பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன?

“தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன? ஆனாலும் இந்த பஜனை கோஷ்டி அட்டகாசத்தை தாங்க , எதையும் தாங்கும் இந்த இதயத்தாலே முடியவில்லை இதற்கு மேலும் கொடுமையாக‌ இந்த மானாட மயிலாட கோஷ்டி வேறு வந்துவிடும் என சிலர் பயமுறுத்துகின்றான், மனம் கலங்குகின்றது தம்பி நீயும் நானும் எவ்வளவு எழுதினோம், நான் எழுதிய “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?” எனும் நூலையோ , நீ எழுதி தள்ளிய எத்தனையோ புத்தகங்களில் ஒன்றையோ அப்பக்கம் யாரும் வாசித்து கண்டாயா? மாறாக தம்பிகள் […]

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல ரஷ்ய கோள்களும் அல்ல‌ இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை

இங்கு இந்துக்களை விமர்சனம் ஏகபட்ட திரைப்படம் வரலாம், கட்டுரைகள் வரலாம்,அதெல்லாம் ‍பகுத்தறிவு ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு கமலஹாசனும், மணிரத்னமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌ சகிப்புதன்மை என்பது எங்கே இருக்கின்றது?? இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை என்பதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை இந்துக்கள் ஓரணியாக திரள முதலில் வித்திட்டவன் பிரிட்டிஷ்காரன் அவனே இந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினான், விளைவு நாடு உடைந்தது அதன் பின் கலவரங்களும் காந்தி கொலையும் அதை மூடி […]

அண்ணே.. கேரள வெள்ள நிவாரணம் மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு

அண்ணே நீங்க சங்கி ஆயிட்டீங்க, கேரள வெள்ளத்துல மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு, அதெல்லாம் அவங்க புட்டு சாப்பிட கூட காணாதுண்ணே அப்படியா ஆமாண்ணே வெறும் 500 கோடி கொடுத்துட்டு ஓடிபோறது திராவிட விரோதம், தென்மாநில வெறுப்பு, வடக்கு வளர தெற்கு தேய செய்யும் இந்துத்வா வெறி ஏன் அப்படி இங்க பாஜக இல்லங்கிறதுக்காக மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குது சரி வெள்ளத்துல கேரளாவுல எதெல்லாம் அழிஞ்சிருக்கு நிறையாண்ணே, ஏகபட்டது விமான நிலையம்? அது மூழ்கிருச்சின்னே, […]

விசுவாசம் என்றொரு அஜித் படம்

விசுவாசம் என்றொரு அஜித் படம் வரபோகின்றதாம் ஆளும் தாடியும் பார்க்கும்பொழுது முடி சாய விளம்பரத்திற்கு வந்திருப்பது போலவே இருகின்றது இது தாடிபடங்கள் எல்லாம் தோற்கும் காலம், ரஜினிக்கு 2 படங்கள் அப்படித்தான் ஆனது. அஜித் என்பவருக்கு அது வாய்க்காமல் இருந்தால் நல்லது பொதுவாக தமிழ்பெயர் இல்லா படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது இவர்களோ விஸ்வாசம் என வடமொழி பெயரை அப்படியே வைத்திருக்கின்றார்கள், அது தமிழ்பெயர் அல்ல‌ இதற்கு வரிவிலக்கு கொடுக்கபட்டால் அபத்தமான விதிமீறல் என அரசுக்கு சொல்லிகொள்கின்றோம் மற்றபடி […]

ஏக்நாத் ராமகிருஷ்ன ராணடே

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும் அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம் விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் […]

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை : அழகிரி வேதனை

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை அழகிரி வேதனை அது இப்பொழுதுதான் தெரிந்ததா? கலைஞருக்கு ஏதும் அழகிரி செய்வதாக இருந்தால் கட்சி பக்கம் வராமல் இருந்தால் போதும் கலைஞர் பாணியில் சொல்வதாக இருந்தால் “பழம் கிடைக்கட்டும் சுளைகளை பின்னர் பார்த்துகொள்ளலாம்” Kavignar Thamarai அவர்களை குறித்து துபாய் பாலா கடும் அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கின்றான் கவிஞர் பெண்மனி அவனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி , வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் […]

தீரா சோகத்துடன் கல்லறையில் இருந்து : அண்ணா

தம்பிக்கு, என்னை நீங்கள் எல்லாம் மறந்திருக்கலாம், நான் உங்களையோ அருமை திராவிடத்தையோ மறப்பவன் அல்ல, சொர்க்கத்தில் இருந்தும் உங்களையே நினைப்பவன் நான் தான் அண்ணா, திராவிடத்தின் அணைகட்டி உங்களை வாழ வைத்தவன், படிக்கட்டாய் உங்களை உயர்த்திவிட்டவன் பெரியாரை விட்டு பிரியும்பொழுது எப்படி அழுதேனோ அப்படியே இப்பொழுது என் கல்லறை முன்னின்று அழுது கொண்டிருக்கின்றேன், துடித்து கொண்டிருக்கின்றேன் தம்பி, இந்த திமுக எனும் மாபெரும் இயக்கம் எப்படி உருவாயிற்று? இதில் உடல் பொருள் ஆவி என சகலமும் கொடுத்த […]

தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது. மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். இது நிச்சயம் நெஞ்சை நெகிழசெய்யும் செய்தி, இத்தேசம் காலம் காலமாய் எதிர்பார்த்திருந்த செய்தி இம்மாதிரி நல்ல விஷயங்கள், மத ஒற்றுமைக்கு முன்னுதரானமான விஷயங்களை இந்தியனாக செய்பவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம் என்பதை […]

காவேரியில் நீர் வரவில்லை

காவேரியில் நீர் வரவில்லை என பலர் செய்த ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமல்ல, ஒரு சிலர் கொளுத்தபட்டார்கள், ஐபில் அரங்கம் முன் காவலர்களே தாக்கபட்டார்கள் இன்னும் இந்தியா தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது, ஐநாவே தீர்வு, காஷ்மீர் ஆகின்றது இந்தியா என துடித்தார்கள் இதோ காவேரி ஆடிமாதம் 3ம்முறை பொங்கி ஆயிற்று, பொங்கி என்ன சொல்லியிருக்கின்றது? பொங்கி வந்த காவேரி இங்கு நடந்திருக்கும் சீரழிவினையும் மகா மோசடிகளையும் படம் பிடித்து காட்டிவிட்டு கடலுக்கு சென்றாயிற்று ஆம் கால்வாய்கள் தூர்வார படவில்லை, பாலங்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications