் என்ன? […]

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார் ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார் ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள் இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்? மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை […]

முருகபெருமானோடு கலந்துவிட்ட கிருபானந்த வாரியாருக்கு அஞ்சலிகள்

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார் பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான் அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications